வெட்டிக்கொண்டால்
வலிக்கும் சாவு
விஷம் குடித்தால்
துடிக்கும் சாவு
தொங்கினால்
நாக்குத்தள்ளி சாவு
இவை தற்கொலைச்சாவுகள்.
இவை உடனடிச்சாவுகள்.
ஆனால்
புகைபிடிப்பவர்கள்
மரணத்தை
தள்ளிப்போடும்
மகத்துவம்
தெரிந்தவர்கள்.
புகைத்ததும்
இறந்துபோவோம்
என்று தெரிந்தால்
புகைப்பவர்கள்
எத்தனைபேர்?.
தற்கொலைச்சாவுகள்
பலவிதம்-அதில்
புகைபிடித்து சாவதும்
ஒருவிதம்
(தினம் இருபது
புகைப்பான்கள் புகைத்தால் இருபது வருடம்தான் வாழ்வு என்பது ஆய்வு அறிவிக்கை)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |