google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை காசு கொடுத்து வாங்கினாரா?

Saturday, June 28, 2014

விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை காசு கொடுத்து வாங்கினாரா?


குமுதம் வாரஇதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் உண்மையில் அஜித்-தான்  அதிக வாக்குகள் பெற்றதாகவும் விஜய் அதை காசு கொடுத்து பறித்துக் கொண்டார் என்றும் சமுக வலைதளங்களில் இணைய யுத்தம் நடக்கிறது....

உண்மையில் நமது பிளாக்கில் வைத்த கருத்துக் கணிப்பில் கூட விஜய் அதிக வாக்குகள் பெற்று குமுதம் வாக்கெடுப்பு சரியே என்று தீர்ப்பளித்தார்கள்....

பொதுவாக கோலிவுட் நடிகர்களில் விஜய்-அஜித் இருவர் பற்றிய செய்திகளே அதிகம் வாசிக்கப்படுவதால் வலைதளங்கள்,பத்திரிகை ஊடகங்கள் அவர்கள் பற்றிய செய்திக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன

முன்பு அரசியல்வாதிகள்தான் இப்படி தூற்றுவார்கள் தேர்தல்காலங்களில் சில கட்சிகள் தங்கள் பணபலத்தால் பத்திரிகைகளை தங்களுக்கு சாதகமாக கருத்துக்கணிப்பு வெளியிட செய்து மக்களை குழப்புவார்கள் அதனால் அவைகள் தடை செய்யப்பட்டன

சினிமாவாதிகளும் இப்படிசில பத்திரிகைகள் வலைதளங்கள் நடத்தும் கருத்துக்கணிப்புகளை ஆதரிப்பது..........இனி சமுதாய நலனை முன்னிட்டு சினிமா பிரபலங்களைப் பற்றி கருத்துக்கணிப்பு வெளியிட அரசு தடை செய்ய வேண்டும்  இதனால் சமுதாயத்தில் சினிமா ரசிகர்களால் எழும் பிரச்சனை குறையும் 

அப்படியே......
சினிமா நடிகர்கள் இனி சூப்பர் ஸ்டார்,தல,இளைய தளபதி...போன்ற  பட்டப் பெயருடன் அழைக்கப்படுவதையும் தடை செய்யவேண்டும்

சினிமா நடிகர்கள்.......
முதலில் திரையில் நடிக்கிறார்கள் ...பிறகு சமுதாயத்தில் நடிக்கிறார்கள் கடைசியில் நாட்டை ஆளும் ஆசையில் துடிக்கிறார்கள் 


சி.பி.செந்தில்குமார்@senthilcp 
என்னை சூப்பர் ஸ்டாராக தேர்ந்தெடுத்த குமுதத்திற்கு நன்றி _ விஜய் # உண்மையை உலகுக்கு உணர்த்திய தினமணி க்கு நன்றி


நான் சன்னியாசி © @iammoorthy_p 

செவுத்துல ஒழுங்கா புடிச்சி பிஸ் அடிக்க தெரியாதவனுக்கு எப்படிடா சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைக்கும்னு நினைச்சன். விளக்கம் கிடைச்சிருச்சி

நாகசோதி நாகமணி @nagajothin
என்னை சூப்பர் ஸ்டாராக தேர்ந்தெடுத்த குமுதத்திற்கு நன்றி -விஜய்! # கடைசியில் அது பவர் ஸ்டார் என்று உணர்த்திய குமுதத்திற்கு மறுபடியும் நன்றி!


balaji@arunbalaji006 h
சூப்பர் ஸ்டார் யார் ? தமிழ் சினிமா வின் பல்வேறு மூட பழக்கங்களில் இதுவும் ஒன்று

புலிக்குட்டி தம்பி @Onlyappu 
யோவ் போயா..அதல்லா முடியாது நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டாரு..போங்கயா வெப்சைட்ல போட்டதெல்லா நான் நம்பபட்ட..முண்டாசுபட்டி முனிஷ்காந்த் மூமண்ட்.

சிவா :)@siva_sankar 
யாரு,மொட்டமாடி கல்பனாவா? ஏம்மா அந்த வீடே உன்னது இல்லையாமே? #நடிகர் விஜய்யும் குமுதமும் சேர்ந்து நடத்திய அடுத்த சூப்பர் ஸ்டார் நாடகம் அம்பலம்

வக்கீல் வரிப்புலி ்@karaiyaan 
குமுதம் + விஜய் -> சூப்பர் ஸ்டார் பட்டம். இததான் சொந்த செலவுல சூனியம்ன்னு சொல்றாய்ங்களோ!

@am pasupathi@pasupathicivil 
கேட்டிருந்தால் சூப்பர் ஸ்டார் பட்டம் என்ன, எங்க 'தல', 'தலை'யே கொடுத்திருப்பாரேடா...! இப்படி அல்ப்பமா நடந்துகிட்டீங்கலேடா அணில் குஞ்சுகளா."

ராஸ்கோலு@RazKoLu 
ஏம்பா ஏ நாட்ல போராட எத்தனையோ பிரச்சன இருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வாங்னதுக்கெல்லாமா போராடுவாங்க. உஸ்ஸ்ஸ்

நல்லவன் @Paasakkaran 
குமுதம் சூப்பர் ஸ்டார் பட்டம் பயபுள்ள பொய் சொல்ட்டான் போல ஏன்டா ஊருக்குள்ள இப்பிடித்தான் சொல்லீட்டு சுத்துறியா?

நையாண்டி நைனா@naiyaandinaina 
ஆனா உலகத்திலேயே சூப்பர் ஸ்டார் பட்டத்கு அத்தாரிட்டியே குமுதம் தான்னு நம்பறான் பாரு, அவனோட மூளை இங்க இருக்க வேண்டிய மூளையே அல்ல...
பட்டம் விற்கப்படும்
நாட்டி நாரதர்®@mpgiri 
இங்கு நல்ல சூப்பர்ஸ்டார் பட்டம் விற்கப்படும்


• »புரட்சி புயல்« •@itskabi 
அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று குமுதம் அறிவித்ததை தொடர்ந்து,விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். 

அ ல் டா ப் பு - @altaappu 
அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் விஜய்க்கு போனதால், இன்று முதல் ரஜினியை 'இளைய தளபதி ரஜினி' என அன்போடு அழைக்கப்படுவார்


  கர்ணா @karna_sakthi 
நடிகனுங்க கிட்ட மைக் குடுத்து என்னத்தையா பேச சொல்றிங்க போய் பொழப்ப பாருங்கன்னு சொன்ன கவுண்டமணி தான்யா நிஜ சூப்பர்ஸ்டார்
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1