google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நமுத்துப்போன ட்வீட் வெடிகள்!

Saturday, November 10, 2012

நமுத்துப்போன ட்வீட் வெடிகள்!



ல்லா வெடியும்
நல்லாத்தான் வெடிக்குது
இந்த ட்வீட் வெடி மட்டும்
புஸ்வாணமாப் போச்சு!

இந்த ட்வீட் வெடி
எந்த ஊர்ல செஞ்சது?
பிரபலங்கள் வெடிச்சா
அது மத்தாப்பாம்  
ஆஹா..ஓகோ சல்சாப்பு.
பாவம்...
பரதேசி வெடிச்சா
அது அனுகுண்டாம்
அய்யோ குய்யோ சலசலப்பு
அள்ளிக் கொண்டு
ஜெயில் அடைப்பு..
என்னங்கடா கூத்து?

இந்த ட்வீட் வெடி
ஆட்சியாளர்களை
நாறடிக்கும்
பாம்பு மாத்திரையா...?
இல்லையேல்..  
அரசியல்வாதிகளை 
அலற வைக்கும்
கன்னி வெடியா...?
ஊழல் வாதிகளை
உயரத்தில் தூக்கி
வெடிக்கச் செய்யும்
ராக்கெட் வெடியா..?
இதைக் கண்டு ஏன்
இவர்கள் துடிக்கிறார்கள்?.

ஒபாமாவுக்கு
ஒட்டு வாங்க
உதவிச்சாம் ட்வீட்..
இந்த வெங்காய வெடி
இந்தியாவில் மட்டும்
66-A என்று அலறுதாம்.

பிரபல கீச்சர்களுக்கு
தொண்டைவலி
பேச்சு மூச்சு காணோம்
இருக்கும் ட்வீடர்களும்
பீச்சியடித்து....
சரவெடி வெடித்தவர்கள்
கைகளில் கம்பி மத்தாப்பு.

பறக்க நினைப்பதற்குள்
பருந்துகள் தூக்கிச்செல்ல
வட்டமிடுகின்றன..     

எல்லா வெடியும்
நல்லாத்தான் வெடிக்குது
இந்த ட்வீட் வெடி மட்டும்
நமுத்துப் போச்சு!




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1