(குறிப்பு-இந்தத் தீபாவளிக்கு வந்த படங்களில் அஜித்தின் ஆரம்பமும் விஷாலின் பாண்டிய நாடும் பட...பட..வென சரவெடி வெடிக்கின்றன இவைகளில் வெற்றியின் முன்னணியில் நிற்கப்போவது யாரு...? கருத்துக்கணிப்பு )
கதையைப் பொறுத்த மட்டில் ஆரம்பம் படமும் பாண்டிய நாடு படமும் பழிக்குப் பழி வாங்கும் கதையை வேறுபட்ட கோணங்களில் சொல்கின்றன இரண்டுமே இன்று தேசத்தில் புரையோடி கிடக்கின்ற ஊழல் அரசியலிசம்-குண்டாஸ் அரசியலிசம் பற்றிய உணர்வுப் பூர்வமான பிரச்சனைகளை படம் காட்டுகின்றன
ஆரம்பம் படத்தில் தன் நண்பன் சாவுக்கு காரணமான புல்லட்-புருப் ஊழல் செய்யும் அரசியல்வாதியை பழிவாங்கும் பாம்-ஸ்குவார்ட் அதிகாரி அஜித் தேசப்பற்றுள்ளவராக அரசியல்வாதிகள் ஊழல் செய்து சுவீஸ் வங்கியில் பதுக்கிய பணங்களை ஆர்யா உதவியுடன் இந்திய அரசுக்கு கொண்டு சேர்க்கின்றார்
பாண்டிய நாடு படத்தில் ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் விஷால் நேர்மையான கனிம வளத்துறை அதிகாரியான தனது அண்ணனைக் கொலை செய்த அரசியல் செல்வாக்கு மிக்க மிகப் பெரிய கட்டப்பஞ்சயத்து சாம்ராஜ்யத்தின் அதிபதியான கல் குவாரி முறைகேடுகள் செய்யும் ஒரு தாதாவை தனி ஆளாக நின்று பழிவாங்கி அரசியல் குண்டாஸ் வன்முறைக் கலாச்சாரத்தை அழிக்கின்றார்
ஆரம்பம் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் கொண்ட இன்றைய திரையுலகின் முன்னணி நாயகர் தல அஜித்குமார் என்ற எதிர்பார்ப்பும் இப்படத்தில் அவர் அவரது இமேஜ் பார்க்காது வில்லன் போன்ற அதீத செயல்கள் செய்பவராகவும் ஆர்யா போன்ற இரண்டாம் தர நடிகர்களை முன்னிலைப் படுத்தி பெருந்தன்மையாகவும் ரொமாண்டிக் காட்சிகளை தவிர்த்து யதார்த்தமாகவும் இயல்பான தனது வித்தியாசமான நடிப்பாலும் வெற்றிப்பட வரிசையில் வந்தது
பாண்டிய நாடு- நடிகர் விஷாலின் நடிப்பு என்பதைவிட இயக்குனர் சுசீந்திரனின் எழுத்தும் இயக்கமும்.........மதுரையில் நடந்த சமீபத்திய கல் குவாரி முறைகேடுகள் மற்றும் அங்கே அவ்வப்போது தொடரும் அரசியல் கொலைகள் போன்றவைகளை நேரடியாகக் காட்டி.அதே நேரத்தில் அவருக்கே உள்ள சிறப்பான திரைக்கதை வடிவத்தால் படத்தை சிறப்பாக்கி வெற்றி நடை போடச் செய்கின்றார்
பாண்டிய நாடு படம் விஷாலின் FOLLOW-UP காட்சிகள்..அதிகபட்சம் திரையரங்கம்...கோயில்கள்...கிட்டங்கிகள்...என்று மக்கள் மத்தியில் தொடர்ந்து உச்சக்கட்ட காட்சியும் சாதரணமாக ஊர் ஒதுக்குப்புறம் என்று நமக்கு பழக்கமான அதே நேரம் நம்மை உணர்வுப்பூர்வமாக நம்முள் ஒரு தாக்கம் செய்கின்றது...
ஆரம்பம் படத்தின் உச்சக்கட்டம் காட்சி துபாய் வங்கி...அஜித்தின் பைக் விரைவு வேகக்காட்சி...படகில் தப்பிக்கும் காட்சி... திராஸ் மலைப்பகுதியில் நடக்கும் சண்டை....கடைசியில் ஆர்யா-டாப்சி ஹனிமூன் செல்லும் வெளிநாட்டிலும் ஆரம்பம்-2 க்கு அடிக்கல் நாட்டி இப்படி பல பிரமாண்டம் காட்டுவதில்வேறுபடுகின்றது.
என் பார்வையில் ஆரம்பமும் பாண்டிய நாடும் பழிவாங்கும் கதை போன்று படம் காட்டினாலும் அவைகளின் கதைக்களங்கள் வேறுபடுகின்றன இரண்டு படங்களின் உச்சக்கட்ட காட்சிகள் நம்மை நாற்காலியின் விளிம்புக்கு வரச்செய்தாலும்....
இன்னும் சில நாட்களில் அவைகளில் யார் முன்னணியில் வருகின்றார்கள் என்பது தெரிந்துவிடும்
ஆயினும் நமது பதிவுலக நியாயன்மார்களே! நீங்கள் எந்த நடிகர் சார்புமின்றி உண்மை நிலையை இந்த சினிமா உலக்குக்கு தெரியப்படுத்துங்கள்.........
உங்கள் பார்வையில்.............
அஜித்தின் ஆரம்பம்-
விஷாலின் பாண்டியநாடு-யார் முன்னணி......?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.......முடிவு-6/11/2013
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |