google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி-சினிமா விமர்சனம்

Friday, August 22, 2014

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி-சினிமா விமர்சனம்


குடும்பம்,காதல்,சென்டிமென்ட்.. கலந்த காமெடிக் கதையுடன்  21-க்கு மேற்பட்ட  சிரிப்பு நடிகர்கள் நடித்த..... ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படம்  உண்மையில் நகைச்சுவை சினிமாப் பிரியர்களுக்கு நல்ல விருந்து 

25 ஆண்டுக்கு முந்திய கருப்பு வெள்ளை பிளாஸ் பேக் காட்சியாக.... தவறான பதில் சொன்ன சிறுவன் சிகாமணியை ஓட ஓட விரட்டி  அடித்த பள்ளிக்கூட ஆசிரியரிடம் அவனது பணக்கார தந்தை (மறைந்த நடிகர் காதல் தண்டபாணி) இனிமேல் பள்ளிக்கூடம் பக்கம் தன மகனை அனுப்ப மாட்டேன் என்று சபதம் செய்வதுபோல் காமெடியாக துவங்குகிறது....

எதுவும் எழுத-படிக்க-எண்ணத் தெரியாதவராக இருந்தாலும்   சித்த  மருத்துவத்தில் சிறந்த நிபுணராகவும் அவரது குடும்பத்தில் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்தியராக  சிறந்து விளங்குகிறார்  சிகாமணி (பரத்

அவரை ஏமாற்றிப் பிழைக்கும்  நண்பர்கள் (சௌந்தர்,கொட்டாச்சி, படவா கோபி) மத்தியில் சிகாமணி தன சக வைத்தியர்கள் பால்பாண்டி (கருணாகரன்), சிவ கார்த்திகேயன் (இமான் அண்ணாச்சி) சூரி (மனோபாலா)... இவர்களுடன் வெற்றிகரமாக சித்த வைத்திய சாலையை நடத்துபவருக்கு ஒரு படித்த பெண்ணை மணக்க  திருமண தரகர் விஜய் சேதுபதி (சிங்கம் புலி) மூலம் பல பெண்களை  தேடியும் கிடைக்காததால்.............


சிகாமணியே தனது நண்பன் பால்பாண்டியுடன் நம்ம பழைய காதல் சினிமாக்களில் வரும் ஹீரோ போல் ஒரு பொறியல் கல்லூரி வாசலில் போய் நின்று டாவ் அடித்து....

 கடைசியில் நம்ம நாயகி நந்தினியை (நந்திதா) படித்த வாலிபர் போல் நடித்து காதலித்து அவளது தந்தை சிலம்பம் சின்னத்துரை (தம்பி ராமையா) யை சந்திக்க, அவரும்  தவறுதலாக நம்ம சிகாமணியை MBBS டாக்டர் என்று நினைத்து திருமணத்துக்கு சம்மதிக்க.....
படிக்காத சிகாமணிக்கும் படித்த நந்தினிக்கும் திருமணம் நடக்கிறது  

இதை அறிந்த நம்ம சிகாமணியை ஏய்த்துப பிழைக்கும் நண்பர்கள் கூட்டமும்  அவரால் பாதிக்கப் பட்ட லோக்கல் ரவுடிகள் கூட்டமும் சிகாமணியின்  திருமண வாழ்க்கையை சீர்குலைக்க நினைக்கிறது 

அது நடந்ததா...? என்பதையும்  அதைத் தொடர்ந்து வரும் காமெடி ட்விஸ்ட்களையும்  திரையில் காணுங்கள்
 
இப்போதைய காலகட்டத்தில் நகைச்சுவை உணர்வு உள்ள லைட் வெயிட் கதையே ரசிகர்களை சென்றடைகிறது என்பதை அறிந்த இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தர் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் அதை வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளார் 

சில நேரங்களில் அவரது லாஜிக் இல்லாத அதிகப்படியான வசனங்கள்,அளவுக்கு மீறிய காமெடி நடிகர்களை கையாளும் திறன் இல்லாதது .....கதையை தடம் புரண்டோடச் செய்கிறது 

நடிகர் பரத்...... அவருடைய 25 வது படம் என்ற முக்கியத்துவமாக தனது அப்பாவித்தனமான பாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்துள்ளார் 

நந்திதா.... தனது வழக்கமான நடிப்புடன் பாடல்களில் கவர்ச்சி மிளிர மின்னுகிறார் தம்பி ராமையா.... மற்ற நடிகர்களை பின்னுக்கு தள்ளி ஆயினும் அவரது ஓவர் ஆக்டிங் வார்த்தைப் பிரயோகம் சில நேரங்களில் சலிப்பூட்டுகிறது 

பறந்துவரும் துப்பாக்கி புல்லட்கள், இரத்தம் சிதறும் அருவா வெட்டுகள்,ஜொள்ளு வடிக்க வைக்கும் கவர்ச்சி குத்துக்கள் நிறைந்த கோலிவுட் திரையுலகில்   இவைகள் எதுவும் இல்லாத நகைச்சுவை மிளிரும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணியை ஒருமுறை குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம் 

சித்த வைத்தியத்தின் பெருமையையும் படிப்பின் அருமையையும் காமெடி கலந்த ஆரோக்கிய லேகியமாக கொடுத்த  இயக்குனரையும் பாராட்டலாம்.....


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1