google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பர்மா-சினிமா விமர்சனம்

Saturday, September 13, 2014

பர்மா-சினிமா விமர்சனம்

வடசென்னை பின்னணியுடன்  பைனான்ஸில் வாங்கி தவணை கட்டாத கார்களை  சட்டவிரோதமாக பறிமுதல் செய்பவர்கள்  பற்றிய முக்கோண கேங்க்ஸ்டர் கிரைம் த்திரிலர் படமான பர்மா...... 

திணிக்கப்பட்ட காதலுடன்  எதையும் முழுமையாகச் சொல்லாமல் திசை மாறிப்போனது

BURMA

படத்தின் கதையாக..........
கார் பைனான்ஸ் தொழில் செய்யும் மார்வாரி சேட்டு (அதுல் குல்கர்னி) விடம் தவணை பணம் கட்டாத கார்களை வடசென்னை தாதா குணா (சம்பத்) தன் கையாள் பர்மா (மைக்கேல்) மூலம் பறிமுதல் செய்கிறான்

குறைந்த சம்பளம் கொடுக்கும் தன் முதலாளி குணாவின்  கெட்ட என்னத்தை அறிந்த பர்மா தந்திரமாக குணாவை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு மார்வாரி சேட்டுவிடம் நேரடியாக கார் பறிமுதல் பண்ணும் வேலையை செய்கிறான் 

இதற்கிடையில்....பர்மாவை காதலிக்கும் ஒரு கவுரவமான குடும்பத்திலிருந்து வரும் கல்பனா (ரேஷ்மி மேனன்) பெற்றோரை எதிர்த்து வீட்டைவிட்டு வெளியேறி பர்மாவை திருத்தும் நோக்கில் அவனுடன் தங்கிவிடுகிறாள் 

பர்மா ஒரு விலை உயர்ந்த BMW காரை பறிமுதல் செய்யும் போது ஒரு வங்கி கொள்ளைக்கும்பல் பணத்துடன் அந்தக் காரில் தப்பித்துவிட........ 

மார்வாரி சேட்டு  பர்மாவின் காதலியை பினயமாக பிடித்து வைத்து அந்தக் காரை திரும்ப ஒப்படைக்க மிரட்டுகிறான் 

பர்மா BMW காரை கண்டுபிடித்து மார்வாரி சேட்டுவிடமிருந்து தன் காதலி கல்பனாவை மீட்டானா....? என்பதை திரையில் காண்க...  

பர்மா படத்தின் இறுதியில் வரும் அமிதாப்பச்சன்,ரஜினிகாந்த், விஜய்,அஜித் போன்ற பிரபலங்களின் கார் அணிவகுப்பு அனைவரையும் கவர்கிறது


இன்னும் த்திரிலாக காட்டவேண்டிய கார் சீசிங் நுட்பங்களை படம்  காட்ட தவறிய இயக்குனர் தரணிதரன் ஒரு கேங்க்ஸ்டர் கிரைம் படத்தில்.......
இன்னொரு திணிக்கப்பட்ட காதல் கதையையும்
இன்னுமொரு கதையாக  வங்கி பணம் கொண்டு செல்லும் வாகனத்தை கொள்ளையடிக்கும் இரண்டு கும்பல் பற்றிய கதையையும்   திணித்து....

 எந்த காதாப்பாத்திரத்தையும் சுவராசியத்துடன் முழுமையாக படைக்காமல் விட்டுவிட்டார் 


மைக்கேல்..........பர்மாவின் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற கரடு முரடான பார்வையும் ஸ்மார்ட் தோற்றமும் கொண்டவராக சரியான பொருத்தம்
ரேஷ்மி மேனன்......கதையில் வரும் தமிழ் பெண்ணுக்குரிய அழகும் வசீகரமுமாக மாறியுள்ளார் ஆனால் சம்பத்,அதுல் குல்கர்னி போன்ற திறமையான நடிகர்கள் சரியாக பயன்படுத்தப்படவில்லை

சுதர்சன் எம் குமாரின் பின்னணி இசை பாடல்களைவிட மேற்கத்திய பாணியின் தாக்கமாக படத்தின் கதைக்கு பக்கபலமாக உள்ளது ஒளிப்பதிவில் யுவாவின் காட்சியமைப்பு புதுமையாக உள்ளது
                                thanks YouTube by Think Music India
 
டீஸர், டிரெய்லர், இசை,திறமையான நடிகர்கள்........ஊட்டிய எதிர்பார்ப்பை பார்வையாளர்களுக்கு முழுமையாக படம்காட்ட தவறிவிட்டது...........பர்மா திரைப்படம்  

ஆனாலும்.......

படத்தின் முதல் பத்து நிமிட காட்சிகளும்  மற்றும் இடைவேளைக்கு முன்பு இருபது நிமிடங்கள் வரும் அதிரடி காட்சிகள் த்திரிலர் பட விரும்பிகளுக்கு நல்ல விருந்தாக அமையலாம் 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1