google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: திமுக-அதிமுக போஸ்டர் போராட்டங்கள்

Sunday, March 24, 2013

திமுக-அதிமுக போஸ்டர் போராட்டங்கள்


அடேய்...அறிவுச்செல்வா! 
இப்போதெல்லாம் பதிவு எழுத எரிச்சலாக இருக்கிறதடா...
அதிலும் அரசியல் பற்றி எழுதவோ அசிங்கமாக இருக்கிறதடா....
பேசமல எதையாவது கிறுக்கிவிட்டு கவிஞன் என்று பீத்திக்கொள்ளவே பிரியமடா....
இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் இன்னல்கள்  நீங்க போராடவேண்டிய காலங்களில் நம் தலைவர்கள் எல்லோரும் கடிதம் எழுதியே காலத்தைப் போக்கிவிட்டு......


மாணவர்களும் மக்களும் எழுச்சி கொண்டபோது.....
அமெரிக்க தீர்மானம் நீர்த்துப்போச்சு என்று நீட்டி முழக்கிவிட்டு....
அடுத்து உருப்படியாய் என்னதான் செய்யவேண்டும் என்பதை மறந்து விட்டு.... 
அய்யோ! சென்னையில் இவர்கள் போடும் கூப்பாடுகள்...........
சென்னை நகரெங்கும் சுவர்களில் போஸ்டர்கள்......


தமிழ் படிக்கத் தெரியாத வேறு மாநில நண்பர்களுக்கு விளக்கம் சொல்லியே வீணாப் போனேன்....

கண்ணிருந்தும் குருடனாக இருக்க முடியவில்லை....
சிலநாட்களுக்கு முன்பு......

 
இவர்கள் இல்லாத தேசம் எங்கேனும் பார்த்து அங்கே போய்விடலாம் பரதேசியாக......  

இப்படித்தான் இனி இவர்கள் காலத்தை போக்குவார்களா....? இதெல்லாம் தலைவர்கள் சொல்லித்தான் நடக்குதா...?இல்லை தலைவர்களிடம் பெயர்வாங்க விசுவாசிகளின் போராட்டங்களா?

ஈழப்பிரச்சனை இவர்களின் பிழைப்பு என்று எல்லோரும்  எள்ளி நகைக்க மாட்டார்களா?

நாம் ட்வீட்டரில்  கீச்சினாலே முகநூலில்  எழுதினாலோ
முறைக்கிறார்கள் ....இவர்கள் மட்டும் சென்னை நகரை நாறடிக்கிறார்கள் 
முன்பெல்லாம் சென்னை நகரத்து சுவர்கள் இப்படியிருந்தன சுற்றுலா வருபவர்கள் பெருமையாக புகைப்படம் எடுத்துச் செல்வார்கள்.....


இப்போதெல்லாம் சென்னை நகரத்து சுவர்கள் இப்படி இருக்கின்றன கழுதை மாடுகள் மட்டுமல்ல மனிதர்கள் கூட அருகில் செல்ல முடியாது




(அண்ணேன்..இவிங்க இப்படி இருக்கிரதாலத்தான் பேய்கூட பேய்கதை சொல்லுது...அண்ணேன்.......எனக்கு கூட பயமாத்தான் இருக்கு என்னையும் உங்களோட. கூட்டிட்டு போங்க)  

090. Onnume Puriyale - TamilWire.com

Powered by mp3skull.com
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1