google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தேசிங்கு ராஜா-சினிமா விமர்சனம்

Friday, August 23, 2013

தேசிங்கு ராஜா-சினிமா விமர்சனம்


(தீர்ப்பு-நகைச்சுவையில் எந்தனை சுவைகள் உண்டோ அத்தனையும் அளவாகக் கலந்த சுவையான பல்சுவை பழரசபானம்...அரங்கம் அதிரும் கொலைகொலையா.... சிரிப்பு சரவெடி... கொஞ்சம் காதல் நிறையச் சிரிப்பு.)


desinguraja

தேசிங்கு ராஜா-திரைப்படத்தின் கதை சாதாரணமாக இருந்தாலும் இயக்குனர் எழில் அதை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை காமெடி வசனங்களாலும் காட்சிகளாலும் நம்மைச் சிரிக்க வைத்து ஒரு சாதனை படைத்துள்ளார் 



கிளியூர் புலியூர் என்ற கிராமங்களுக்கு இடையில் 50 ஆண்டு பரம்பரைப் பகை........ கிளியுரைச் சேர்ந்த இதயக்கனி (விமல்) அப்பாவை புலியூரைச் சேர்ந்த தாமரை (பிந்து மாதவி) யின் அப்பா சீனா தானா அம்பலம் கொலைசெய்ய..பதிலுக்கு இதயக்கனியின் தாத்தா (வினுச்சக்ரவர்த்தி) தாமரையின் அண்ணனைக் கொலை செய்ய...சீனா தானாவும் அவரது தம்பி தாமரையின் சித்தப்பா (ரவி மரியா) வும் இதயக்கணியைக் கொலை செய்யக் காத்திருக்க....



அய்யோ பாவம் இதயக்கனியோ தாமரையைக் காதலிக்க...சந்தர்ப்ப வசத்தால்   இருவரும் பழமண்டியில் ஓன்று சேர...அவரோ தாமரையை பெண்கேட்டு சீனாதானாவை சந்திக்க அய்யனார் கோயிலுக்கு வர...இதுதான் சமயமென்று  சீனா தானாவும் சித்தப்பாவும்  தாமரை மூலம் தில்லு முல்லு பண்ணி இதயக்கனியைக் கொல்ல நினைக்க...அவரோ தாமரை கழுத்தில் தாலிகட்ட....நடந்த தள்ளு முள்ளுவில்....

freeonlinephotoeditor

இதயக்கனியின் கிளியூர்காரர்கள் தாமரையின் அப்பா சீனா தானாவை தாமரையின்  கண்ணெதிரிலேயே கொல்ல...அதனால் தாமரை பழிவாங்கும் எண்ணத்துடன் மனைவியாக இதயக்கனி வீட்டுக்கு வாழ வர....அப்பாடா.................
தாமரை தன் கணவன் இதயக்கனியை கொன்றாளா...? 
அவர்கள் இருவரும் ஓன்று சேர்ந்தார்களா....? 
கிளியுரும் புலியுரும் ஓன்று சேர்ந்ததா..? என்பதைத் திரையில் தெரிந்துகொள்ளுங்கள் 

http://i1.sndcdn.com/artworks-000050873452-tse343-crop.jpg?5ffe3cd

தேசிங்கு ராஜா படமுழுக்கச் சிரிப்பு நடிகர்கள் பட்டாளம் அதனால் விமலுக்கும் பிந்துமாதவிக்கும்  காதல் செய்வதோடு  பெரிதாக ஒன்றுமில்லை.சூரி,சிங்கமுத்து,சிங்கம்புலி,ஞானவேல்..என்று இவர்கள் காமெடி கொஞ்சம் சொரிந்தாலும்...ரவிமரியாகூட  வில்லன் போர்வையில் சிறந்த சிரிப்பு வில்லன் நடிகராக... 
ஆக நிறைய நேரம் சரியான சிரிப்பு...ஆனால் லாஜிக் பார்க்கக்கூடாது...சின்னப்புள்ளத்தனமா சிரிக்கலாம்...




