வாழ்க்கையில்
தொலைந்துபோனவைகளை
மீண்டும் நினைக்கவைத்து....
நித்திரை கெட்டது
நிம்மதி விம்மியது
பாலாவின் பரதேசி படம்
ஏன்தான் பார்த்தேனோ...?
பாலா! உமக்கே இது நியாயமா...?
நீயும் ஒரு பரதேசிதான் என்று என்னை
சொல்லாமல் சொல்லிவிட்டாயே...?
எங்கேயோ ஒரு கிராமத்தில் பிறந்து
எங்கேயோ ஒரு கிராமத்தில் வளர்ந்து
எங்கேயோ ஒரு நகரில் படித்து...
முப்பது வருடங்களுக்கு முன்பு
அரசு வேலைதேடி சென்னை வந்து ..
அன்று அதுவும் குதிரைக் கொம்பு
அதனாலே அகப்பட்டுக் கொண்டேன்
முதலாளிக்கு நல்லதொரு தொழிலாளியாக
அன்றிலிருந்து இன்றுவரை
வயிறு நிரம்புகிறது வாழ்க்கை ஓடுகிறது....
ஆனாலும்....
பாலாவின் பரதேசி படம்
ஏன்தான் பார்த்தேனோ...?
ஏதோ ஓன்று தொலைந்தது
அதுவும் என்னவென்று தெரிந்தது...?
அழிந்துபோனது சுயமரியாதை
குலைந்து போனது என் சுதந்திரம்
கலைந்து போனது என் உரிமைகள்
தொலைந்து போனது தன்மானம்
பாலாவின் பரதேசி படம்
ஏன்தான் பார்த்தேனோ...?
என்னுள் தூங்கிக்கிடந்த
தன்நம்பிக்கைய
தட்டி எழுப்பிவிட்டது...
விழிப்புணர்வை விதைத்துவிட்டது
...............................பரிதி.முத்துராசன்
***********************************************************************
பரதேசி-சில விமர்சன கீச்சுக்கள்.....
பட்டாசு
இந்த உடையும்,அடியும் மட்டும் தான் இல்லை,மத்தபடி எல்லாம் ஒண்ணுதான் #பரதேசி படத்தை பார்த்தபோது,சாப்ட்வேர் நண்பர் சொன்னது.
தமிழ் திரு
M.D.Muthukumaraswamy
கானா பிரபா
நான் பிறந்தது முதல் பால்யத்தின் முதற்பாகம் தேயிலைத்தோட்ட வாழ்வியலில் இருந்ததும் பரதேசி படம் நெருக்கமாக ஈர்க்க ஒரு காரணம்
sowmya
பரதேசி நல்லாருக்குனு எல்லாரும் சொல்லும்போது முரளி இல்லாம போய்டாரேனு தோணுறது எனக்கு மட்டும்தானா?
சினிமா விகடன்
***************************************************************************
பாலாவின் இந்த செயல்பாடு ஒரு நல்லத்திரைப்பட கோட்பாடும் அல்ல. அடிப்படையில் இது மனித உரிமைமீறல். முதலாளி தொழிலாளி பிரச்சனையாக பார்க்கவேண்டும்.
..............................மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர். அ.மார்க்ஸ்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |



