google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வருத்தப்படாத வாலிபர் சங்கம்-சிரிப்பு விமர்சனம்

Saturday, September 07, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம்-சிரிப்பு விமர்சனம்


(குறிப்பு-அய்யா சாலமன் பாப்பையா ஸ்டைலில்...தேசிங்கு ராஜா- தீயா வேலை செய்யணும் குமாரு-வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய மூன்று இயக்குனர்களும் சந்திக்கும் சினிமா பட்டிமன்றம்...கற்பனை நகைச்சுவைப்  பதிவு.......)

http://i1.ytimg.com/vi/s51ab9Q9Cds/hqdefault.jpg

சாலமன் பாப்பையா= சினிமாவே அரசியலாக...சினிமாவே காதலாக...சினிமாவே பாலியல் வன்கொடுமையாக...சினிமாவே பகல்-இரவு கொள்ளையாக....இப்படி சினிமாவே வாழ்க்கையாக வாழும் என் தமிழ்குடி நண்பர்களே! அன்பர்களே! தாய்மார்களே! பதிவுவாசிகளே! மேலும் பேச அமர்ந்திருக்கும் இயக்குனர் பெருமக்களே! உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்...



http://www.kollywoodtoday.net/wp-content/uploads/2013/06/theeya-velai-seyyanum-kumaru-movie-review1.jpg

வாங்க தீயா வேலைசெய்யணும் குமாரு இயக்குனர் சுந்தர்.C அவர்களே! இவரைப் பற்றிச் சொல்லனும்னா ரசிகர்கள் நாடிபிடிச்சி குப்ப படத்தலாம் நகைச்சுவை  ராக்கெட்டுல ஏத்தி கோபுரத்தில உட்கார வச்சுடுவாறு...வாங்க..எல்லோரும் சிரிக்க நீங்க எப்படித் தீயா வேலசெஞ்சிங்க.. அதச் சொல்லுங்க

freeonlinephotoeditor

சுந்தர்.C =அய்யா நடுவர் அவர்களே! மற்றும் நண்பர்களே! என் படத்தில் காதலிக்கத் தெரியாதவனுக்குக் காதலிக்கச் சொல்லிக்கொடுக்கிறேங்க...நாட்டுல காதலிக்கத் தெரியாதவங்கதானே அதிகம்...அதில பாருங்க சந்தானத்த காதல் ட்ரைவிங் ஸ்கூல் மாஸ்டரா காட்டுனோமா..அப்புறம் அவரு காதலிக்கச் சொல்லிக்கொடுக்கிரவரே சந்தானத்தின் தங்கச்சின்னு ஒரு ட்விஸ்ட் வச்சோம் பாருங்க....எல்லோரும் சிரிச்சி தியேட்டரே இடிஞ்சி விழுந்துச்சுனா பார்த்துக்குங்க..

http://images.desimartini.com/media/versions/main/original/5bc2fbd8-c37d-4c25-874d-18fe1f57b01d_original_image_500_500.jpg

சாலமன் பாப்பையா=அது சரி..குமாரு..சாரி சுந்தரு தம்பி நீங்க அந்த ஒல்லிகுச்சி மனோபாலாவ பொம்பள புரோக்கரா காம்பிச்சு வேஸ்டி கட்டுறவயிங்கள நாஸ்தி பண்ணிப்புட்டின்களே அப்புறம் உங்க கதாநாயக சித்தார்த் எப்ப பார்த்தாலும் டாஸ்மாக் பாட்லோட வேற அலையிறாரு..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitBdBN-lwgKOYqWd3bcfNhguhG1LbdgtnE77SalpDKPygZBpVvWy2ZfjgQoKbhNlrEtWC6MfwMt-eQvmKPpxf_wG0w-I8kYaUyT2B00G68ZnvlfNkv01HezhtomUT_jRusws45HrvQ-VFw/s1600/c5bc38e18e4c282ec6c7b5675d596046_500.jpg

சரி........வாங்க...தேசிங்கு ராஜா எழில் தம்பி.......இவரப் பத்தி சொல்லனும்னா ..தம்பி அவரு படத்தில கிராமத்து காதல் சண்டை கலாச்சாரத்தக் காட்டி நல்லாவே காசு புடிங்கிட்டாறு...  நீங்க என்ன சொல்லப்போறீங்க....

freeonlinephotoeditor

தேசிங்கு ராஜா எழில்=அய்யா...நடுவர் அவர்களே நாங்க கிராமத்துப்பக்கம் போயிட்டோம் ஏன்னா அவிங்கதான் இப்ப கேனையன் மாதிரி திரியுராயிங்க...கொட்டப்பாக்குக்குப் பரம்பரை பரம்பரையா சண்டப்போடுறது அவிங்கதான்....அதுவும் பார்த்திங்கனா  எங்க கதானாயகன் நல்ல வாழைப்பழ சோம்பேறி எப்ப பார்த்தாலும் பிந்து பின்னாடியே அலைவாரு..அதனால ஒரு நடிகர் படையே படத்திலக் காட்டி எல்லாரையும் சொரிய...சரி..சிரிக்க வச்சோம்


vimal

சாலமன் பாப்பையா=எழில் தம்பி........அதுமட்டுமா பண்ணினிங்க....பழமண்டியில  யாரையா அது பிந்து மாதவியா...சிந்து மாதவியா..அம்மணிய பழரசம் பிழிஞ்சி தியேட்டருல அம்புட்டு போரையும்   ஜொள்ளு வடியவிட்டு...அவிங்களுக்குப்  பினாயில் செலவு வேற...அப்புறம் சிரிப்பு படம்னு உள்ளே வந்தா விதவிதமா குத்தி கொலை பண்ணுறீங்க..கிராமம்னா கொலைதானாய்யா...? 

freeonlinephotoeditor

சரி...வாங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம் பொன் ராம்   நாங்க வருத்தப்படாத மாதிரி..நீங்க எதையாவது சொல்லுங்க...வாங்க

http://www.topnews.in/files/Ponram_Photo.jpg

பொன் ராம்=அய்யா நீதிபதி அவர்களே! நானும் கிராமத்துக் காதலத்தான் படமா எடுத்தேங்க..கிராமத்துல பெருசுக பண்ணுற பந்தாக்கள உடைக்கிரதுதான் என் வேல அதிலயும் அழகா இரண்டு மூணு பொண்ணுகளப் பெத்து வச்சிருக்கிற பெருசுக இருக்கிராயிங்களே அவியிங்க பவுசு தாங்க முடியல அதுதான் அவிங்களுக்குப் பாடமா இருக்கட்டுமேனு...

நல்லாத்தான் இருக்குனு எல்லாரும் சொல்லுறாயிங்க..ஒன்னு ரெண்டு பேருக்குத்தான்  சிரிப்பு வரலையாம்...ம்..ம்..அவ்யிங்களுக்கு  அடுத்தப் படத்தில தியேட்டருக்கு பத்து குட்டிகளைப் போட்டு கிச்சு கிச்சு மூட்ட ஏற்பாடு பண்ணலாமுன்னு முடிவு பண்ணியிருக்கிறேன்...

http://www.tamilkey.com/wp-content/uploads/2013/07/Theni.jpg

சாலமன் பாப்பையா= சரிதான்யா..நீங்க போட்டாலும் போடுவிங்க...வேணும்னா ஒன்னு பண்ணுங்கய்யா...அரசு டாஸ்மாக்ல ஒரு குவார்டறு வாங்கி டிக்கட்டோடு கொடுத்துட்டிங்கனா அப்புட்டு பேரும் சிரிச்சிக்கிட்டே படம் பார்ப்பாயிங்க..அரசாங்கத்துக்கும் வியாபாரம் ஆனமாதிரி இருக்கும் 

http://www.tamilchannel.com/userfiles/Varutha_Padatha_Valibar_Sangam_Movie_02.jpg

அது சரிய்யா...தம்பி பொன் ராம் உங்க படத்துல அந்தப் பிந்துமாதவிய குஜிலி டீச்சரா இரண்டு சீன்தான் காட்டுநிங்க அதுக்குள்ளே உங்க தலைவரு சிவகார்த்திகேயன் வாழ்க்கையில திரி வச்சுப்புட்டிங்களே.. இன்னும் நாலு சீன்ல அம்மணி வந்துச்சுனா அம்புட்டுதான் அவரு வருத்தப்படும் வாலிபர் சங்கம் ஆரம்பிக்கவேண்டியதுதான் 


sridivya

அது சரிய்யா...உங்க படத்தப் பார்த்துப்புட்டு அம்புட்டு வாலிபப் பசங்களும்  ஸ்கூல் வாசல்ல  லவ்வு லட்டரோடு நிக்கிராயிங்கலாமைய்யா...  படிக்கப் போகிற பிள்ளககிட்ட அவிங்க டீச்சர்களுக்குக் கொடுக்கச்சொல்லி தூது விடுராயிங்கலாமையா.. 

அவிங்க யாரேனும்  யாருக்கும் லட்டர் கொடுக்கணும்னா என்கிட்ட வரச்சொல்லுங்க...என்கிட்டயும் இரண்டு பொண்ணுக இருக்கு ஒன்னு அந்தவை..இன்னொன்னு குந்தவை....

http://i1.ytimg.com/vi/lb2Jvd7hf6A/hqdefault.jpg?feature=og

அட..இருங்கய்யா....  இன்னும் நா முடிக்கவே இல்லய்யா  அதுக்குள்ளே எல்லோரும் எங்கய்யா எழுந்து ஓடுறீங்க...
  
                            thanks-YouTube-Sony Music IndiaSony Music India

(குறிப்பு-இது ஒரு நகைச்சுவைப் பதிவு...யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல)
  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1