google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வருத்தப்படாத வாலிபர் சங்கம்-சினிமா விமர்சனம்

Friday, September 06, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம்-சினிமா விமர்சனம்


(தீர்ப்பு-மிகச் சிறந்த நகைச்சுவைப் படங்களின் வரிசையில் இதுவும் ஓன்று...நாகரீகமான காமெடியும் நளினமான விரசமில்லாதக் காதலுமாக..நம்மைச் சிரிக்க வைக்கும்  வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கும் அதன் தலைவர் சிவகார்த்திகேயனுக்கும்....வாழ்த்துக்கள் நீங்க எங்கேயோ போயிட்டிங்க தலைவா...) 

http://media.tumblr.com/76f327dda1f66d4010bb2239989fc164/tumblr_inline_mse9b5NIsS1qz4rgp.jpg

இயக்குனர் பொன் ராம் படத்தின் டைட்டில் போடுவதிலையே அவரது நகைச்சுவையை திறமையை வெளிப்படுத்துகிறார்...பூமியிலிருந்து ஒரு விண்கலம் புறப்பட்டுச் சென்று ஒரு கிரகத்தில் இறங்கும் NASA விண்வெளி வீரர் அங்கே வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வரவேற்பு பதாகையைக் கண்டு திகைப்பது போல்......

http://www.tamilchannel.com/userfiles/Varutha_Padatha_Valibar_Sangam_Movie_11.jpg

கதை சிலுக்குவார்பட்டி ஊர் பெருசு சிவனாண்டி (சத்யராஜ்)-க்கும் அங்கே உள்ள வேலையில்லா வாலிபர் போஸ் பாண்டி (சிவகார்த்திகேயன்) க்கும் நடக்கும் மிக்கி மௌஸ் போன்று சிறு சிறு விக்கலும் நக்கலும்..ஒரு கட்டத்தில்   சிவனாண்டி மகள் லதா பாண்டி(ஸ்ரீ திவ்யா)யும் போஸ் பாண்டியும் காதலிக்க அவர்களது காதல் வெற்றிப் பெற்றதா...? என்று நகைச்சுவைக் காட்சிகளால் சொல்லப்படுவதுதான் ஆனால் அதை த்திரிலிங்காக சொன்ன விதம் அருமை 

sathyaraj


 
இயக்குனர் பொன் ராம்  படம் ஆரம்பிக்கும் போதே பயங்கரமான எதிர்பார்ப்பை உருவாக்குகிறார் ..... சிவனாண்டி காதலித்த தன் மகளைக் கவுரவத்திற்காக கொலைசெய்து விட்டதாக கேள்விப்பட்ட காவலர்கள் அவரைக் கைது செய்து மகளைப் புதைத்த இடத்தைக் காட்ட அழைத்துச் செல்கிறார்கள்...

அப்புறம் கதை பிளாஸ்பேக் காட்சிகளாக சிரித்துக்கொண்டே நகைச்சுவை எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகர்ந்து செல்கிறது. 
சிலுக்குவார்பட்டி ஊருக்கும் ஊர் மக்களுக்கும் நல்லது செய்ய போஸ் பாண்டி தலைவராகவும் அவரது நண்பர் கோடி (பரோட்டா சூரி) செயலாளராகவும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆரம்பித்து  ஊரில் நடக்கும் சின்னச் சின்ன தவறுகளைத் தட்டிக்கேட்க...

http://www.tamilkey.com/wp-content/uploads/2013/07/Theni.jpg

சிவனாண்டி பள்ளியில் படிக்கும் தன் மைனர் மகள் லதா பாண்டிக்கு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்வதை சங்கத்தலைவர்   போஸ் பாண்டி தெரிந்து பெண் ஆய்வாளர் மூலமாக திருமணத்தை தடுத்துவிடுகிறார் அதனால் சிவனாண்டிக்கும் போஸ் பாண்டிக்கும் பகையாகிறது 

sridivya


  அதேநேரத்தில்    சிவனாண்டியின் மகள் லதா பாண்டியும் போஸ் பாண்டியும் காதலிக்க.......இருவரும் தப்பி ஓடிவிடுகிறார்கள் மகளை சுட்டுக் கொல்ல துப்பாக்கியுடன் சிவனாண்டியும் பாய்ந்து செல்கிறார்.....

தப்பிச் சென்ற காதலர்கள் என்ன ஆனார்கள்...? உண்மையில் சிவனாண்டி அவரே ஒப்புக்கொண்டது போல் தன் மகளைக் கொன்றுவிட்டாரா...?  இதுதான் படத்தின் மர்மம்.........இந்தக் கேள்விக்கான பதிலை திரையில் பாருங்கள் 

இயக்குனர் பொன்ன் ராம் பல இடங்களில் பாராட்டுப் பெறுகிறார் கடைசிவரை படத்தின் டெம்போ-வை கசியவிடாமல் கடைசியில்...நம்மைச் சிரிக்க வைத்தே  படத்தை முடித்துவிடுகிறார்.

freeonlinephotoeditor

நாலு படங்களே நடித்துள்ள சிவகார்த்திகேயனுக்கு திரையரங்கில் இருக்கும் ஒரு கூட்டத்தையும் விசில் சத்தத்தையும் பார்க்கும் போது இன்னொரு தலைவா-உருவாகிறார் என்ற பிரமை உண்டாகிறது அவரும் தன் ரசிகர்களை ஏமாற்றவில்லை மனுஷன் 400 படங்களில் நடித்தது போல் அவ்வளவு அசால்ட்டாக நடிப்பதும் முகத்தில் ஆயிரம் பாவனைகளுடன் வசனங்களை அள்ளித் தெளிப்பதும்... அடடா..சிவகார்த்திகேயன் நீங்க எங்கேயோ போயிட்டீங்க...

பரோட்டா சூரி இப்படத்தில் எல்லாப் படங்களிலும் வருவது போல்தான் ஆயினும் இதில் அவர் நடிக்க வாய்ப்பு அதிகம் நடிக்கவும் செய்கிறார் 

http://cinemalead.com/photo-galleries/varutha-padatha-valibar-sangam-wallpapers/wmarks/varutha-padatha-valibar-sangam-wallpapers05.jpg

ஸ்ரீ திவ்யாவின் நடிப்பும் அழகும் வயதும் படத்துக்கு பெரிதும் உதவுகிறது. பாடல்காட்சிகளில் நளினமும் காதலிக்கும் போது கண்சிமிட்டலும் இன்னும் நிறைய வாய்ப்புகளுடன் அம்மணி நீ...பெரிய ஆளா வருவ 

நம்ம சத்யராஜ் அண்ணன் நடிப்பு பற்றி நமக்கெல்லாம் தெரிந்ததுதானே ஆனால் இந்தத் தலைமுறை நடிகர்களுடன் போட்டிப் போட்டு நடிப்பதும் மட்டுமின்றி எல்லா வயது  ரசிகர்களாலும் ரசிக்கப்படுவது ஆச்சரியமே 
சென்னை எக்ஸ்பிரசில் அதிகம் பேசாமல் நடித்த அவர் இதில் அதிகம் அலட்டல் இல்லாமல் நடித்திருப்பது...வித்தியாசமான நடிகர் 


                              thanks-YouTube-Sony Music Indiaby Sony Music India

பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு தேனி சுற்றுவட்டார ஊர்களின் சந்து பொந்துகளில்   சுடப்பட்டாலும் அதன் வர்ணச் சுவர்கள் இன்னும் பலவற்றால் ஏதோ ஸ்பெயின் நாட்டில் எடுக்கப்பட்ட படம் போல் மாயம் காட்டுகிறது 

இமான்  இசை பின்னணியில் தூக்கலாக இருந்தாலும் பாடல்களில் அருமை அதிலும் ஊதா கலர் ரிப்பன் பாடலும் பார்க்காதே பார்க்காதே பாடலும் எத்தனை முறை வேண்டுமாயினும்கேட்டும் கண்டும் மகிழலாம் 


                                  thanks-YouTube-Sony Music Indiaby Sony Music India

மிகச் சிறந்த நகைச்சுவைப் படங்களின் வரிசையில் இதுவும் ஓன்று...நாகரீகமான காமெடியும் நளினமான விரசமில்லாதக் காதலுமாக..நம்மைச் சிரிக்க வைத்து நமது கவலைகளை விரட்டியடிக்கும்  வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கும் அதன் தலைவர் சிவகார்த்திகேயனுக்கும்....வாழ்த்துக்கள் நீங்க எங்கேயோ போயிட்டிங்க தலைவா...என்று தீர்ப்பெழுதி ........... 

freeonlinephotoeditor

என்னடா  முக்கியமான மேட்டர் பிந்துமாதவியும் அவரது நடிப்பையும் பற்றி சொல்லவே இல்ல..என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது விரைவில்... இன்னொரு பதிவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம்-சிரிப்பு விமர்சனத்தில் பார்ப்போம்........நன்றி வணக்கம்  

***************************************************************************
இன்னும் வேணுமென்றால்....
**************************************************************************
வருத்தப்படாத வாலிபர் சங்கம் -சில விமர்சனங்கள்

(குறிப்பு-இங்கே வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பற்றிய சில வலைத்தளங்கள்,பதிவர்கள்,ட்வீட்டர்கள்...என்ன சொல்லுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்....).........மேலும்


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1