இதுவரை முன்னணி காமெடி நடிகராக கலக்கிய நடிகர் விவேக் சீரியஸான காதானாயகனாக நடித்து நாளை வெளிவரும் படம்.......நான்தான் பாலா கதாநாயகர் வரிசையில் நடிகர் விவேக் தேறுவாரா? வெற்றி பெறுவாரா....? என்று.
தமிழ் சினிமாவில் நடிகர் சந்திரபாபு முதல் நிறைய காமெடி நடிகர்கள் கதாநாயகராக நடித்து வெற்றிபெறாமல் தொடர்ந்து கதாநாயகனாகவும் நடிக்கமுடியாமல் காமெடி நடிகராகவும் தொடர முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் மாறியவர்கள் ஏராளம்........
நான்தான் பாலா படத்தில் கும்பக்கோணம் பெருமாள் கோயில் ஆத்திக பிராமண பூசாரியாக சமஸ்கிருதம் பேசி நடித்துள்ள விவேக் நடிகை ஸ்வேதாவுடன் காதல் செய்தும் கலக்குகிறார் கூலிப்படை ரவுடிகளுடன் சண்டை செய்தும் மிரட்டுகிறார்
முழுக்க இது கமர்சியல் படம் போல் தெரிந்தாலும் இயக்குனர் கண்ணன் விருது இயக்குனர் பாலாவின் உதவியாளராக இருந்தவர் என்பதால்....நான்தான் பாலா படமும் விருது வாங்கும் தரத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதுவரை கலைவாணர் போல் மூடநம்பிக்கைகளை தன் படங்களில் நையாண்டி செய்த சின்ன கலைவாணர் என்றுஅழைக்கப்படும் நடிகர் விவேக் நான்தான் பாலா படத்திற்குப் பிறகும் கதா நாயகராகவும் காமெடி நாயகராகவும் தொடர்ந்து........
உலக மக்கள் நலனுக்காக விளம்பர வெளிச்சமின்றி இதுவரை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு பசுமை புரட்சி செய்துக்கொண்டிருக்கும் நடிகர் விவேக்......
கதாநாயகர் வரிசையிலும் வெற்றி பெற வாழ்த்துவோம்.
இங்கே.............
நான்தான் பாலா-சினிமா விமர்சனம்
http://parithimuthurasan.blogspot.in/2014/06/naanthaanbala.html
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |