google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தத்தி (கதைக் கவிதை)

Thursday, December 06, 2012

தத்தி (கதைக் கவிதை)




சிறு வயதிலிருந்தே
அவனுக்கு வெளிஉலகம்
பழக்கமில்லை....
அவன் பெற்றோர் அவனை
வீட்டுக்குள் வைத்தே வளர்த்தனர்
அவனும் ஆனான் தத்தியாக....

அவன் தந்தையார் மரணத்திற்குப் பிறகு
அவர் செய்துவந்த வாணிபத் தொழிலை
அவன் செய்ய வேண்டிய நிர்பந்தம்
தன்னால் முடியுமா? என்றப் பயத்தில்    
அவனால் சரிவர நடத்த முடியவில்லை.
தோல்வியைத் தழுவிய அவன்
பரதேசிபோல் அலைந்தான்...

ஒரு வழிப்போக்கன் போல
எங்கே போகிறோம்..? என்று தெரியாமல்
அவன் போய்க் கொண்டிருந்த பாதையில்...    

ஒரு காலில் மட்டும்
சிறு கயிற்றால் கட்டப்பட்ட
ஒரு மிகப் பெரிய யானை
அடக்கம் ஒடுக்கமாக
அமைதியாக நிற்பதைக் கண்டான்.

அந்த யானைப்பாகனிடம்
வினாவினான்.....
“இந்தப் பலமிக்க யானை
ஒரு சிறு கயிற்றை
அறுத்துச் செல்லாமல்
அடிமையாய் கிடக்கிறதே...
அது எப்படி..?

அதற்கோ
அந்த யானைப்பாகன்....

“இந்த யானை குட்டியாக இருந்தப்போதே
இப்படி ஒரு சிறு கயிற்றில்தான்
கட்டிவைத்தோம் அன்று
அந்தக் கயிற்றை அறுத்துச் செல்லும் சக்தி
அப்போது இந்தக் குட்டியானைக்கு இல்லை
பலமுறை அது முயன்று பார்த்துவிட்டு
அமைதியாக அடங்கிவிட்டது
இன்று அது வளர்ச்சியான யானை
இன்று அது பலமிக்க யானை
இன்று அதற்கு உண்டு
அந்தச் சிறு கயிற்றை அறுத்திடும் சக்தி...
ஆனாலும் அது முயற்சிப்பதில்லை...
அடிமையாய் அடங்கிகிடக்கிறது

அந்த யானைப்பாகனின் வார்த்தைகள்
அந்த வலிப்போக்கனுக்கு
அவனுக்குள் இருக்கும் சக்தியை
அவனை உணரச் செய்தது.

புத்துணர்வுடன் வீடு நோக்கினான்
புதிய தெம்புடன் நடை போட்டான்
புதுத் தொழில் தொடங்கும் நோக்குடன்...
அதைச் சிறப்புடன் நடத்தும்
சிந்தனை நேக்குடன்...

தத்தியாக இருந்தவன்
சக்தியாக மாறிவிட்டான்....

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.....( குறள் 611)

 
நன்றி-கலைஞர் உரை:
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
thanks-http://www.thirukkural.com
**********************************************************


              Thanks-YouTube-Uploaded by


 **********************************************************
*************************************************************

இன்றைய நண்பர் தளம்.....
நன்றி-அறிவியல்
link- http://arinjar.blogspot.in/






 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1