படம் ஆரம்பிக்கும் போதே மருதமலை மாமணியே...என்று ஆரம்பித்து விமலுக்கு மனப்பெண் வேண்டி  சிங்கம்புலி அலகு குத்தும் காட்சி..பாட்டு முடியும் போதே... பிந்துமாதவியுடன் காதல்...அப்புறம் கொஞ்ச நேரத்தில் பழமண்டியில் விமல் ஜூஸ் போட்டுவிடுகிறார்...(அப்புறம் எப்படி இப்படி உதகை புகைவண்டி மாதிரி படத்தை இயக்குனர் இழுத்துக்கிட்டு....போனார்....? கில்லாடி இயக்குனர்தான்..மொக்கனாலும் சக்கப்போடு போடுகிறார்.)



freeonlinephotoeditor

இதயக்கனி யார் என்று தெரியாமல் சிங்கம் புலியை சூரியும் சிங்கமுத்துவும் கல்யாண வீட்டில் கடத்திச் செல்வது...(ஊரே கொலை செய்யத் தேடும் இதயக்கனியை இவர்களுக்கு அடையாளம் தெரியாதா..?.

(அப்படி இப்படிக் கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது...இப்படி நிறையக் காட்சிகளில் இயக்குனர் அழாகாக நம்மைப் படத்தோடு சேர்த்து  கொலையும் செய்யப் பார்ப்பார்... ஆனாலும் அவைகள் தெரியாவண்ணம் வசனங்களால்..காட்சிகளால் நம் கண்ணைக் கட்டிவிடுகிறார். )
 
கிளைமாக்ஸ் கபடிக்காட்சியும் அங்கே கிரிக்கெட் போன்று ஆட்டம் போடும்  சியர்கேர்ள்ஸ்  அழகிகளும்...அங்கே இசைக்கப்படும் கங்கணம் பாடலும் அதற்கு ரவிமரியா போடும் ஆட்டமும் இயக்குனரின் நல்ல நகைச்சுவை ரசனைக்குச்    சான்று. 



                                thanks-YouTube-by Prasath Rithik


விமலின் முதலிரவை தடுக்க சூரியும் அவரது ஆட்களும் செய்யும் விஷப்பரிட்சை கொஞ்சம் ஓவராக இருந்தாலும் விரசமில்லாமல் இருப்பதால் இயக்குனருக்கு...ஒ... போடலாம் (அண்ணன் அட்ராசக்க மாதிரி படத்தின் நகைச்சுவை வசனங்களை எழுத ஆரம்பித்தால் முழுத் திரைக்கதையும் எழுத வேண்டிவரும்)


freeonlinephotoeditor
படத்தில் நிறையத் தமிழ் பழைய எம்.ஜி.ஆர் பாடல்களில் வரிகள் மற்றும் பாப் பாடல்கள் இருந்த போதிலும்...அண்ணன் D.இமான் இசையால் அசைத்தியுள்ளார்...யுகபாரதியின் வார்த்தைகளில் பாடல்கள் அத்தனையும் இனிமை....POM...POM...பாடல் படத்தில் முடிவில் தனிப்பாடலாக வருகிறது....தாமிரபரணி பானுவின் குத்தாட்டத்தைவிட பாட்டு நன்றாக இருக்கு...ஒரு ஓர ஓர பார்வை....


bindu

படம் எனக்குப் பிடித்திருக்கு...கொஞ்சம் குழந்தைத்தனமாக இருக்கு...சீரியஸான சில்லி காமெடிஎன்பதால்  நம்ம அதிமேதாவிதனங்களை மூட்டைக்கட்டி ஓரமாக வைத்து விட்டால்...படம் முழுக்கச் சிரிப்பு வரும் அதே நேரம் நாம் சிந்திக்க ஆரம்பித்தால்...சிரிப்புக்கு பதிலாக வெறுப்பு வரும்..

தீர்ப்பு-நகைச்சுவையில் எந்தனை சுவைகள் உண்டோ அத்தனையும் அளவாகக் கலந்த சுவையான பல்சுவை பழரசபானம்...அரங்கம் அதிரும் கொலைகொலையா.... சிரிப்பு சரவெடி... கொஞ்சம் காதல் நிறையச் சிரிப்பு.

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1