google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அஜித்தின் ஆரம்பம்-வெற்றிக்கு காரணம்?

Monday, November 11, 2013

அஜித்தின் ஆரம்பம்-வெற்றிக்கு காரணம்?


















அஜித்தின் ஆரம்பம் படம் திரைக்குவரும் முன்பே நமது கருத்துக்கணிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்தனர் நமது சினிமா பதிவுவாசிகள் அதே போன்று ஆரம்பமும் மிகப்பெரிய வெற்றிப்படம் ஆனது....... இந்த வெற்றிக்கு காரணம் யார்.....?


Made with .freeonlinephotoeditor.com

ஆரம்பம் படம் ஒப்பெனிங்......தொடக்கமே இதுவரை தமிழ் திரைப்படங்கள் எதுவும் செய்யாத அதிக திரைகளில்  காட்டப்பட்டு அதைத் தொடர்ந்து வந்த ஆல் இன் ஆல் அழகுராஜா,பாண்டிய நாடு,பாலிவுட் கிரீஸ்-3 போன்ற படங்களை அடித்து நொறுக்கி அட்டகாசமாக வசூலில் சாதனை செய்கின்றது...




  













வெளிநாடுகளின் வசூலையும் சேர்த்துக்கொண்டு ஆரம்பம் படத்தின் 11 நாட்கள் மொத்த வசூல் ரூ.108.62 கோடிக்கும் மேல் என்று நல்ல அறுவடை........
அப்படி என்ன ஆரம்பம் படத்தில் இருக்கு....? தல...ரசிகர்களால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமென்றால் இதற்கு முன்பு வந்த பில்லா 2 ஏன் இந்த வெற்றியைப் பெறவில்லை...? 


ajith


ஆரம்பம் படத்தில் அஜித் வித்தியாசமான வில்லன்-ஹீரோ என்று கலவையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில்தனக்கே உரிய ஸ்டைல் நடிப்புடன் கவர்ச்சிப் பதுமை நயன்தாரா இருந்தும் காதல்...டூயட்...என்று மாமுலான நடிப்பை உதறி நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டியதாலா....?






ஆரம்பம் படத்தில் காதல் நகைச்சுவை என்று இளமைத் துள்ளலாக ஆர்யா- டாப்சி என்று இன்னொரு கதையாக காட்டப்பட்ட காட்சிகளா...? அல்லது தல தலைக்கனம் கொள்ளாமல் இரண்டாம் தர நாயகனுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாலா...?

                                     thanks-YouTube-by Thala Ajith

ஆரம்பம் படம் ஆரம்பிக்கும் போதே வித்தியாசமாக நாயகரைக் காட்டி...பல திருப்பங்களுடனும் பிளாஸ்-பேக் உத்தியுடனும்  பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பாக கதை சொன்ன இயக்குனர் விஷ்ணுவர்த்தன் திறமையா...?



ஒலிப்பதிவில் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு உயிரோட்டம் தந்தது எனில்........
ஒளிப்பதிவில் ஓம் பிரகாஷ் வண்ணமயமாக பாடல் காட்சிகளையும் அதிவேக பைக்-படகு மற்றும் சண்டைக்  காட்சிகளையும்  சுட்ட முறை  படத்திற்கு திகிலும் தித்திப்பும்  ஊட்டியது......... 



இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம்.
உண்மையில் ஆரம்பம் படத்தின் வெற்றிக்கு காரணம் பல உண்டு.
சினிமா பதிவுலக நியாயன்மார்களே! உண்மையான காரணம் என்ன வென்று உங்களுக்கு தெரியும்

உங்கள் பார்வையில்...............

ஆரம்பம்-வெற்றிக்கு காரணம்? 



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........ஒருவர் எத்தனை காரணங்களுக்கும் வாக்களித்து தங்கள் மதிப்பீட்டை தெரிவிக்கலாம் முடிவு-13/11/2013




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1