google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வானவராயன் வல்லவராயன்-சினிமா விமர்சனம்

Sunday, September 14, 2014

வானவராயன் வல்லவராயன்-சினிமா விமர்சனம்


வெற்றிப்படம் ஆண்பாவம் தாக்கத்தில் குடும்ப சண்டைகள், சென்டிமென்ட், காக்டெயில் காமெடி... இவைகளுடன் கிராமப்புற   C சென்டர் ரசிகர்களுக்காக சினிமாவாக எடுக்கப்பட்ட தொலைகாட்சி சீரியல் நாடகம்......... வானவராயன் வல்லவராயன்

monal


பொள்ளாச்சியில் வசதியான குடும்பத்தை சேர்ந்த ஊதாரி பிரதர்ஸ் அண்ணன் வானவராயனும் (கழுகு கிருஷ்ணா) தம்பி வல்லவராயனும் (அது இது எது புகழ் மா.க.பா.ஆனந்த்) அடித்துக்கொளவதிலும் குடித்துக்கொள்வதிலும் அவ்வப்போது ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகவும் எதிரிகளாகவும் இருக்க.......
 
அண்ணன் வானவராயன் ஒரு திருமணவீட்டில் கல்லூரி மாணவி அஞ்சலியை (மோனல் காஜர்) சந்தித்து காதலிக்க அவரது கோணங்கி சேட்டைகளில் மயங்கிய அஞ்சலி அம்மணியும் காதலிக்க.....

monal

இந்தக் காதல் பிரச்சனையில் தம்பி வல்லவராயன் அஞ்சலியின் அப்பாவை அடித்துவிட....அஞ்சலி வல்லவராயனை கண்ணத்தில் அறைய...தம்பியை அடித்ததால் அண்ணன் வானவராயன் அஞ்சலியை அடிக்க.....வானவராயன்-அஞ்சலி காதலில் பெரிய விரிசல் விழுகிறது

பிரிவுபட்ட  காதலை பெவிகால் போட்டு ஒட்டவைத்து சேர்த்துவைக்க  தம்பி வல்லவராயன்    பல முயற்சி செய்கிறான் 
பிரிந்த காதலர்கள் ஓன்று சேர்ந்தார்களா...? என்பதை தெரிந்து கொள்ள.......

monal

ரசிகர்களை சிரிக்க வைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கில் இயக்குனர் ராஜ்மோகன் இப்போதைய சினிமா ட்ரென்ட் வெற்றிப்பட சூத்திரம் லைட்-வெயிட் காமெடி  படம் எடுக்க நினைத்து கதையிலும் வசனத்திலும் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ளாமல்...  80-களில் உள்ள பழைய கதைக்கருவை கொஞ்சமும் மாற்றாமல் இப்போதைய ரசிகர்களுக்கு டாஸ்மாக் ஆஸ்தான விளம்பரதாரர் போல் படம் காட்டி கெடுத்துள்ளார் 

படம் பார்ப்பவர்களை நெளிய வைப்பது........ரசிகர்களை ஆக மடையர்களாக நினைத்து ஒரு காமெடி அடுத்து ஒரு சாவடி என்று திரைக்கதையில் வரும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத உதிரிக் காட்சிகள்  


கழுகு கிருஷ்ணா........யாமிருக்க பயமேன் படம் போல்  இதிலும் நகைச்சுவையுடன் காதல் மிளிர நடித்துள்ளார் மா.க.பா.ஆனந்த்.......முதல் படத்திலே கொஞ்சம் நடிக்கிறார் மோனல் காஜர்........சிகரம் தொடு மாதிரி இதிலும் அழகாக வருகிறார் நடிக்க வாய்ப்பு இல்லை 

எஸ் பி பி சரண்,சௌகார் ஜானகி,கோவை சரளா,தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ் நடிக்க இவர்களுடன் சந்தானமும் கொஞ்ச நேரம் தோன்றி சிரிப்பூட்டிச் செல்கிறார் 


ஆண்பாவம் காமெடி படத்தின் உல்டாவாக வந்திருக்கும் சாவடி படம் வானவராயன் வல்லவராயன்  சிலருக்கு பிடிக்கும் பலருக்கு பிடிக்காது வீட்டில் நேரம் போகாதவர்கள் கொஞ்ச நேரம் அரங்கில் போய் சிரித்து வரலாம் 

 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1