(குறிப்பு-இது கதிர்வேலன் காதல் என்ற படத்தின் பெயர் ஏதோ வித்தியாசமான காதலாக இருக்குமோ? என்ற உள்ளுணர்வில் எழுதிய பதிவு....கொஞ்சம் நகைச்சுவை.....நிறைய அறுவை )
சுந்தரபாண்டியன் புகழ் இயக்குனர் எஸ்ஆர் பிரபாகர் இயக்கும்...
இது கதிர்வேலன் காதல் படத்தில்....
வேலை வெட்டியில்லாதவராக உதயநிதி ஸ்டாலின் நடுத்தரவர்கத்து நாயகியாக நயன்தாரா மீது காதல் கொள்பவராக நடிக்க.......
காரைக்குடியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் படபிடிப்பு வேலைகள் சுறுசுறுப்பாக ஆரம்பித்துவிட்டன
நயன் தனது கிளாமர் விழிகளால் சூடேற்றும் பாடல் காட்சியும் அங்கே சுடச் சுட சுடப்படுவதாக சூடான செய்தி.
(அண்ணேன்.....அண்ணேன் காரைக்குடிகாரங்க கொடுத்துவச்சவிங்க...காசு கொடுக்காமலே அடிக்கடி ஜொள்ளுவிடுறாயிங்க..நம்ம இருக்குறது கோடம்பாக்கம் ஒரு கோழியக்கூட..ச்சே..ஒரு கோலிவுட்டுக்காரங்களையும் இங்கே கானோம்...ண்ணேன்)
thanks-YouTube-by
படத்தின் இன்னொரு சிறப்பு மன்மத ராஜா குத்தாட்டப் புகழ்... சாயா சிங்..அப்ப வள்ளி-தெய்வானை மாதிரி கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா...?
இப்பலாம் காதலையும் அரசியல்வாதிங்க... சாதிக்காரங்க உள்ளப் புகுந்து சாக்கடையா ஆக்கிப்புட்டாயிங்க..நிஜத்திலையும் நிழலுளையும் நாற்றம்..கதிர்வேலன் அண்ணேன்...உங்க காதல் எப்படி?
(அது தெரியாது இது கதிர்வேலன் காதல்)
சரி..அண்ணேன் உங்க காதல் கவித்துவம்மா இருக்குமா?
(அது தெரியாது இது கதிர்வேலன் காதல்)
அண்ணேன்...சொன்னதையே சொல்லிட்டு இருக்கிறீங்க..
படத்தில் சந்தானம் இருப்பது இப்போதே நகைச்சுவை நெடியடிக்கிறது.... இன்னொரு ஒ.கே. ஓ.கே.........வா? விரசமில்லாத காதல் என்றால் எங்களுக்கும் ஓகே..தான் அதுசரி..கதிர்வேலன் அண்ணேன்...உங்க காதல் எப்படி?
(அது தெரியாது...இது கதிர்வேலன் காதல்)
அண்ணேன்..இப்பலாம் காதல் படம்னாலே காதலர்கள்கூட தியேட்டர் பக்கம் ஒதுங்கமாட்டேங்கிராயிங்க..வேற வழியில்லாம நாங்க பிளாக்கர்கள்தான் பாத்துத் தொலைக்கவேண்டியிருக்கு... அதனால்தான் கேட்கிறேன்..கதிர்வேலன் அண்ணேன்...உங்க காதல் எப்படி?அது தெரியாது...இது கதிர்வேலன் காதல்
அடேய் தம்பி அறிவுச்செல்வா...இவரு என்னடா சொன்னதே சொல்லிட்டு இருக்காரு இப்பம்லாம் படம்பார்க்கிறது நயாப்பைசாவுக்கு பிரயோசனமில்ல...பணம் மதிப்பு வேறு இல்லையாம் போரப்போக்கப் பார்த்தா தியேட்டர்காரங்க இந்தியாவுலகூட டாலர்லதான் துட்டு கேட்பாயிங்கப் போலத் தெரியுது....குப்ப படம்லாம் பார்த்து அப்புறம் அழற்சிக்கு வேற தண்டம் அழவேண்டியிருக்கு...
(பரிதி..அண்ணேன்..பிள்ளயார் கோயில் உண்டியல் மாதிரி உங்க பிளாக்ல ஓரமா ஏதாவது உண்டியல் வையிங்க..."அம்மா..தாயே..அய்யா..படம் பார்கனும் யாராவது வசதிப்பட்டவங்க உண்டியல் போடுங்க....")
அடேய்..தம்பி அறிவுச்செல்வா...உனக்கு ஏண்டா இப்படி பரதேசி...
பண்டாரம் மாதிரி புத்தி போகுது..இதுக்கு பதிவு எழுதாம இவ்விடம் கம்பூட்டர் ஜோசியம் பார்க்கப்படும் என்று பிளெக்ஸ் பேனர் வைச்சிக்கிட்டு லேப்-டாப்போடு பெருமாள் கோயில் வாசலில் உட்காரலாம்டா...பன்னாட..(அட..போயா புண்ணாக்குப் பதிவரே...இரண்டும் ஒண்ணுதான்
படுத்துக்கிட்டு போத்திகிட்டாலும் போத்திக்கிட்டு படுத்தாலும்
எல்லாம் ஒன்னுதானு எங்க வினுதாத்தா எப்பவோ சொல்லிட்டாரு அவ்வவ்வ...ஒழுங்கா விமர்சனம் எழுதுங்க அண்ணேன்..இல்லேனா உங்க கருத்துப்பெட்டி குப்பத்தொட்டி ஆயிடும்...ஆங்...)
சரிடா தம்பி நாளைக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் -த்திலருந்து வாங்கனு கூப்பிட்டுயிருக்கிராயிங்க நான் போகப் போகிறேன் நீயும் வர்ர்ர்ர்...ரீயா
ஆங்..எனக்கென்ன பைத்தியமா..? நீங்க பார்த்துட்டு வந்து எழுவுங்க..உங்கள மாதிரி பிளாக்கருக எல்லோரும் என்னத்த எழுவுரீங்கனு படிச்சிப்புட்டு...அப்புறம் நான் போயிப் பார்த்துக்கிறேன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |
