google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அஞ்சான்-சினிமா விமர்சனம்

Friday, August 15, 2014

அஞ்சான்-சினிமா விமர்சனம்

டெல்லி பிராய்லர் சிக்கனில் அதிகப்படியான ஆன்டிபயாடிக் இருப்பது போல் லிங்குசாமியின் அஞ்சான் படத்தில்  கதையைத் தவிர அதிகப்படியான நடிகர்கள்,தேவைக்கு அதிகமான ட்விஸ்ட்கள், பிளாஷ்பேக்,சண்டைகள், கவர்ச்சி,மசாலா... 

வழக்கமான  நண்பன் மரணத்திற்கு பலி வாங்கும் கதையை கேங்ஸ்டார் மசாலா தடவி லிங்குசாமி காரசாரமாக படைத்த படம்.....அஞ்சான் சூர்யாவின் ரசிகர்களுக்குகூட  சிலருக்கு பிடிக்கும் பலருக்கு திகட்டும்  

கன்னியாகுமரியிலிருந்து  கிருஷ்ணா (சூர்யா) தனது அண்ணன் ராஜு என்ற ராஜு பாயை (இன்னொரு சூர்யா) தேடி மும்பாய் வருவதுபோல் துவங்கும் படம்....

யார் இந்த ராஜு பாய்....? மும்பாய் இளம் தாதா சந்த்ரு (வித்யுத்)வின் நண்பனும் கையாளுமான ராஜு பாய்  எதையும் சாதுரியமாய் சாதிக்கும் அஞ்சா நெஞ்சன்   கமிஷனர் மகள் ஜீவா (சமந்தா)வையே  அசால்டாக கடத்தி  காதல் பண்ணும டாப்டக்கர் 

மும்பாய் பெரிய தாதா இம்ரான் பாய் (மனோஜ் பாஜ்பாய்)வுடன் ஏற்படும் மோதலால்   சந்துருவும் ராஜு பாயும்  தந்திரமாக கொல்லப்படுகிறார்கள் 

இறந்து போனதாக நினைக்கப்படும் ராஜு பாய் மீண்டும்  ஒரு ட்விஸ்ட்வுடன் உயிர்த்தெழுந்து துரோகிகளையும் எதிரிகளையும் எப்படி பலி வாங்குகிறான் என்பதை பிளாஷ்பேக் ட்விஸ்ட்களுடன்  சமந்தா சமந்தாயில்லாத சமந்தா காதலுடன் லிங்குசாமி படம்காட்டுவதே அஞ்சான்.........

லாஜிக்  இல்லாத திரைக்கதை, இத்துப்போன நண்பனுக்காக பலிவாங்கும் மூலக்கதை, ஓவர் டோஸ் கவர்ச்சி, அழுகுணி அலப்பறை சண்டைக்காட்சிகள் இப்படி  நிறைய கசமுசாக்கள் காட்சிகளால் லிங்குசாமி கிணறு தோண்ட பூதம் வந்த கதை 

சூர்யா தனக்கு கிடைத்த இரண்டு வேடங்களில் மாறுபட்ட நடிப்பை காட்டி உள்ளார் ஆனால் கவுதம் மேனனை ஒதுக்கிய பாவம் லிங்குசாமியால் பலிவாங்கப்பட்டுள்ளார் சமந்தா.....பாடல்களில் அரைகுறை ஆடைகளுடன் ஆடுவது கவர்ச்சி போய் அலர்ச்சி வருகிறது நமக்கு 

மும்பாய் டாக்ஸி டிரைவராக பரோட்டா சூரி காமெடி செய்கிறார் நமக்குத்தான் சிரிப்பு வரவில்லை பிரமானந்தம் தாதா பாடகராக வந்து ஒரு காட்சி சிரிக்க வைக்க முயல்கிறார் மற்றபடி நிறைய வில்லன் நடிகர்கள் நிறைய இந்தி தாதாக்கள் வருகிறார்கள் செந்தமிழ் பேசுகிறார்கள் துப்பாக்கி சண்டை போடுகிறார்கள் உடன் செத்தும் போகிறார்கள்

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கிர்ர்ர்.....புர்ர்ர்ர்....டர்ர்ர்ர்ர்ர் பாடல்கள் பேங் பேங் பேங் இரைச்சல் சூர்யா பாடிய பாடல் ஏக் தோ தீன்.....கேட்பதைவிட படத்தில் வண்ணமயமான காட்சியாக சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் மிளிர்கிறது 

அஞ்சான் படத்தில் பிரிந்தா சாரதியின்  பன்ச் வசனங்கள்......மாஸ் "நான் சாகுறதா இருந்தாலும் அத நான் தான் முடிவு பண்ணனும், நீ சாகுறதா இருந்தாலும் நான் தான் முடிவு பண்ணனும்". ரோபில் கலக்கல் 

 தேவையில்லாத காட்சிகளை நீக்கி படத்துக்கு விறுவிறுப்பு கூட்ட தவறியதும் மும்பாய் கதைக்களம் தேர்ந்தெடுக்க பட்டதும் படத்திற்கு சறுக்கல்

டெல்லி பிராய்லர் சிக்கனில் அதிகப்படியான ஆன்டிபயாடிக் இருப்பது போல் லிங்குசாமியின் அஞ்சான் படத்தில்  கதையைத் தவிர அதிகப்படியான நடிகர்கள்,தேவைக்கு அதிகமான ட்விஸ்ட்கள்,சண்டைகள், கவர்ச்சி,மசாலா... என்று  படத்தை தள்ளாட வைக்கிறது அஞ்சான்.....சூர்யாவின் சிங்கம் படத்தை ஒருகாலும் மிஞ்சான்


படம் பார்த்தவர்களின் மதிப்பீடு...........

(தயவுசெய்து நீங்கள் அஞ்சான் படம் பார்த்தவராக இருந்தால் மட்டுமே உங்கள் மதிப்பீட்டை தெரியப்படுத்தவும்)
அஞ்சான்- படம் எப்படியிருக்கு?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி......


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1