google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சென்னை எக்ஸ்பிரஸ்-சிரிப்பு விமர்சனம்

Sunday, August 11, 2013

சென்னை எக்ஸ்பிரஸ்-சிரிப்பு விமர்சனம்

(குறிப்பு-இது சினிமா விமர்சனம்அல்ல...சிரிப்பு விமர்சனம்.... சென்னை எக்ஸ்பிரஸ் படம் பார்த்து இன்னும் என்னைச் சிரிக்க வைக்கும் காட்சிகளின் தொகுப்பு..)

http://data.whicdn.com/images/69376420/large.jpg

இதுவரை நான் பார்த்த படங்களிலேயே என்னால் மறக்கமுடியாமல் நினைத்து நினைத்து சிரிக்க வைத்த  ஒரு படம்...சென்னை எக்ஸ்பிரஸ்
இப்படம் சிரிப்பு தோரணங்களால் கட்டப்பட்ட நகைச்சுவை கதம்ப மாலை 

https://si0.twimg.com/profile_images/378800000164536166/f2e82881d9ab6d2b459731fbe26e13e4.jpeg

இங்கே நகைச்சுவைக்கென்று விரசமாகவும் நாராசமாகவும் நக்கலும் விக்கலுமாகப் பேசும்  எந்தக் காமெடி நடிகர்களும் இல்லை..கதாநாயகன் ஷாருக்கான் தன் உடல் மொழியாலும் முகபாவனையாலும் அலட்டிக்கொள்ளாத நடிப்பாலும் நகைச்சுவையை வாரிவளங்குகிறார்

http://cdn3.hottestfashiononline.com/wp-content/uploads/2013/05/deepika-padukone-s-fun-time-on-sets_13696406215-400x217.jpg



காதல்கூட இங்கே விரசமில்லாமல்....உதட்டு முத்தங்கள் இல்லாமல் கவித்துவமாக அதேநேரம் காமெடியாகச் சொல்லப்பட்டதற்கு இயக்குனர் ரோஹித் ஷெட்டியை நிச்சயம் பாராட்ட வேண்டும்....




ராகுல் (ஷாருக்கான்) தாத்தாவின் 100-வது பிறந்த தின நள்ளிரவு கொண்டாட்டத்தில்..கிரிக்கெட் ரசிகரான ராகுலின் தாத்தா  தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் போது சச்சின் அடித்த சிக்ஸ்சருக்குச் சிரித்துக்கொண்டே உயிர் விடுவது மரணம் கூட அழகாகச் சிரிக்கும்படி...


அங்கே ஆரம்பிக்கின்ற காமெடிப் பயணம்  ராகுல் அவரது தாத்தாவின் கடைசி ஆசையாக அவரது அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைக்க....  சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து....

http://i1.ytimg.com/vi/XuWj7fCiTuU/hqdefault.jpg

மீனா (தீபிகா) வை மட்டுமின்றி அவளை விரட்டிவரும் குண்டர்களுக்கும் ரயிலில் ஏற உதவி செய்து...இந்தி தெரிந்த மீனாவுடன் இருவரும் இந்திப் பாடல்கள் பாடியும் பாடுவதுபோல் இந்தியில் பேசியும் தகவல் பரிமாறிக்கொள்வது....

ரயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகரிடம் இந்தியில் பாடியே பேசி நான்கு தடியர்களையும் மாட்டிவிட்டு அவர்களது ஆயுதங்களைப் பிடுங்கச் செய்வது...அய்யோ பாவம் அந்த டிக்கெட் பரிசோதகரை அந்தத் தடியர்கள் ரயிலிலிருந்து தள்ளி விடும் காட்சி...என்று திகில் காட்சிகளையும் சிரிக்க வைத்து.....

http://www.firstpost.com/wp-content/uploads/2013/08/deep_srk_380.jpg
கொம்பன் கிராமம் வந்ததும் பெரிய தல (சத்யராஜ்)யிடம் மீனா ராகுல் தன்னைக் காதலிப்பதாகச் சொன்னதும் அவருக்கு கிடைக்கும் மரியாதை..விருந்து..உபசரிப்பு ...இவைகளைக் கண்டு உள்ளூரப் பயப்படும் காட்சி...பெரியதல சத்தியராஜின் பெயர்-துர்கேஷ்வர அழகுசுந்தரத்தை உச்சரிக்கத் தெரியாமல் திணறுவது....

தங்கபள்ளி என்ற மீனாவுக்கு நிச்சயிக்கப்பட்ட இன்னொரு பலசாலி தாதாவிடம் மொழி தெரியாமல் சண்டையிடும் சவாலுக்கு  ஒத்துக்கொண்டு..கொம்பன் கிராமத்து உயர் போலிஸ் அதிகாரியான பஞ்சாப் சிங் உதவியுடன்...ஒரு படகில் ஒளிந்திருப்பது.....

ஸ்ரீலங்காவுக்கு மண்ணெண்ணெய் கடத்தும் அந்த படகில் கும்பலோடு கும்பலாகக் கைது செய்யப்பட்டு கடலோரக் காவல் படையினரால் மீண்டும் பெரியதல வசம் ஒப்படைக்கப் படுவது...

sharuk

மனப் பெண் கோலத்தில் மீனாவை கடத்தி செல்லும் ராகுல் வழிதெரியாமல் இன்னொரு கிராமத்தில் திருட்டுக் கல்யாணம் செய்து கொண்டவர்கள் என்று மீனாவால் பொய்சொல்லி அடைக்கலமாவது...அங்கே கிராமத்துச் சம்பிரதாயப் படி புது மணமகன் மனைவியைத்  தூக்கிக் கொண்டு சோழிங்கர் கோயில் படிக்கட்டுகள் போல் இருக்கும் மலைக் கோயிலில் மீனாவைத் தூக்கிக் கொண்டு ஏறுவது....


கொம்பன் கிராமத்து .காஜா பீடி,சங்கர் சிமென்ட்..போன்ற   தமிழ் சுவர் விளம்பர எழுத்துக்கள்...காணும் போதும்...

http://l2.yimg.com/bt/api/res/1.2/.Fp7kKZTvMhEFp8xyOIRzQ--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD02MzA7cT04NTt3PTQyMA--/http://l.yimg.com/os/285/2013/08/05/CHENNAI-EXPRESS-050813-630-07-jpg_073656.jpg
 
இன்னும் தீபிகாவை பாவாடை தாவணியிலும் பட்டுச் சேலையிலும் பார்க்கும் காட்சிகள் நம்முள் ஒருவித நமுட்டுச் சிரிப்பை வரவழைக்கும்..போதாக்குறைக்கு அம்மணிக்கு வேற தொடை தெரிய மடித்துக்கட்டிய லுங்கி வேறு....ஹா...ஹா....ஷாருக்கான் வேஷ்டி கட்டும் சூப்பர்...அரங்கம் அதிர்கிறது.

                                         thanks-YouTube-by vikatanwebtvvikatanwebtv

இப்படி இன்னும் நிறையச் சொல்லிக்கொண்டு போகலாம் இதற்கு மேல் நானும் சொன்னால்....எண்ணக் கொடுமையடா இது...ஏதோ சினிமா விமர்சனம் படிக்கலாம் என்று வந்தால் இப்படிப் போட்டு அறுக்கிறானே என்று என் மீது கோபம் வரலாம் நீங்கள் நேரடியாக படத்தை கண்டு உணருங்கள்...ஆகவே இத்துடன் நிறுத்திக்கொள்கி...    

அடடா...எப்படியெல்லாம் காதலையும் நகைச்சுவையையும் விரசமில்லாமல் இப்படியெல்லாம் எடுத்த ரோஹித் ஷெட்டியை வாழ்த்தி விடைபெறுகிறேன்...

                              thanks-YouTube-by UTV Motion Pictures UTV Motion Pictures

(ஒரு சினிமாவுக்கு எத்தன விமர்சனம் எழுதுவாய்..? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது..சென்னை எக்ஸ்பிரஸ் படம் உலக அளவில் வெளிநாட்டு 10  மொழிகளில் வெளியானது..எங்கே போனாலும் நம்ம சென்னை என்ற பெயரையும் இப்படித் தமிழ் என்று ஒரு மொழி இருப்பதையும் இப்படித் தமிழ் தா(த்)தாக்கள் இப்படித் தமிழ் காதல்...இப்படி நிறையத் தமிழ் விசயங்களை....

செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயிது காதினிலே..என்றும்
தமிழுக்கு அமுதென்று பேர்...அந்தத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ...என்றும்

உலகுக்குச் சொன்ன வட நாட்டு இந்தி(ய)க்காரர்களை பாராட்டாமல் இருக்க முடியல்ல...அண்ணேன் அங்க...அதுதான்.)  நன்றி

http://wallpaperology.com/thumb/52656-chennaiexpress20.jpg

(யோவ்...பரிதி! தீர்ப்ப மாத்தி சொல்லு...நாம இந்தி ஒழிகன்னு சொல்றவயிங்க....அப்புறம் அப்புறம் ஒரு இந்திக்காரன் நம்ம தமிழ் தா(த்)தா  பொண்ண இழுத்துக்கிட்டு ஓடுறாங்...அட...கொய்யால...நீ அவிங்களுக்கு சப்போர்ட்டா....?)

அப்படியா...ஏம்பா...சாருதம்பி...நீ அந்தப் பொண்ணக் கையப்புடிச்சி இழுத்தியா...?

என்ன...கையப் புடிச்சி இழுத்தியா....?

ஏம்பா...அவிங்களுக்கும் நமக்கும் ஏற்கனவே இந்தி தகராறு இருக்கு நீ..அந்த தமிழ் பெண்ணைக் கையப்புடிச்சி இழுத்தியா....?

என்ன... கையப்புடிச்சி இழுத்தியா...? நான் தங்க பல்லியோ? பள்ளியோ? அவன்கிட்ட சண்டபோட்டு ஜெயிச்சி...பெரியதல சம்மதத்தோடதான் மீனா கையப் புடிச்சேன்... 
(இதுதாங்க...சென்னை எக்ஸ்பிரஸ்-சினிமா விமர்சனம்............படிக்காதவங்களுக்கு)
ஹி...ஹி..இன்னும் என் நகைச்சுவையோ...? அறுவையோ..? தொடரும்  விரைவில்...........
தமிழ் சினிமாவும் சில சி(சொ)ரிப்பு நடிகர்களும்
  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1