google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கதை திரைக்கதை வசனம் இயக்கம்-சினிமா விமர்சனம்

Sunday, August 17, 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம்-சினிமா விமர்சனம்

கதையே இல்லாத ஒரு சினிமா  என்று ராதாகிருஷ்ணன் பார்த்திபன் கதைத்தாலும்  அவரது வழக்கமான நக்கலும் புதுமையும் கலந்த கதை தேடி அலையும் சினிமாக்காரர்கள் பற்றிய ஒரு வித்தியாசமான சினிமா கதையுடன் ....கதை திரைக்கதை வசனம் இயக்கம்

படத்தின்  ஆரம்பமே படு அமர்களமாக...வானுயர்ந்த கட்டிடத்தை தகர்க்கும் சுனாமி அலை என்று  ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு காட்சி....

அடுத்து பிரியாணிக்கும் பழைய சோறுக்கும் உள்ள வித்தியாசத்தை நையாண்டி செய்யும் கோலிவுட் ஸ்டைல் காட்சி.....

அடுத்து ஒரு கிட்டார் பிளேயர் தனது மாணவர்களுடன் தர்க்கம் செய்வது யுத்த களத்தில் போரிடும் வீரர்கள் போன்ற காட்சி....

அப்படியே பேண்டஸி உலகத்தில் பிரம்மா குழந்தைகள் தலையில் மூளை அசெம்பிளி செய்யும் புதுமையான காட்சி......

இப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத பல்வேறுபட்ட சிந்தனைச் சிதறலாக நான்கு  காட்சிகள் வந்தாலும் இவையெல்லாம் திரைப்பட இயக்குனர் ஆக ஆர்வம்கொண்ட தமிழ் (சந்தோஷ்)  தனது இளம் கூட்டாளிகள் ஷெர்லி,முரளி,அரவிந்த் மற்றும் சினிமா அனுபவமிக்க முதியவர் சீனு (தம்பி ராமையா) வுடன் ஒரு சினிமா கதைக்கான விவாதம் 

இவர்கள் ஒவ்வொருவருக்கும்  நகைச்சுவை,சென்டிமென்ட்,சோகம்,காதல் கலந்த ஒரு கதை இருக்கிறது இவர்களுடன் தமிழை  உயிராய் நேசிக்கும் மனைவி தக்க்ஷா (அகிலா கிஷோர்)  ஒருதலையாய் காதலிக்கும் எதையும் முன்கூட்டியே அறியும் ஓர் இளம் பெண்,தயாரிப்பாளர் மூர்த்தி என்று படம் நகர்கிறது 

நிஜக் கதாப்பாத்திரங்களாக  கலை ஞானம், சேரன், யுடிவி தனஞ் சேயன் மற்றும் நிஜக் கலைஞர்கள் பிரகாஷ் ராஜ், ஆர்யா, அமலா பால், விஷால், விஜய் சேதுபதி, தப்ஸி, ராகவா லாரன்ஸ், சாந்தனு, விமல், இனியா, பரத்...என்று ஒரு கூட்டமே நடித்துள்ளார்கள் ஆர்யா-அமலா தம்பதியராக நடித்துள்ளனர் 

கதை திரைக்கதை வசனம் இயக்கம்..... இயக்குனர்  பார்த்திபன் இப்படி புதுமுக நடிகர்களையும் அனுபவ நடிகர்களையும் திறம்பட உபயோகப்படுத்தி தனக்கே உரிய நக்கல்,குத்தல்,நையாண்டி வசனங்களால் தனது சினிமா உலகத்தையும் காயப்படுத்தி சிரிக்க வைத்து படு நேர்த்தியாக படம் காட்டுகிறார் 

சத்யாவின் பின்னணி இசையில் நகரும் படத்திற்கு  நான்கு இசைக் கலைஞர்கள் இசையில் நான்கு பாடல்கள் பரவாயில்லை ரகம் ராஜரத்தினத்தின் இன்டோர் ஒளிப்பதிவு அருமை எடிட்டர் சுதர்சனின் நறுக் கட்டிங் படத்திற்கு விறுவிறுப்பு 

கதை திரைக்கதை வசனம் இயக்கம்......... படம் கடிவாளம் இல்லாத குதிரை போன்று அங்கே இங்கே ஓடினாலும் இயக்குனர் பார்த்திபன் தனது குண்டூசி வசனங்களால்வெற்றிப்  பாதையில் இப்படத்தை பயணிக்க வைக்கிறார் 


படம் பார்த்தவர்களின் மதிப்பீடு............

கதை திரைக்கதை வசனம் இயக்கம்-
 படம் எப்படியிருக்கு?



வாக்களிக்கும்  அனைவருக்கும் நன்றி............


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1