google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: முண்டாசுப்பட்டி-சினிமா விமர்சனம்

Friday, June 13, 2014

முண்டாசுப்பட்டி-சினிமா விமர்சனம்


முண்டாசுப்பட்டி-கிராமத்து மூடநம்பிக்கையை கதைக்களமாக வித்தியாசமான நகைச்சுவையுடன் கொஞ்சம் காதல்,நிறையக் கள்ளக்காதல் ,கொஞ்சம் சாமி சென்டிமென்ட்,கொஞ்சம் த்திரிலிங்....கலவையாக வந்துள்ள படம்

1947 காலகட்டத்தில் முண்டாசுப்பட்டி கிராமத்தில் ஒரு வெள்ளைக்காரர் புகைப்படம் எடுத்த கிராமத்துமக்கள் சிலர் மர்ம நோயால் இறந்துவிட அந்தக் கிராமமக்கள் புகைப்படம் எடுத்தால் இறந்துபோவோம் என்று நினைக்கும் மூடநம்பிக்கையில் வாழ்கிறார்கள் என்றும் 

அங்கே வானிலிருந்து விழுந்த ஒரு எரிகல்லை அந்தக் கிராமத்தை காக்கவந்த வானமுனி கடவுளாக வணங்குகிறார்கள் என்றும் 

அந்த எரிகல்லில் விலைமதிப்பற்ற கனிமங்கள் இருப்பதாக அந்த ஆங்கிலேய வெள்ளைக்காரர் குறிப்பு எழுதிவைத்துள்ளார் என்றும் முன்கதையாக தொடங்கும் படம்............

1980 காலகட்டத்திற்கு செல்கிறது

 சத்தியமங்கலத்தில் ஹாலிவுட் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ள கோபி (விஷ்ணு விஷால்) அருகிலுள்ள முண்டாசுப்பட்டி கிராமத்தில் இறந்து போன  ஊர் தலைவரின் அப்பாவை புகைப்படம் எடுக்க போகிறார்..


அங்கே அவர் காதலிக்கும் ஊர் தலைவர் மகள் கலைவாணி (நந்திதா) யை காண்கிறார்  அம்மணியும் காதலிக்க....ஆனால் கலைவாணியோ அவளது முறைமாமனுக்கு நிச்சயிக்கப்பட.....இன்னும் அவர்கள் காதலுக்கு குறுக்கே  ஊர் மக்கள் மூடநம்பிக்கை சாமி சம்பிரதாயங்கள் மல்லுகட்டி நிற்க........

இதற்க்கிடையில்  அந்தக் கனிம  எரிகல்லை தேடி வந்த வெள்ளைக்காரரின் மகன்  பக்கத்து ஊர் ஜமீன் (ஆனந்தராஜ்) யிடம் அந்தக்  கடவுள் வானமுனி எரிகல்லை  எடுத்துதர கேட்டு விலை பேச..........

கலைவாணியின் கல்யாணத்தை தடுத்து நிறுத்த  வானமுனி எரிகல்லை கோபி எடுத்து ஒழித்து வைக்கிறான் கலைவாணியின் கல்யாணமும் நின்று போகிறது  ஆனால் அந்த எரிகலும் உண்மையில் காணாமல் போய்விடுகிறது 

காணாமல் போன எரிகல்லை கோபி கண்டுபிடித்தானா? கோபி-கலைவாணி  காதல் என்ன ஆனது? என்பதை திரையில் காணுங்கள்..........


டாஸ்மாக் அருவெறுப்பு,ஆபாசம் எதுவும் இல்லாமல் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படம்காட்டி இருக்கிறார் இயக்குனர் ராம்குமார் 

படம்முழுக்க  ஆண்கள் அனைவரும் பெரிய மீசையுடனும் தலையில் முண்டாசு கட்டியபடியும் காட்டி....மூட நம்பிக்கையின் ரூபங்களாக சொல்வது...அய்யோ பாவம் முண்டாசுக் கட்டிய பாரதி இன்று இருந்தால் இயக்குனருக்கு அடிதான் விழும்

முதல்பாதியில் முன்கதைக்கே நிறைய நேரம் எடுத்துக் கொண்டதையும்  காமெடி கள்ளக்காதல் என்று தடுமாறுவதையும் குறைத்துக்கொண்டால் படம் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும்

விஷ்ணு-நந்திதா காதல் காட்சிகளில் நளினமாக நடித்துள்ளனர் கிராமத்து வெட்கம் நந்திதா முகத்தில் மிளிர........முனிஷ்காந்த் கதாப்பாத்திரம்  காமெடியும் அறுவையும் கலந்தது....போலி குறிசொல்லும் சாமியாடி கதையின் திருப்பமாக... ஆனந்தராஜ் கொஞ்ச நேரமே காமெடி வில்லனாக......கோபியின் உதவியாளராக வரும் காளி வெங்கட்டின் காமெடி சிரிக்க வைக்கும்.... மற்றபடி தேவையற்ற கதாப்பாத்திரங்கள் நிறைய 

இசையும் பாடல்களும்  ஒளிப்பதிவும் .பிரமாதம் என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும் மோசமில்லை

மொத்தத்தில்..........முண்டாசுப்பட்டி குடும்பத்துடன் ஒருமுறை பார்க்கலாம் அதன் வித்தியாசமான கதைக்களம்,நகைச்சுவைக்காக........

என் பார்வையில் முண்டாசுப்பட்டி.........பரவாயில்லை ரகம் மற்றபடி படம் பார்த்தவர்கள் இங்கே என்ன சொல்கிறார்கள் என்பதை.........




படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.......... 








இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1