google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஆரம்பம்-சினிமா விமர்சனம்

Thursday, October 31, 2013

ஆரம்பம்-சினிமா விமர்சனம்ஆரம்பம்-சினிமா விமர்சனம் 
(பரிதியின் பார்வையில் )


(தீர்ப்பு-அஜித்தின் ஆரம்பம் .... ஓர் அதிரடி த்திரிலர் திரைப்படத்திற்கு உள்ள பிரமாண்டம்,திகில் திருப்பங்கள்,டமால் டுமீல் சப்தங்கள்,கட்டுப்பாடற்ற கவர்ச்சி...இப்படி அத்தனைச் சினிமாத்தனங்களும்  அலர்சி உண்டாக்காமல் அளவாக கலந்து  தல ரசிகர்களுக்கு படைக்கப்பட்ட தீபாவளி பதார்த்தம். வேறு என்ன சொல்ல..?)

ajith

ஆரம்பம் படத்தின் கதை... காட்சிக்கு காட்சி திருப்பங்கள் உள்ள திகில் கதை.. எனவே திரையில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் திரைக்கதையில் எழுத்தாளர் சுபாவின் பங்கு முழுமையாக தெரிகிறது  ஒரு மர்மக்கதை நாவல் படிப்பது போன்று படத்தின் காட்சி அமைப்புகள் அத்தனையும் திகிலாக உள்ளது 

ajith


ஆரம்பம் படம் ஆரம்பிக்கும் போது மும்பை அதிகாலை 4.30 மணி  தல அஜித் படம் ஆரம்பத்தில் அறிமுகமாவதும்  அட்டகாசமான ஆரம்பம் 
முதலில் BMW காரில்லிருந்து இரண்டு கால்கள் இறங்க...அப்புறம் தல...யோட தலை ஸ்லொ மோஷனில் உயரவருகின்ற்றது....

ajith

மும்பை மகாலக்ஷ்மி பில்டிங்கில் பாம் வைத்துவிட்டு அதையும் போலீஸ்க்கு தகவல் சொல்லி ஸ்டைலாக டோக்..டாக்...என்று மொபைலையும்  குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு அவர் நடந்து வரும் அட்டகாசமான நடையில் ஆரம்பம் படம் ஆரம்பிக்கின்றது....... 

அடுத்து  பில்டிங் வெடித்து சிதறுகின்றது ஊரே சாரி...போலிஸ் மட்டும் திகிலாக தில்லாலங்கடி பரபரப்பில்  ஆனால் தலையோ அடடா...ஆரம்பமே என்று ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ... நம்மளையும் அடடா...என்ன ஆட்டம் என்று வாய்பிளக்க வைக்கின்றது...அடுத்து சென்னை விமான நிலையத்தில் ஆர்யாவை நயன்தாரா சந்திக்கும் போது அருகில் தல ஸ்டைலாக அமர்ந்திருக்கின்றார்..... நமக்கு எதுவும் புரியாத திகில்...ஆர்யாவின் பிளாஷ்பேக் காட்சியாக காலேஜில் படிக்கும் குண்டு ஆர்யா-நயன் கிண்டல்   அப்புறம் டாப்சி மீது என் பியுஸ் போச்சே...என்று குண்டு ஆர்யா காதல்...ஆக ஆர்யா ஒரு பெரிய சாப்ட்வேர் இன்ஜினியர் என்பதும் மும்பை சென்றதும் ஆர்யாவும் நயனும் கடத்தப்படுவதும் அங்கே தல...யின் அதிரடிப் பிரவேசம் மீண்டும் ஆரம்பம்....அஜித் நயனை முத்தமிடும் காட்சி காட்டியும் துப்பாக்கி முனையில் மிரட்டியும்  ஆர்யாவை அதட்டி....ஒரு சேனல் ஒளிபரப்பை கெடுக்கின்றார் 

அப்போது  அஜித்....கந்தன்சாவடியிலிருந்து கலிபோர்னியாவில் உள்ள  கம்பியுட்டரில் நுழையும் ஆர்யாவின் ஆற்றலைப் பாராட்டுகின்றார்..... அடடா...தல அஜித்தின் நயன்தாரா கடத்தல் ...சும்மாங்காட்டியும் நாடகம் 

இப்படி படம் முழுக்க அதிரடி திருப்பங்கள் , திகிலூட்டும் காட்சிகள் நிறைந்த தல அஜித்தின் ஆரம்பம்............இங்கே இதற்குமேலும் சொன்னால் உங்களுக்கு படம்பார்க்கும் திகில் குறைந்துவிடும் என்பதால் நண்பர்களே இத்துடன் நிறுத்திக்கொள்கின்றேன் 

தல-யோட ஆரம்பம் பாரு...
தல-யோடு தீபாவளி கொண்டாடு....... 

(இந்த விமர்சனத்தில் கதை சொல்லி உங்களை வதைக்காமல்... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல் ஆரம்பம் படத்தின் ஆரம்பத்தில் உள்ள சில  காட்சிகளை மட்டும் சொல்லி.......அய்யோ பாவம் ஒர் அதிரடி  திகில் த்திரிலர் படத்தை நீங்கள் பார்க்கும் போது சுவராசியம் இல்லாமல் ஆக்க விரும்பவில்லை..... )

freeonlinephotoeditor


 
மற்றபடி இசையில் ஆனந்த யாழை மீட்டிய யுவன் இதிலும் அட்டகாசமான திகில் ஊட்டுகின்றார் தல-யின் நடைக்கு என்று பிரத்யேக ஒலி படைக்கின்றார்...
பாடல்களில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு அருமை அடடா..ஆரம்பமே பாடலில் வண்ணங்களின் துள்ளல்....என் பியுஸ் போச்சே பாடலில் ஆர்யாவுக்கும் டாப்சிக்கும்  இறக்கை கட்டி பறக்க விட்டிருப்பதும் படம் ஆரம்பத்தில் மும்பையின் அதிகாலை காட்சியும் ...பில்டிங் வெடித்துச் சிதறும் காட்சியும் ...இப்படி ஒளிப்பதிவில் பல புதுமைகள் செய்துள்ளார்

ajith


அஜித்தின் ஆரம்பம் .... ஓர் அதிரடி த்திரிலர் திரைப்படத்திற்கு உள்ள பிரமாண்டம்,திகில் திருப்பங்கள்,டமால் டுமீல் சப்தங்கள்,கட்டுப்பாடற்ற கவர்ச்சி...இப்படி அத்தனைச் சினிமாத்தனங்களும்  அலர்சி உண்டாக்காமல் அளவாக கலந்து  தல ரசிகர்களுக்கு படைக்கப்பட்ட தீபாவளி பதார்த்தம். வேறு என்ன சொல்ல..? 

freeonlinephotoeditor

தல ரசிகர்களே  
இது உங்களுக்காக உங்கள் தல படைக்கும் திரை விருந்து 
காதல்...கவர்ச்சி...திகில்....அதிரடி...ஆட்டம்...பாட்டம்...என்று அறு சுவை படைக்கும் தல-யின்  தீபாவளி (அசைவ) விருந்து....


தல-யோட ஆரம்பம் பாரு...
தல-யோடு தீபாவளி கொண்டாடு.......    

இங்கே சிறப்பு வெளியீடு................

அஜித்தின் ஆரம்பமும் 
அதிரடி விமர்சனங்களும் 
link-http://parithimuthurasan.blogspot.in/2013/11/ajithinaarambam.html

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1