(தீர்ப்பு-இது காதல் சாக்ரடிஸ் A.C.துரை இயக்கி சொன்ன இன்றைய தலைமுறை (அர்ஜுன்-திவ்யா) காதல் தத்துவத்தையும் அதன் வலியையும்.. ஆனால் வலி யாருக்கு? படம் பார்ப்பவர்களுக்கா? படத்தில் நடித்தவர்களுக்கா? படத்தை எடுத்தவருக்கா? என்று....)
பொன்மாலைப் பொழுது படத்தின் கதை.....பள்ளியில் +2 படிக்கும் 16 வயதில் வரும் காதல் ஆரோக்கியமானதா.. .? பிஞ்சுக்காதல் நஞ்சு போன்றதா? என்று மிகப்பெரிய சமுக அக்கறையுடன் சொல்ல நினைத்து அவளை..ச்சே..அவலை நினைத்து உரலை இடித்த கதை
அர்ஜுன்-திவ்யா (ஆதவ்-காயத்திரி) ஒரே பள்ளியில் +2 படிக்கும் நண்பர்களாக..ஒருநாள் திவ்யா தன் பள்ளித்தோழன்...? அர்ஜுன் மிதிவண்டியில் முன்னாடி அமர்ந்து குல்பி ஐஸ் வாங்கிச் சப்பிக்கொண்டு போவதை..திவ்யாவின் அப்பா பழைய இரும்புவியாபாரி வேதநாயகம் (அருள்தாஸ்) தன் கண்ணால் கண்டுவிட...
ஆத்திரத்தில் அவர்கள் பள்ளிக்கு சென்று அர்ஜுனை வகுப்பறையில் அத்தனை பேர் மத்தியிலும் அர்ஜுனைச் செருப்பால் அடித்திட...சும்மா நண்பன்-நண்பியாக இருந்த இருவருக்கும் காதல் தீ காட்டு தீயாகப் பற்றிக்கொள்கிறது...அப்புறம் நள்ளிரவில் தனிமையில் சந்தித்துக் குல்பி ஐஸ் வாங்கி ஒருவர் மாறி ஒருவர் மாறி சப்புக்கொட்டி (அண்ணேன்..இதுக்கு வேற வார்த்தை இருக்கிறதா? இப்படி எழுத ஒரு மாதிரி இருக்கு?) தின்னும் அளவுக்கு வளர்ந்துவிடுகிறது....
இதற்கிடையில் ஒரு பிளாஸ்-பேக் கதையாக அர்ஜுன் அப்பா (கிஷோர்) தன் மகன் அர்ஜுன் போன்று சிறுவயதில் சிகரெட் குடிப்பதையும் அவரது தந்தையால் காதல் செய்வதையும் தட்டிக்கேட்ட..அதனால் அவர் தன் மகனையும் தட்டிக்கேட்டால் எங்கே இன்னும் மோசமாகிவிடும் என்றும் அவரைப்போல் தன் மகனுக்கும் காதல் தோல்வி வந்துவிடக்கூடாது என்று தன் மகனுக்கு சிகரெட் பிடிக்கக் காசும் காதிலியுடன் பேச செல்-போனும் வாங்கிக் கொடுத்து காதலை வளர்க்கிறார்.......
வீடு தேடி வந்து அர்ஜுன் திவ்யாவை சந்திப்பதை வேதநாயகமும் அவரது மகன் பீட்டரும் போலிஸ் உதவியுடனும் நண்பர்கள் உதவியுடனும் அர்ஜுனை பஞ்சராக்க....பஞ்சராக்க அய்யோ பாவம் அவர்கள் காதல் வீங்கி அவ்வப்போது டமால் டுமீர் என்று வெடித்துக்கொண்டே......
இரண்டு நாள் தன் காதலி திவ்யாவை காணா முடியாமல் வீட்டை மறைத்து கட்டிவைத்துள்ள ஓலைத் தடுப்பில் அர்ஜுன் தீ வைக்க...நீதிமான் அர்ஜுனை சைக்கியாரிஸ்ட்டைப் பார்க்க தீர்ப்பு எழுத..அவனும் மனம் மாறி தன் காதலியை மறக்க அவன் பெற்றோர்களுடன் வேறு ஊருக்கு ரயில் வண்டி ஏறும் போது..........
அங்கே மீண்டும் திவ்யா அர்ஜுனைத் தேடி வர...அவர்கள் காதல் என்ன ஆனது...? காதலர்கள் இணைந்தார்களா...? என்ற மாபெரும் கேள்விக்கு விடை தெரிந்து கொள்ள..படத்தைப்பாருங்கள்
கிஷோரின் யதார்த்தமான நடிப்பு,அருள்தாசின் ஆக்ரோசமான அடிப்பு,ஆதவ் கண்ணதாசனின் காதல் துடிப்பு,காயத்திரியின் வசீகர விழிப்பு,சத்யாவின் இனிமையான இசை (அடிக்கடி முடி....)பாடல் வடிப்பு, ராஜவேலின் கேமரா படபிடிப்பு....இப்படி இவைகள் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீர் போன்று வீணாப் போனது......சில விரசமான காட்சிகள் வைத்த இயக்குனரால்
வீக்-எண்டு பார்ட்டி, சரக்கு அடித்தல்,புகை பிடித்தல்,காதலர்கள் குல்பி ஐஸ் சப்புவது,உதட்டு முத்தங்கள்,காதலர்கள் ஒருவரை ஒருவர் பொது இடத்தில் ஓணான் போல் ஓட்டிக்கொள்வதும் அவர்கள் பெற்றோர்கள் கயிறு இழுக்கும் போட்டி போன்று பிரிக்க அவர்களை அங்கும் இங்கும் இழுப்பதும் .....இப்படியே பால்யவயதில் காதலித்தல் போன்ற இன்றைய அவலங்களைச் சொல்ல வந்த இயக்குனர் துரை அவர்களைப் பாராட்டலாம்... ஆனால் அவைகளை அவர் சொன்ன விதம் படம் பார்க்கும் போது கொஞ்சம் நம்மை நெளிய வைக்கிறது.. அவர் சொல்ல வந்ததை நம்மால் ஜீரணிக்க விடாமல் அது தடுக்கிறது (அதற்கும் துரை சொல்வது........தலைமுறை இடைவெளி-GENERATION GAP )
ஆசிட் காதல்,சாதிக்காதல்,இயக்குனர் வீட்டு போலிக் காதல்,ஆதலால் காதல் செய்வீர் சூது காதல்,...இப்படி நிறையக் காதல்களைப் பார்த்திருப்பீர்கள் இதுவும் ஒரு புதுமையான பிஞ்சுக் காதல்...உங்கள் மகன் அல்லது மகள் +2 படிக்கும் வயதில் இருந்தால் அவர்கள் காதல் செய்வதாக உணர்ந்தால் கட்டாயம் நீங்கள் பொன்மாலைப் பொழுது படம் பார்க்க அழைத்துச் செல்லலாம்..சில நேரங்களில் அவர்கள் காதல் முடிவுக்கு வரலாம் சில நேரங்களில் அவர்கள் காதல் இன்னும் மோசமாக வளரலாம்
பொன்மாலைப் பொழுது-இது காதல் சாக்ரடிஸ் A.C.துரை இயக்கி சொன்ன இன்றைய தலைமுறை (அர்ஜுன்-திவ்யா) காதல் தத்துவத்தையும் அதன் வலியையும்.. ஆனால் வலி யாருக்கு...? படத்தில் நடித்தவர்களுக்கா? படத்தை எடுத்தவருக்கா? அல்லது படம் பார்ப்பவர்களுக்கா...? என்று....கடைசிவரையில் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை உங்களால் முடிந்தால்....
(குறிப்பு- படம் பார்க்கவே பயமாயிருந்திச்சு...ச்சே... என்னக்கொடுமையடா இது? திரையரங்கில் என்னைச் சேர்த்து எட்டு பேரு...எல்லோரும் என்னைப்போல் தனி ஆளு..ஒரு காதல் ஜோடிகளக்கூட காணோம்...ம்..ம்..அப்புட்டு பேரும் நம்மல மாதிரி பிளாக்கரா இருப்பாயிங்களோ? )
div id="f1_container">
விரைவில்................
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
சினிமா விமர்சனம்
சினிமா விமர்சனம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |
