google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பொறியாளன்-சினிமா விமர்சனம்

Saturday, September 06, 2014

பொறியாளன்-சினிமா விமர்சனம்

சமுதாயத்தின் இருண்ட பக்கமான நிதி மோசடிகள், ஏமாற்றுக்காரர்களை  யதார்த்தமாக படம் காட்டிய  சூது கவ்வும், சதுரங்க வேட்டை...போன்று மணிமாறன் வசனத்தில் பொறியாளன் படமும் ரியல் எஸ்டேட் வணிகத்தின் இருண்ட பக்கத்தையும் கந்து வட்டிக் கொடுமையையும் தோலுரிக்கின்றது 

சென்னையில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்க்கும் சிவில் இன்ஜினியர் சரவணன் (ஹரிஷ் கல்யாண்) சொந்தமாக ஒரு கட்டுமான நிறுவனம் தொடங்குகிறான்

அவருக்கு தேவையான பணத்தை ஒரு பயங்கரமான கொலைகார கந்துவட்டி தாதா சுந்தரிடம் (அச்சுத குமார்) வேலை செய்யும் அவனது நண்பர் பிரபு (அஜய் ராஜ்) உதவியால்..... 

ஜெயிலிலிருக்கும் சுந்தர் வருவதற்குள் திரும்ப வைத்துவிடும் எண்ணத்தில் சுந்தரின் பணத்தை எடுத்து சரவணன் புரோக்கர் சாஸ்திரி (மோகன் ராமன்)  மூலம் நிலம் வாங்குகிறான் 

இடையிடையே பிரபுவின் தங்கை சாந்தி(ஆனந்தி)யுடன் காதலும் கும்மாளமாக போய்க்கொண்டிருந்த சரவணன் வாழ்வில் சோதனையாக.... 

புரோக்கர் சாஸ்திரி மூலம் சரவணன் வாங்கிய நிலமோ வில்லங்கமாக இருக்க.......சரவணன் ஏமாற்றப்படுகிறான் 

அதற்குள் ஜெயிலிலிருந்து வெளியே வந்த கந்துவட்டி தாதா சுந்தர் தன் பணத்துக்காக சரவணனை தொல்லை செய்கிறான் சரவணனோ புரோக்கர் சாஸ்திரியை தேடி அலைகின்றான் 

கடைசியில் சரவணன் இந்தப் பிரச்சனைகளை எப்படி சமாளித்து வெல்கிறான்...? என்பதை திகில் திருப்பங்கள் நிறைந்த  காட்சிகளுடன் இயக்குனர் தாணுகுமார் படம்காட்டுவதே............ 

ஆரம்பத்தில் வரும் பொறியாளன் படத்தின் காட்சிகள் நமக்கு  வேலையில்லாத பட்டதாரி படத்தின் கதாநாயகனை நினைவூட்டும் இன்னும் சில காட்சிகள் நேரம் படத்தை நினைக்கத் தோன்றும் சில விறுவிறுப்பான காட்சிகள் நமக்கு வெற்றிமாறனின் பொல்லாதவன் படத்தையும் நினைவூட்டும் 

ஆனால் திரைக்கதையில் இயக்குனர் தாணுகுமார்இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் பொறியாளன் மிகப் பெரிய வெற்றி த்திரிலர் திரைப்படமாக வந்திருக்கும் 
ஹரிஷ் கல்யாண்......பொறியாளன் கதைக்கு தேவையான பிரமாண்டமான சூப்பர் ஹீரோ இல்லை ஆயினும் ஹீரோ நடிப்புடன் ஒரு ஹீரோ  
ஆனந்தி......அழகு (காதலுக்கு மட்டும்.......)
புரோக்கராக மோகன்ராமன்...சீரியஸ் வேடத்தில் மயில்சாமி குறிப்பிடத்தக்க நடிப்புடன் வருகிறார்கள் 

ஜோன்ஸ் இசையில்......பாடல்கள் படத்துக்கு வேகத்தடை எதுவும் லயிக்கவில்லை கானா பாலாவின் நம்பர் பாடல்கூட மனதைத் தைக்கவில்லை ஆனால் பின்னணி இசை கதைக்கு பக்கபலமாக உள்ளது  வேல்ராஜின் ஒளிப்பதிவு...தெள்ளத் தெளிவாக பிசிறடிக்காமல் உள்ளது

ஆக மொத்தத்தில்..........
பொறியாளன்-ஒரு முழு பொழுது போக்குப்படம் 
திகில் பட நேயர்கள் மட்டுமின்றி ரியல் எஸ்டேட் வணிகத்தின் இருண்ட பக்கத்தை காட்டும் அதன் கதைக் கருவுக்காகவும் வசனத்திற்காகவும்  அனைவரும் ஒருமுறை பார்க்கலாம்


படம் பார்த்தவர்களின் மதிப்பீடு..........
பொறியாளன்-படம் எப்படியிருக்கு?

படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.......
 
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1