google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ராஜா ராணி-சிறப்புப் பார்வை

Saturday, August 24, 2013

ராஜா ராணி-சிறப்புப் பார்வை


(இது விரைவில் திரைக்கு வரவிருக்கும்  ஆர்யா-நயன்தாரா இணைந்து நடித்த அட்லியின் வதந்தி விளம்பரத்  திரைப்படம் ராஜா ராணி பற்றிய ஒரு சிறப்புப் பார்வை.கொஞ்சம் நகைச்சுவைப் பதிவு...அப்பாடக்கர்கள் யாரும் தப்பா எடுத்துக்காதீங்க...)



அதுல பாருங்க...ராஜா ராணி படத்தின் தலைப்பு எதுக்கு வச்சாங்க...? எதுவும் தெரியலைங்க..?.ஆனால் எங்க ஊரு பக்கம் ராஜா ராணி என்பது கரகாட்டம் மாதிரி ஒரு கூத்து அந்தக் காலத்தில நடத்ததாகப் பெருசுக சொல்லும்...அந்த கூத்துல ராஜா வேடம் ராணி வேடம் போட்டவங்க மோதலுடன் ஒருவரை ஒருவர் சந்தித்து..அப்புறம் திருமணம் செய்து கொள்வது போல இருக்கும்.........


rajarani

ராஜா ராணி டீசர் காணும் போது பெருசு சொன்னது சரியாகத்தான் இருக்கு ஆனால் தலைகீழ் மாற்றமாயிருக்கு.......இங்கே கல்யாணம் ஆனவங்க மோதிக்கிறாங்க...ஊடலா?.........There is  LIFE after LOVE failure


                         thanks-YouTube-by FoxStarIndiaFoxStarIndia

ராஜா ராணி திரைப்படம் பற்றிச் சொல்லும் போது இயக்குனர் அட்லி என்ன சொல்றாருனா...ஆர்யாவும் நயன்தாராவும் ராஜா ராணி...அவுங்க திருமணத்துக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதைச் சொல்றேங்க...(அட..திருமணத்துக்குப் பிறகு என்ன நடக்கும்...? பகலில் ராஜா அடிவாங்குவார்..நைட்ல ராணி அடிவாங்குவாள் ) அதனால எல்லாப் புது மனத் தம்பதிகளும் கட்டாயம் பார்க்கனும்ங்கிராருங்க....  
அட்லி அண்ணேன்..கொஞ்சம் முரனா இருக்கே...?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2tpCq_OD0a9sP951OWrsnm_sazr8N3k3Bfm7_Fot1U7WgqjvQzvZfK00Dq_0zkLc3Hg4cvQb2O3VUNmk0WiXQ84vWbw9fc-9GNzPNs0yWkMPGIY7RAE-UM4bN3Ws-LVZimLcS6JKe5HI/?imgmax=800

(அது சரி அட்லி அண்ணேன்... உங்க படம் பார்க்கிறதுக்காக யாரையாவது புதுசா புடிச்சிக்கிட்டா வரமுடியும்...வேணும்னா பழைய பொண்டாட்டிய புதுசா பாலிஸ் போட்டு கூட்டிட்டுப் படம் பார்க்க வரலாமுங்களா...?)



ராஜா ராணி திரைப்படம் பற்றிச் சொலவதானால் புதுமையாக விளம்பரம் செய்வதாகச் சொல்லி....ஒரு நடிகைகயை அவமானப் படுத்திவிட்டார்கள் படக்குழுவினர் ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் என்று நிஜப் பத்திரிக்கை அடித்து விளம்பரம் செய்தவர்கள்...சினிமாவே ஆனாலும் நீங்க கொடுக்கிற சம்பளம் நடிப்பதற்குதான் இப்படி விதண்டாவாதமாக விளம்பரம் தேடுவதற்கு அல்ல என்பதை.........

https://lh6.googleusercontent.com/-TMor_A78Dng/UY9DexP4W9I/AAAAAAABBdY/UdNPRtHq_LA/w500-h308-no/image_1.jpg

படத்தின் இசை வெளியீட்டி விழாவில் நயன் கலந்துகொள்ளாமல் கடுப்பு ஏற்ப்படுத்திவிட்டார்....(இப்படியே உஷாரா இருந்துக்க அம்மணி...ஆனால் நிஜத்தில ஒஸ்தி நடிகங்ககிட்டவும் பிஸ்கோத்து ஆட்டம் போடுறவிங்ககிட்டேயும் ஏமாந்திடு...?)


                                  thanks-YouTube-by FoxStarIndia

அட்லியின் இயக்கத்தில் வரும் ராஜா ராணி  படத்தில் ஆர்யா-நயன்தாரா முன்னணி வேடத்திலும் ஜெய்,நஸ்ரியா நசீம்,சத்தியராஜ்,சத்யன்,மனோபாலா இவர்களுடன் சந்தானமும் காமெடி கலக்கல் வெடி வெடிக்க...சாரி...நடிக்க வருகிறார்கள்........


                               thanks-YouTube-by FoxStarIndia

படத்தின் முன்னோட்ட காணொளி வெளிவந்த ஒரே நாளில் ஒரு லட்சம் பார்வைகள் என்பது படத்தின் மீது சினிமா மக்களுக்கு உள்ள எதிர்பார்ப்பை காட்டுகிறது.(அண்ணேன்...அது நயன் மேல் உள்ள ஒயின் போத...நம்ம சினிமா மக்களுக்கு இப்படிச் சிங்காரி..சாரி...சிங்காரப் போதை எப்பவும் தெளியாது.)

http://www.kollywoodtoday.net/wp-content/uploads/2013/05/raja-rani-first-look-teaser.jpg

படபூஜைக்கு உலகநாயகரை அழைச்சவங்க....சூப்பர் ஸ்டார் ரஜினியை அழைத்துத் திரையிசை வெளியிட நினைத்த இயக்குனரை பாராட்ட வேண்டும் (அவர் வரவில்லை...இது அதுமாதிரி சும்மாங்காட்டியும் என்று நினைத்தாரோ....என்னவோ...?) இசை-ஜி.வி.பிரகாஷ் குமார் முதலில் வெளியிட்ட நா.முத்துகுமாரின் வார்த்தைகளில்...கானாபாலா பாடும் ஹே...பேபி  சந்திரபாபுவை நினைவுப்படுத்துகிறது...மொத்தம் ஏழு பாடல்களில் ஏழு ஸ்வரங்களும் காட்டுகிறாரா...? மக்களே நீங்கதான் தீர்மானிக்கவேண்டும்


beach

அதிரடி இயக்குனர் முருகதாஸ் தயாரிப்பு என்பதாலும் அவரது வழிகாட்டும் பாதை புது இயக்குனர் அட்லிக்கு இருக்கும் என்பதாலும் படம் தடம்புரளாமல் சீராகச் செல்லும் நம்மளையும் சீராட்டும்...டும்,,.. என்று  நம்புவோமாக...(அட்லி அண்ணேன்...வீட்டுல வாங்குறது போதாதுன்னு அதத் தியேட்டரிலும்  காட்டி மானத்த வாங்கிடாதீங்க... அவ்வவ்வ)
   *************************************************************************
இங்கே...........
யார் இந்தப் பாட்டைக் கெடுத்தது....தலைவா?


இது தலைவா திரைப்படத்தில் இடம்பெற்ற யார் இந்தச் சாலையோரம்....பாடல் பற்றிய ஒரு சிறப்புப் பதிவு.....இசைப்பிரியர்களுக்காக..........................மேலும் 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1