google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பவர் (தெலுங்கு)-சினிமா விமர்சனம்

Monday, September 15, 2014

பவர் (தெலுங்கு)-சினிமா விமர்சனம்

பலுப்பு படத்தின் வெற்றிக்குப் பிறகு டோலிவுட் மாஸ் மகாராஜா ரவி தேஜா-ஹன்ஷிகா இணைந்து நடித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்துள்ள தெலுங்கு திரைப்படம்........ பவர்  


power

பவர் படத்தின் கதையாக............

கொல்கத்தாவில் உள்ள ஒரு  நீதிமன்றத்தின் முன்பு ஊடகங்கள் காத்திருக்க ஹோம் மினிஸ்டர் ஜெய வர்தன் (முகேஷ் ரிஷி) னின்  தம்பியும்  பயங்கரமான தாதாவுமான கங்குலி (சம்பத்ராஜ்) கோர்டில் ஒப்படைக்க அழைத்துவரப்படுகிறான் 

ஆனால் போலிஸ் உதவியுடன் கங்குலி தப்பிக்கும் போது அவனை துரத்திச் செல்லும் நேர்மையான போலிஸ் அதிகாரி ACP பல்தேவ் சகாய் (ரவி தேஜா)  வாகனத்துடன் நொறுக்கப்பட்டு மலை உச்சியிலிருந்து தள்ளிவிடப்படுகிறார்  

ஹோம் மினிஸ்டர் உதவியுடன் பல்தேவ் சகாயின் கதை ஓர் ஊழல் போலிஸ் அதிகாரியாக திரிக்கப்பட்டு வெடிவிபத்தில் இறந்ததாக முடிக்கப்படுகிறது 

அடுத்து........

power

ஹைதெராபாத்-தில் போலிஸ் ஆகவேண்டும் என்ற கனவில் துடிப்புடன் உள்ள திருப்பதி (ரவி தேஜா) தனது மைத்துனர் போலிஸ் அதிகாரி அணிமுத்யத்தின் (பிரம்மானந்தம்) சீருடைகளை போட்டுக்கொண்டு அலைவதும்..  அப்போது அதிர்ஷ்டக் கல் விற்கும் ஜோதிட சிகாமணி நிருபமா (ஹன்ஷிகா) வை சந்திக்க..... இருவரும் காதலில் மிதக்க...

ஒருநாள் ஹோம் மினிஸ்டர் ஜெய வர்தன் டிவியில் இறந்து போன ACP பல்தேவ் சகாய் உருவத்தில் இருக்கும் திருப்பதியை பார்த்து அதிர்ச்சியில் தம்பி கங்குலியுடன் சதித்திட்டம் தீட்ட....

 யார் இந்த திருப்பதி...? திருப்பதிக்கும் ACP பல்தேவ் சகாய்-க்கும் என்ன உறவு....? என்பதை ஒரு ட்விஸ்ட்வுடன் மீதி கதையாக பவர் படம்  சொல்கிறது........   

இயக்குனர் கே.எஸ்.ரவீந்திரா வழக்கமான பழைய கதையில் நிறைய பொழுதுபோக்கு மசாலா அம்சங்களுடன் திரைக்கதை அமைத்து நிறைய பன்ச் வசனங்களுடன் படம்காட்டுகிறார்

ரவி தேஜாவுக்கு போலிஸ் வேடம் கனகச்சிதமாக பொருந்துகிறது இரண்டு வேடங்களில் வேறுபட்ட நடிப்பை காட்டினாலும் வயது இடையுறாக உள்ளது. 

power


ஹன்ஷிகா....கவர்ச்சியாக தொடையை காட்டி அழகாக தோன்றி மூன்று பாடல்களுக்கு ஆட்டம் போட்டு அசத்துகிறார்  

ரெஜினா....பிளாஸ் பேக் காட்சிகளில் தோன்றி ஒரு பாடலுக்கு ஆட்டம்போட்டு ஆனால் கொஞ்சம் நடித்துள்ளார் ....... 

பிரமானந்தம்...... வழக்கம் போல் அவரது பாணி காமெடியில் கலக்க சப்தகிரி.....ஹன்சிகாவின் அசிஸ்டன்ட்டாக வந்து சிரிக்க வைக்கிறார் மற்றபடி சம்பத் ராஜ்,முகேஷ் ரிஷி,பிரமாஜி,கோட்டா ஸ்ரீனிவாஸ்.... கதைக்கு ஏற்ப வந்து போகிறார்கள் 

எஸ்.தமன் இசையமைக்கும் 50-வது படம் என்பதை தவிர புதுமையாக எதுவுமில்லை பாடல்கள் படத்துக்கு இழுவை ஜெயனன் வின்சென்ட் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள்....
பார்க்கும் ரகம்   

ஆக மொத்தத்தில்......
பலுப்பு,விக்கிரமார்குடு,ரேஸ்குர்ரம்..கலவையாக வந்துள்ள  ரவி தேஜாவின் பவர் படம் சொதப்பல் கிளைமாக்ஸ்வுடன்  பார்வையாளர்களை கவராமல்......
சில நேரம் பவர் கட்டில் இருட்டில் தத்தளித்தும்........
பல நேரம் குறைந்த பவரில் பிரகாசமின்றியும்..ப்யூஸ் போன பவர்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1