(குறிப்பு-இது விரைவில் வரவிருக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்பட நாயகன் சிவகார்த்திகேயனை வருத்தப்பட வைத்த வதந்தியின் பின்னணிஎன்ன?..........ஓர் அலசல்)
அண்ணன்மார்களே...அய்யாமார்களே! ..
அய்யோ நாட்டில் உள்ள நியாயன்மார்களே...
நம்ம வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் போஸ் பாண்டிய வதந்தியால் வருத்தப்பட வச்சது யாரு...?
நம்ம அது இது எது புகழ் நாயகன அத இதச் சொல்லி அல்லாடவிட்ட வதந்தியக் கிளப்பினது யாரு...?
நம்ம கேடி பில்லா கில்லாடி ரங்கா பட்டை முருகனை பாடாப்படுத்திய அக்கட பெத்த கொடுக்கு யாரு....?
நம்ம ஜோடி நம்பர் 1 நாயகன் சிவகார்த்திகேயனை பிந்து மாதவியுடன் ஜோடி போட்டு சிந்து பாடுறாருன்னு சந்திச் சிரிக்க வச்சது யாரு...?
இதெல்லாம் நீங்க தெரிஞ்சிக்கணும்னா....
அண்ணன் வருத்தப்படாத 28 வயது வாலிபர் சிவகார்த்திகேயன் இன்று திரைவானில் ஜொலிக்கிறாருனா அவுங்க தாத்தாவோ அல்லது தலைவா-ருக்க அப்பா அண்ணா மாதிரி யாரும் பின்னாடி இல்லைங்கோ...ஒரு சாதாரணமான தொலைகாட்சி தொகுப்பாளருங்கோ.....
கலக்கப்போவது யாரு...? அப்படின்னு நக்கலும் விக்கலுமா ரியாலிட்டி ஷோ நடத்தி (திரை)வாழ்க்கையை மெரினாவில் ஆரம்பிச்சி 3-தடவ கேடி பில்லா கில்லாடி ரங்கா-கிட்டலாம் எதிர்நீச்சல் போட்டு ஜெயிச்சு ... இன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆரம்பிச்சா...அய்யோ பாவம் அவருக்கும் அவருகூட நடிக்கிற அம்மணிக்கும் (கள்ளக்)காதல் என்று கதைகட்டிவிட்டாயிங்க....
ஆனால் அவரோ நம்ம ஒஸ்தி நடிகர் மாதிரி இல்லைங்கோ.. இப்படிப்பட்ட மேட்டருனா நம்ம ஒஸ்திக்கு அல்வா சாப்பிடுரமாதிரிங்கோ..
நம்ம வருத்தப்படாத வாலிபருக்கு ஏற்கனவே கல்யானமாயிட்டுங்கோ.. அதுவும் அவரது 3-ஆவது கல்யாண நாளாப்பாத்து இந்த வதந்தியைக் கிளப்பிட்டாயிங்களா அவரும் ரொம்ப வருத்தப்பட்டு....
"பிந்து மாதவியைக் காதலிப்பதாக கிளம்பியுள்ள வதந்திகள் வருத்தம் தருகின்றன. நான் உண்மையில் என் மனைவியை மட்டுமே காதலிக்கிறேன்"...என்று அறிவிக்கைமேல் அறிவிக்கை அவுத்துவிடவேண்டியதாயிட்டுங்கோ
இந்த வதந்தியைக் கிளப்பினது யாரு...? என்று நமக்கு தெரிந்தக் கோடம்பாக்கம் கோடாங்கிக்கிட்ட குறிகேட்டேனுங்க...
அவரும் நாக்கக் கடிச்சிக்கிட்டு உடுக்கைய ஓங்கியடிச்சு.... ஆத்தா...சொல்லு ஆத்தா...அது யாருன்னு சொல்லு ஆத்தா...னு (ஆ....த்தா..ஆத்தாதான்)ஆடிக்கிட்டே சொன்னாரு...
"அடேய்...பரிதி பையா...இதெல்லாம் தயாரிப்பாளர்க இப்ப செய்யிற தந்திரமுடா....ஒன்னு படத்துக்குத் தட போடுறமாதிரி கதைய வைப்பாயிங்க இல்லனா யாரையாவது விட்டுக் கேஸ் போடச்சொல்லுவாயிங்க...
அதுவும் இல்லனா கூட நடிக்கிற நடிகையைக் கல்யாண பத்திரிக அடிச்சி இவிங்களே எல்லா வேலையும் பார்ப்பாபாயிங்க...இல்லனா இப்படி வதந்தியைக் கிளப்புவாயிங்க...எல்லாம் படத்துக்கு ஓசி விளம்பரம்டா...
இப்பலாம் படத்துக்கு அட்வான்ஸ் கொடுக்கும் போதே இரண்டு அக்ரிமெண்டு போடுராயிங்கடா...ஒன்னு-படம் வெளிவருரதுக்கு ஒரு மாசம் முன்னாடி இப்படி அம்மணியோட புகையக் கிளப்பனும்...
இன்னொன்னு- பத்து நாளுக்கு முன்னாடி அம்மனியக் கூட்டிக்கிட்டு ஊரு ஊராப் போயி புரோமோஷன் பண்ணனும்...புரிஞ்சுச்சா....
ம்ம்ம்ம்...அடேய் பரிதி ஆத்தாவுக்கு டாஸ்மாக்ல வாங்குன ஆப்- சரக்க அப்படியே தட்சணையாத் தட்டுல போட்டுட்டு இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிப் போடா...ம்ம்ம்...ஆத்தா..மலையேற போறாடா.."

வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |