google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இப்படியும் ஒரு பரதேசி கவிஞர்!

Saturday, February 02, 2013

இப்படியும் ஒரு பரதேசி கவிஞர்!


மலைகளில் பெய்யும் மழையால் 
பொங்கி ஓடும் வெள்ளம் 
அதுவும்  கட்டுக்கடங்காமல் ஓடும் 
காட்டாறு வெள்ளம்....
அணை கட்டி தடுக்கவில்லையா...?
அத்தனையும் வீணே!

பல்லாயிரம் ஹெக்டேர் 
பாசன நிலங்கள் 
நீரின்றி வாடாதிருக்க...

அன்றைய முதல்வர் 
கர்மவீரர் காமராஜர் 
கட்டிய அணைகள் ஏராளம்...


























அதில் ஒன்றுதான் 
வைகை அணை....
விவசாயிகளின் 
உயிர்காக்கும் 
வைகை நீர்த்தேக்கம்.

சிதறி வரும் காட்டாறுகளை 
சீர்பட தடுத்து நிறுத்தியதால் 
அணையை சுற்றி 
தேங்கிய வெள்ளத்தால் 
பதினைந்து கிராமங்கள்
அத்தனையும் கரடு முரடு மண் மேடுகள்...
மொத்தம் வாழ்ந்ததோ..
அய்ந்து நூறு நபர்கள் வராது..
ஆயினும் மூழ்கிவிடும் ஆபத்தால் 
அவர்கள் எல்லோருக்கும் 
அருகிலிருந்த வேறு ஊர்களில் 
ஈடு கொடுத்து வாழவைத்தது அரசு

உண்மைதான் 
பரதேசிகளாக 
அந்த கிராம மக்கள்......

ஆனால் 
இன்று வரை ஒரு கவிஞர் 
அவர் எழுதும் கவிதைகளில் 
அதை நினைத்தே 
கண்ணீர் சிந்துகிறார்...
பேசும் மேடைகளில் 
அதைத்தான் புலம்புகிறார்...

ஏதோ 
தங்கம் விளைந்த பூமியை 
தவறவிட்டதாக...

இப்படியும் 
ஒரு பரதேசி கவிஞர்!

பாவம் அவர் என்ன செய்வார்?
எல்லாம் பணம் படுத்தும் பாடு!

பணத்துக்காக பாட்டெழுதும் 
பரதேசி கவிஞர்கள் கூட்டத்தில் 
மக்கள் நலன் என்ன விலை?
என்று கேட்கும் பெரிய கவிஞர்      

 ................பரிதி.முத்துராசன்
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1