google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காங்.கூட்டணியிலிருந்து திமுக விலகுவது சரியா?

Monday, March 18, 2013

காங்.கூட்டணியிலிருந்து திமுக விலகுவது சரியா?


இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தில், போர்க் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை தேவை என திருத்தம் செய்யவும்  நடவடிக்கை எடுக்கவும்  மத்திய அரசை தி.மு.க. அ..ழு...த்....தி..யும் அ....ழு....து.....ம்  வலியுறுத்தினாலும் மத்திய அரசோ செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறது 

அதே நேரத்தில் திமுக நடத்திய மாபெரும் பந்தையும்  இந்த விளையாட்டுக்கு நான் வரல நீயே ஆடிக்க என்று கண்டும் காணாமல் இருந்தது...இன்னும் இருப்பது.....இதனால் ஆத்திரத்தில் காங்.கூட்டனியிருந்து  திமுக விலக நினைப்பது உண்மையே  என்று நினைக்தோன்றுகிறது.  

 எதற்கும் வாய் திறக்காத மௌனகுருவோ இத்தாலியோ ...இட்லியோ  அதற்கு மட்டும் லேசாக  வாய் திறப்பது ...இவ்விசயத்தை திசை திருப்ப மத்திய அரசு நடத்தும் நாடகம் என்றும் இல்லை இல்லை இவர்கள் இரண்டு பேரும் வரும் தேர்தலை முன்னிட்டு ஓட்டுகளுக்கு நடத்தும் சும்மா நாடகம் என்போரும் உண்டு.


இத்தகைய காலக்கட்டத்தில்..ஆட்சியில் இருக்கும் காங்கிரசைப்  பகைத்துக் கொண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகப் போவதாக திமுகழகம்  சொல்வது  வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்த கதையாகாதா? இதனால் டெசோவின் முயற்சிகள் பின்னடையாதா...?  இது டெசோவுக்கு  பாதகமாகாதா? என்போரும் உண்டு.

இப்போதெல்லாம் கூட்டணியினரே ஆட்சியில் அமரமுடிவதால் கலைஞர் போன்ற அரசியல் சாணக்கியர்களுக்கு இது தெரியும் இப்போதைய நிலையில் காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி சேராது  எனவே கலைஞரின் விலகல் எச்சரிக்கை  டெசோவுக்கு  சாதகமாக அமையும் என்போரும் உண்டு 


இன்னும் சிலரோ இது கலைஞரின் சும்மா நாடகம் என்றும் இவ்வளவு நாள் கூட்டணியில் இருந்து எதுவும் சாதிக்காதது  விலகி என்ன சாதிப்பார்..? வரும் தேர்தலை முன்னிட்டு சீட்டுகளின் எண்ணிக்கைக்கு நடத்தும் காரிய மிரட்டல் என்பவர்களும் உண்டு.  

எல்லா சேனல்களிலும் ஒளிபரப்பப்படும் நாடகங்களை ரசிக்கும் தமிழ் சமூகத்தால் ஈழ விவகாரத்தில் திமுக நடத்தும் நாடகத்தை மட்டும் ரசிக்கமுடியவில்லை!
திமுக கூட்டணியிலிருந்து விலகுவார்களா? மாட்டார்களா?ன்னு பெட்டிங் வைச்சா துணிஞ்சு விலகமாட்டாங்கன்னு கட்டலாம்
கூட்டணியில் திமுக நீடிக்காது என்பது உறுதி:கருணாநிதி #புலி வருது.. புலி வருது..ன்னு ஒரு கதை அதனோட கிளைமேக்ஸ் தெரியுமா?
கூட்டணியில் இருந்து விலகுவது உறுதி - மு.க #நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரப்போகுதா தலைவரே?

இந்தியா ஐநாவில் என்ன முடிவை எடுக்கும் என்பதை விட டைம்லைனில் உள்ளோர்க்கு முக்கியமாக தெரிய வேண்டியது, திமுக விலகுமா விலகாதா? #விளங்கிரும்
கருணாநிதியை சமாதானப் படுத்த மத்திய அமைச்சர்கள் சென்னை வருகை # சரவணபவனுக்கு ஆர்டர் சொல்லியாச்சுல்ல, டிஃபன் சூடா இருக்கணும்,ஆமா!
ஒரே அறிக்கையில் ,அம்பியாகவும்,அந்நியனாகவும் மாற தலைவரால் மட்டுமே முடியும் !


அண்ணேன்..இவிங்க அரசியலே எதுவும்  என் மண்டையில ஏறமாட்டேங்குது ...எங்கயாவது அரசியல் டுடோரியல் காலேஜ் இருக்கா..? என்ன கீழ்பாக்கத்தில இருக்கா...? சரி..சரி..அதை அப்புறம் தேடிக்கலாம்....
இப்ப  உங்களுக்காவது தெரிஞ்சதைச் சொல்லுங்க

கருத்துக்கணிப்பு...............
(அரசியல் காழ்புணர்வுயின்றி நடுநிலையோடு வாக்களிப்பவர்கள் மட்டும் கலந்து கொள்ளவும்) 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகப் போவதாக திமுகழகம் சொல்வது....?

வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....
 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1