சாதிய சண்டைகள் நிறைந்த இந்த தமிழக சமுதாயத்தில்.....
பழைய வண்ணாரப்பேட்டை திரைப்பட இயக்குனர் மோகன் ஜி யின் புதிய பழிவாங்கும் சாதிப்பேட்டை திரளபதி திரைப்படம்..
இந்த சமுதாயத்துக்கு என்ன சொல்ல வருது?.
தன் மனைவியையும் மைத்துனி லக்ஷ்மியையும் கொலை செயத
குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்ட ருத்ர பிரபாகரன்
(ரிச்சர்ட் ரிஷி) பெயிலில் வருவது போல் திரைப்படம் தொடங்குகிறது
அதேவேளையில்...
தன் மனைவியின் (திரௌபதி சபதம் போல்) கடைசி ஆசையை நிறைவேற்ற பல கொலைகளை மறைமுகமாக செய்கிறார்.
இங்கே நான் கண்ட சம்பவத்தை நினைத்துப் பார்க்கிறேன்
25 வருடங்களுக்கு முன்பு...
ஓர் உயர் சாதியை சேர்ந்த என் உறவினர் மகள் தான் வேலைக்கு சென்ற தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவருடன் ஓடிவிட்டார்....
காவல்துறை யில் புகார் கொடுத்து தேடிக்கொண்டிருக்கும் நிலையில்...
அவர்களுக்கு ஆதரவாக அவர்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு மறைவிடம் கொடுத்து திருமணமும் செய்து வைத்ததை அறிந்து....
காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளே பின்வாங்கி விட்டனர்.
பெண்ணின் தாயார் (கிராமத்து சாதிய பாராம்பரியத்தை சேர்ந்தவர்) தூக்கில் தொங்கி உயிர் விட்டார்.
அதனால் மனமுடைந்த தந்தையும் 2 மாதத்தில் உயிர் இழந்தார். அவர்கள் குடும்பமே சிதைந்து சீரழிந்தது. இன்றுவரை மீளவில்லை.
ஆனால்...
அந்தப்பெண்ணும் அவரது காதல் கணவரும் இன்று ஓகோனு வாழ்வதை அறிந்தேன்.
அந்தப்பெண் அவரது வாழ்வை அவரே தீர்மானித்துக் கொண்டார்.
அசிங்கம் என்று நினைத்த பெற்றோர் தங்கள் வாழ்வையும் முடித்துக்கொண்டு...
தங்களது மற்ற பிள்ளைகளின் வாழ்வையும் கெடுத்துவிட்டார்.
2000 ஆண்டுகளுக்கு முன் (சாதிகள் இல்லாத உலகம் போல்) அய்யன் வள்ளுவன் பாடி வைத்த காதல்...
இன்று கொலை என்ற அளவுக்கு மாறிவிட்டது சமூக அசிங்கமே...
காதலில்....
சாதிகள் இல்லையடி பாப்பா என்று
பாடத் தோன்றினாலும்.....
தன் உயிரும் உடம்புமாக 25 ஆண்டுகள் வளர்த்து வாழவைக்க நினைக்கும் பெற்றோர்கள் அன்பை மறந்து....
காதல் என்ற பெயரில் அவர்களுக்கு சமுதாயத்தில் அவமரியாதை உண்டாக்கும் இந்தக் காதல் நாடகக்
காதலாக இல்லாமல் இருக்கும் என்றால் காதல் வாழ்கவே....
இந்தப்படம்...
ஆனவக் கொலையை ஆதரிக்கிறதா?
அல்லது ரஞ்சித் போன்ற நாலாம் தர சாதிய இயக்குனர்கள் சாதிய படம் காட்டி பணம் சுருட்டுவதுபோல்...
மோகன் ஜி யும் ஆனவகொலையை ஆதரிப்பது போல் படம் காட்டி பணம் சம்பாதிக்க நினைக்கிறாரா?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |