(குறிப்பு-எம்.ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி-காஜல் அகர்வால் நடித்துத் தீபாவளிக்கு வரவிருக்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற காதல் நகைச்சுவை திரைப்படம் பற்றி.....புது புகைப்படங்களுடன் )
ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் டீசரில் இயக்குனர் ராஜேஷ் அறிமுகமாகி இனிமேல் புகை மது பழக்கத்துக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதுபோல் நல்ல பிள்ளையாட்டம் பேசுகிறார்...அதே நேரம் அந்த டீசரில் அவரது ஆஸ்தான காமெடியன் சந்தானமும் கார்த்தியும் முகேஷ் பற்றிக் கிண்டலடிப்பதும் கையில் பாட்டிலோடு அரங்கில் இருப்பதுமாகக் காட்டப்படுவது...பஞ்சணையில் அஞ்சுகம் காணும் மெஞ்சானிகள் (சாமியார்கள்) பேசும் துறவறம் போல் உள்ளது....
இதுவரை தனது படங்கள் அனைத்திலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கிய ராஜேஷ் அதே அளவு பாட்டில்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்ததைக் காணலாம்
ராஜேஷ் கதைவசனம் எழுதிய சமீபத்திய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில்கூட அப்பா மகனுக்கு காசுகொடுத்து காதல் தோல்விக்கு டாஸ்மாக் மருந்து சாப்பிடு என்று அனுப்புவதும் வாலிபர் டாஸ்மாக்கில் பீர் பாட்டிலோடு நிற்பதும் திணிக்கப்பட்ட காட்சிகளாக தெரியவில்லையா...?
தனது பாஸ் என்கிற பாஸ்கரன் படமூலம் நண்பன்டா.......என்று ஒரே வார்த்தையால் வசனத்தில் புரட்சி செய்தவர்...சந்து பொந்தெல்லாம் சிந்து பாடவிட்டவர் அவர் நினைத்தால் நல்லதொரு வார்த்தையைச் சொல்லி
இந்தச் சமுகத்திற்கு ஒரு விழிப்புணர்வு தரலாம்...தர முடியும்
thanks-YouTube-by
ஆனால்..ராஜேஷ் அண்ணேன் நம்ம ஆல் இன் ஆல் அழகுராஜாக்களோ மது-புகையிலை பற்றி கவிதையிலோ கட்டுரையிலோ ஒரு வார்த்தை எழுதினால் மூணு மாசத்துக்கு அந்த வலைத்தளம் பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை....இது இப்படியிருக்க துணிவுடன் உங்கள் ஆல் இன் ஆல் அழகுராஜா உண்மையில் விழிப்புணர்வு செய்வாரா...? இல்லையேல் செய்வதுபோல் நடிப்பாரா...?
படத்தின் புகைப்படங்களைப் பார்க்கும் போது எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |
