google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஆல் இன் ஆல் அழகுராஜா-சினிமா விமர்சனம்

Saturday, November 02, 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா-சினிமா விமர்சனம்


(தீர்ப்பு-கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா இந்தத் தீபாவளிக்கு காதல் காமடி  விருந்து படைக்கும் என்று நினைத்தால்.... அது படைத்ததோ ஊசிப்போன காதல் மசால் வடை...நமுத்துப்போன  காமெடி ஊத்தாப்பம்) 

Made with .freeonlinephotoeditor.com

ஆல் இன் ஆல் அழகுராஜா மிகப்பெரிய எதிர்பார்ப்பைஏற்படுத்த காரணம் அப்படத்தில் உள்ள முப்பெரும் கூட்டணி.......
1-இயக்குனர்  ராஜேஷ் + சந்தானம்......இதற்குமுன்பு சிவா மனசுல சக்தி-பாஸ் என்ற பாஸ்கரன்-ஒரு கல் ஒரு கண்ணாடி படங்கள் தந்த வெற்றி
2-கார்த்தி + சந்தானம்...சிறுத்தை-யில் இவர்கள் செய்த சிரிப்புச் சேட்டைகள்
3-கார்த்தி + காஜல்.......நான் மகான் அல்ல படத்தில் இவர்கள் படித்த காதல் கணக்கு...பிசிக்ஸ்....அப்புறம் கெமிஸ்ட்ரி
இந்த எதிர்பார்ப்புடன் சிரித்துக்கொண்டு திரையங்கத்திற்குள் நுழைந்தால் வெளியே வரும் போது அழுது வடிந்து வருவது உறுதி......அப்படியொரு ஆல் இன் ஆல் அழகு கதை 

Made with .freeonlinephotoeditor.com

லோக்கல் கேபிள் சானல் நடத்தும் ராஜா (கார்த்தி) வருமானமின்றி நொடிந்து போன நிலையில் தனது வேலையாளும் நண்பனுமான கல்யாணம் (சந்தானம்)உதவியுடன் அதை தூக்கி நிறுத்தி வெற்றிபெற்ற பிறகே திருமணம் செய்து கொள்வதாக அவரது அப்பா பிரபுவிடம் சபதம் செய்து உறுதியுடன் இருக்கின்றார்.....அனால் அய்யோ பாவம் ஒரு கல்யாண நிகழ்ச்சியில் பாடும் சித்ரா தேவிப்பிரியா (காஜல் அகர்வால்) பாடுவதை கேட்டு கிண்டல் செய்து....கடைசியில் காதல் வசப்படுகின்றார் அவரது  ஆல் இன் ஆல் அழகுராஜா சானல் வெற்றிபெற்றதா...? ராஜா-தேவிப்பிரியா காதல் நிறைவேறியதா...? என்பதை தெரிந்து கொல்ல....சாரி...கொள்ள திரையில் பாருங்கள் 

Made with .freeonlinephotoeditor.com

இந்த அழுதுவடியும் மெயின் கதைக்கு  ஏகப்பட்ட துணைக் கதைகள்.... இடைவேளைக்குப் பிறகு  ஒரு பெரிய பிளாஸ்-பேக் கதையாக 1980-90 காலக்கட்டத்தில் நடந்த  பிரபு கதை....அங்கேயும் இளவயது பிரபுவாக வரும் கார்த்தி-பிரபுவின் நண்பனாக சுருளிராஜன் தோற்றத்தில் வரும்  சந்தானம்   நாசரின்  திரையரங்கில் 1980 தீபாவளிக்கு யார் படத்தை திரையிடுவது...? என்று பந்தயம் கட்டி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பில்லா படத்திற்கு பதிலாக சந்தானத்தின் திட்டம் படி  சுதாகரின் தைப்பொங்கல் படத்தை திரையிட்டு பேரிழப்புக்கு ஆளாகின்றார்கள்...
 அப்படித்தான்  அஜித்தின் ஆரம்பம் படம் வந்த காலக்கட்டத்தில் இந்தத் தீபாவளிக்கு அழகுராஜா வந்து அவஸ்தைப் படுகின்றது.....படுத்துகின்றார்

Made with .freeonlinephotoeditor.com

 
இயக்குனர் ராஜேஷ் குடும்பப் படம் என்று நீட்டி முழக்கி திரைக்கதையில் வழுக்கி விழுந்துவிட்டார்........சந்தானத்தை கரீனா சோப்ரா என்று பெண்வேடம்  போடவைத்து சிரிப்பு காட்ட நினைக்கின்றார்....ஆனால் நமக்குத்தான் சிரிப்பு வரமாட்டேங்கிறது 

Made with .freeonlinephotoeditor.com

ஒரே திருப்தி இந்தப் படத்தில் சந்தானம் கொஞ்சம் அமுக்கி வாசித்து அவரது வேலையை சரியாக செய்துள்ளார்....கார்த்திக்கு இப்படம் தனுஷ்க்கு கிடைத்த நய்யாண்டி படம் போல்தான்....இப்படிப்பட்ட படங்களில் தொடர்ந்து நடித்தால் காஜல்...லை கூஜா தூக்க வைத்துவிடுவார்கள்...நடிகர் பிரபுவை பார்க்கும் போதெல்லாம் கல்யாண் ஜிவல்லேர்ஸ் விளம்பர படம் கண்ணுக்குள் வந்து வந்து போகுது.......M.S.பாஸ்கர் முடிந்த வரை சிரிக்க வைக்க முயலுகின்றார் அய்யோ...பாவம் பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும்...?   

Made with .freeonlinephotoeditor.com

S.தாமன் இசையில் உன்னைப் பார்த்த நேரம் பாடல் காதுக்கு இனிமை...
பாலசுப்ரமணியம் சக்தி சரவணன் ஒளிப்பதிவும் பாடல் காட்சிகளில் அருமை 

Made with .freeonlinephotoeditor.com

இதுபோன்று ஒரு படத்துக்கு விமர்சனம் எழுத குழப்பியதும்...எந்தக் காட்சி நம்மை சிரிப்பூட்டியது என்று ஆராச்சி செய்வதும்.....
அது சரி ராஜேஷ் அண்ணேன்...அந்தப் பிரியாணி பாய் குட்டியானையை எதற்கு நாடு ரோட்டில் தீவைத்து கொளுத்துகின்றார் கார்த்தி....? இப்படிவிடை தெரியாத கேள்விகள் நிறைய........

கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா இந்தத் தீபாவளிக்கு காதல் காமடி  விருந்து படைக்கும் என்று நினைத்தால்.... அது படைத்ததோ ஊசிப்போன காதல் மசால் வடை...நமுத்துப்போன  காமெடி ஊத்தாப்பம் 


உங்களுக்கு வீட்டில் தொலைக்காட்சி தொல்லை என்றால் இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா  சேனலைப் பார்த்துவாருங்கள்.....

இது சும்மா..........சிரிக்க 

Made with .freeonlinephotoeditor.com இவரும் ஆல் இன் ஆல் அழகுராஜா............ஹா...ஹா...இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1