google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நானும் கலைஞரும்

Friday, August 10, 2018

நானும் கலைஞரும்


நானும் கலைஞரும்
--------------------------------
"ஏம்பா... நம்ம மளிகை கடையில 5 பேர் வேலை பார்க்கிறாங்க...
நம்ம தோட்டத்தில தினமும் 10 பேர் வேலை பார்க்கிறாங்க...
உன்னை நான் இம்புட்டு படிக்க வச்சேன் நீயென்னடான்னா ஒரு tv கடையில வந்து வேலை பார்க்கிற... ஒருத்தன் கூட உனக்கு பெண் கொடுக்க மாட்டேன்கிறாங்க......"
இதுதான் 54 வது வயதில் தன் மனைவியை, என் தாயை பறிகொடுத்த, 65 வயதான என் தந்தை கடைசியாக நேரில் சென்னை வந்து நான் வேலை செய்யும் TV கடையில் சந்தித்து என்னிடம் பேசியது

எனக்கு அப்போது மௌனத்தை தவிர வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை

பிறகு ஊருக்கு சென்ற அன்றே என் தந்தை இறந்துவிட்டார் என்ற செய்தி மட்டுமே எனக்கு கிடைத்தது சென்னையிலிருந்து நான் திருச்செந்தூர் அருகே உள்ள என் சொந்த கிராமத்துக்கு செல்லும் முன்பே அவரை அடக்கம் செய்து விட்டார்கள்..

என் தந்தையின் இறந்த உடலை பார்க்காத நான் அவர் இன்று வரை என்னோடு வாழ்ந்து கொண்டிருப்பதாகவே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

ஒருநாள் என்னை ஒரு வயதான கல்யாண புரோக்கர் சந்தித்து...
"உங்க அப்பா உனக்கு பெண் பார்க்க சொல்லியிருந்தார்ப்பா இப்ப ஒரு பெண்வீட்டார் வந்து இருக்காங்க என்ன சொல்ல..."
என்று கேட்டார்
"எதுனாலும் அப்பா இறந்து ஒருவருடம் கழித்துத்தான் திருமணம் செய்வேன்" என்று சொல்லி அனுப்பினேன்

அடுத்த நாளே நான் வேலை செய்யும் டிவி கடைக்கு ஒரு பெரியவர் வந்தார் மாப்பிள்ளை பார்க்க வந்ததாகவும் என்னைப் பிடித்திருப்பதாகவும் சொன்ன அவர் பெரியவர்கள் இருந்தால் வந்து பேசும்படி சொல்லி சென்றார்

நானும் என் உறவினர்களும் அடுத்த நாளே ஒரு அம்பாசிடர் டாக்சி பிடித்து பெண் பார்க்க சென்றோம்....

போகும் வழியில்.....

"அடேய்... உணக்கோ வயசு 30 ஆச்சு... பெண் பிடிக்கலனு சொன்ன... உன்ன ஊர் உலகம் தப்பா பேசும் இந்த ஜென்மத்தில உனக்கு கல்யாணமே ஆகாது"ன்னு சாபம் விட்டார்கள்

பெண் பார்க்கும் படலம்
நானும் வேற வழியில்லாமல் ஓகே னு சொல்லிட்டேன்
ஆனால்...
அவள் முகத்தை பார்த்த போது
"என்னை எப்படியாவது இந்த வீட்டுல இருந்து காப்பாத்து" என்றுபரிதாபமாக கெஞ்சுவது போல் இருந்தது

நான் சரி என்று சொன்னப் பிறகுதான்....
பெண்ணின் தந்தை...
" கலைஞர் தேதி கொடுத்தப் பிறகுதான் திருமணம் செய்ய முடியும் இன்னும் 6 மாதம் காலம் ஆகும்"என்றார்

அப்போதுதான் அவர் சென்னையில் ஒரு வசதியானவர் என்பதும் பல வீடுகள் கடைகள் அவருக்கு சொந்தம் என்பதும் எங்களுக்கு தெரிய வந்தது

அப்போது கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார்
ஆகையால்...
என் தந்தை இறந்த ஒருவருடம் இரண்டு மாதம் கழித்தே திருமண தேதி கிடைத்தது.

திருமணம் அன்று ஒரு சிக்கலும் ஏற்பட்டது அப்போது(1990) பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்கள் பதவி மண்டல் கமிஷன் அமுல் படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால் ஊசல் ஆடிக்கொண்டிருந்தது திருமனத்து அன்றுதான் அவர் அனைத்து முதலமைச்சர்கள் மாநாடு கூட்டியிருந்தார்.

அதனால் எனது திருமணத்தை நடத்தி வைக்க கலைஞர் வருவது சந்தேகம் என்றார்கள்
எனது முகமோ காற்று போன பலூன் போல் சுருங்கியது...
(தொடரும்)

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1