google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 30 நாட்களில் முதலமைச்சர் ஆகவேண்டுமா?

Friday, November 09, 2012

30 நாட்களில் முதலமைச்சர் ஆகவேண்டுமா?


ணக்கம் அன்பர்களே! நண்பர்களே!
30 நாட்களில்
முதலமைச்சர் ஆகவேண்டும் என்று
ஆவலோடு வந்த உங்களை
அன்போடு வரவேற்கிறேன்.
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

(ஏல..சொல்லமாடா...
மாட்டுக்கு புண்ணாக்கு போடுல...)

உலகிலேயே எளிதான காரியம் இதுதான்.
இதற்காக நீங்கள் யாரும்
இமயமலை ஏற வேண்டியதில்லை!.
இரவு பகலாகக் கண் விழித்து
அரும்பாடு படவேண்டியதில்லை.
இங்கே நான் தரும் அய்ந்து புத்தகங்களை
தலைக்கு வைத்துத் தூங்கினால் போதும்....  

(ஏல...சொல்லமாடா...
மாட்டுக்கு வைக்கோல் போடுல....)    

அரசியலுக்கும் ஒழுக்கத்துக்கும்
எந்த உறவுமில்லை......
என்ற நிக்கோலோ மாக்கியவெல்லி,
இத்தாலிய அரசியல் தத்துவவாதி,
மனிதநேய எழுத்தாளரின் புத்தகம்.
இதுவே நமது முதல் புத்தகம்.
இத்தாலியை சேர்ந்த
‘நவீன அரசியல் கோட்பாடு தந்தை

இரண்டாவது புத்தகத்தில்
இங்கிலாந்து பிரதமராக இருந்த
வின்ஸ்டன் சர்ச்சில் சொல்வது...
அரசியல் என்பது நாளை, அடுத்த வாரம்,
அடுத்த மாதம், அடுத்த ஆண்டு
என்ன நடக்கப் போகிறது
என்று கூறும் திறன் கொண்டது.  
பின்னர் ஏன் அது நடக்கவில்லை?
என்று விளக்கம் கூறும் திறனும் உள்ளது.

புத்தகம் மூன்று-
அமெரிக்காவின் 40 வது ஜனாதிபதி
ரொனால்ட் ரீகன் சொல்கிறார்....
அரசியல் ஒரு மோசமான தொழில் அல்ல.
நீங்கள் வெற்றிப் பெற்றால்
பல வெகுமதிகள் கிடைக்கும்.
தோல்வி அடைந்தால்
எழுதுவதற்கான அனுபவம் கிடைக்கும்

புத்தகம் நான்கு-
அமெரிக்க சமூக ஆர்வலர்.
வில் ரோஜர்ஸ் சொல்வது-
நீங்கள் அரசியலைப் பற்றி
தீர அலசி அவதானித்தால்
ஒவ்வொரு கட்சியும் மற்றதை விட
மோசமாக இருக்கும்.

புத்தகம் ஐந்தில்
அமெரிக்க இசையமைப்பாளர்,
பிராங் ஜப்பா சொன்னது...  
பொழுதுபோக்குத் தொழில் துறையின்
கிளையே அரசியல் ஆகும்.   

இவை அய்ந்தும் புத்தகங்கள் அல்ல
அரசியல் பஞ்ச தந்திரங்கள்.

(ஏல..சொல்லமாடா...
மாட்டுக்கு தண்ணி காட்டுல...)

இந்தக் கிழவனுக்கு
வேற வேலை இல்லையா...?
எவ்வளவு முக்கியமான
அரசியல் சூத்திரங்களை
சொல்லிக்கொண்டிருக்கிறேன்...

(என்னல பாடம் நடத்துற
சில்லாட்ட மூத....
இப்பலாம் முதலமைச்சராவ
இதெல்லாம் தேவ இல்லல..
ஒரு சினிமா நடிச்சாப் போதும்ம்ல..
அந்தச் சினிமாவுல
ஒரு தாய்குலத்த ஆவிகட்டி
அது கையில நூறு கொடுத்து
கண்ணீர் விட்டாப் போதும்ம்ல...
அந்தச் சினிமாவுல
ஒரு கன்னிப் பெண்ணைக் காப்பாத்த
அம்பது தடிப்பசங்களை
அடிச்சாப் போதும்ம்ம்ல...
அந்தப் படம் பத்து நாள் ஓடிச்சுனா
அடுத்த நாளே முதலமச்சருல...
நீ என்னல பாடம் நடத்துற
மாடுகள கூட்டி வச்சு பட்டினிப் போட்டு   
கூறு கெட்ட குப்ப..
போய் வேலையைப் பாருல..)
  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1