google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அதிதி-சினிமா விமர்சனம்

Sunday, June 29, 2014

அதிதி-சினிமா விமர்சனம்

ஹாலிவுட் ‘Butterfly on a Wheel’ படம் மாலிவுட்டில் Cocktail என்று சக்கபோடு போட்டு கோலிவுட்டில் அதிதி-யாக மாறி வந்துள்ள  கில்மா  மாதிரி தெரியாத உப்புமா திகில் திரைப்படம்.....

தான் வேலை செய்யும் நிறுவனத்தில் ப்ரொஜெக்ட் மானேஜராக  இருக்கும் மதியழகனுக்கு (நந்தா)  தொழில் ரீதியாகவும் நிறைய எதிரிகள் 

ஒருநாள் மதி  தன் மனைவி வாசுகி (அனன்யா) யுடன் காரில் போகும்போது அறிமுகமில்லாத ஒருவனுக்கு (நிகேஷ் ராம்)  லிப்ட் கொடுக்கிறார்கள் 

சிறிது நேரம் சிரித்து பேசிக்கொண்டு வந்த வழிப்போக்கன்  திடிரென்று துப்பாக்கி முனையில் மதி-வாசுகி தம்பதியரை மிரட்டுகிறான் அவர்களது ஆசை மகள் பவி கடத்தப்பட்டதாகவும் அவன் சொல்கிறபடி அவர்கள் கேட்கவில்லை  என்றால் அவர்களது செல்லமகள் கொல்லப்படுவாள் என்று.......

அழையாத விருந்தாளி(அதிதி)யாக வந்தவன்  தம்பதியரை பாடாய் படுத்துகிறான் மதியின் வங்கிகணக்கில் உள்ள மொத்த பணத்தையும் எடுக்க வைத்து தீயிட்டு கொளுத்தி ஆற்றில் வீசுகிறான்   மதி  வேலை செய்யும் கம்பெனி ரகசியங்களை எதிரி கம்பெனிகளுக்கு தெரியப் படுத்துகிறான்   

கடைசியாக மதியின்   முதலாளியை மதியை வைத்தே  கொல்லவும் உத்தரவிடுகிறான் ஆனால் அங்கே மதிக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது 
அவனது கள்ளக் காதலியின் உருவத்தில்........

வழிப்போக்கனாக வந்த அதிதி ஏன் மதியை இப்படி கஷ்டப்படுத்தினான்?  என்பதை திரையில் காணுங்கள்

மற்றபடி நடிகர்கள் நடிகைகள் நடிப்பை விட திறமையான  திகிலூட்டும் திரைக்கதையாலும் நச் வசனங்களாலும்  இயக்குனர் பரதன் அதிதி படத்தை உயிரோட்டமாக காட்டுகிறார் ஆனாலும் கள்ளக் காதலை மையமாக வைத்து வந்துள்ள  அதிதி திரைப்படம்.... தமிழுக்கும் ஓர் அழையாத விருந்தாளி

தம்பி ராமையாவின் காமெடி காட்சிகள் மற்றும் குத்துப்பாட்டு படத்தின் வேகத்தடைகள் பின்னணி இசை பாடல்கள் ஒளிப்பதிவு எதுவும் அதிதிக்கு உதவவில்லை  

அதிதி-திகில் பட விரும்பிகளுக்கு மட்டும்

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1