google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: November 2013

Saturday, November 30, 2013

விடியும் முன்-சினிமா விமர்சனம்


இருண்ட காமெடியாலும் வரண்ட பேண்டஸியாலும் வீழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை புது யுகத்துக்கு அழைத்துச் செல்லும் அறிமுக  இயக்குனர் பாலாஜி கே குமாரின்  வித்தியாசமான முயற்சி.....   சமுகத்தில் வெளியே தெரிந்தும் தெரியாமலும் உள்ள பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை பற்றிய விழிப்புணர்வு திரைப்படம் 

http://www.tvlankaonline.net/gallery/plog-content/thumbs/miscellaneous/vidiyum-munn-movie-stills/large/6561-vidiyum-munn-movie-stills-33.jpg

விபச்சார தொழில் செய்யும் ரேகா (பூஜா) ஒரு 12-வயது பெண் குழந்தை நந்தினி (மாளவிகா மணிகுட்டன்) யுடன் ரயிலில் தப்பிக்கும் காட்சியுடன் துவங்கும் படம்....அவளை விரட்டும் நான்கு  அதி பயங்கர மனித மிருகங்களிடமிருந்து ரேகா நந்தினியை காப்பாற்றினாளா....?   எதற்காக இந்த தீவிர விரட்டல்...? என்பதை ஒரு நாள் இரவில் நடக்கும் நிகழ்வுகளாக விருவிருப்பான காட்சிகளாலும் குறைந்த கதாப்பத்திரங்களாலும் திறமையான  திரைக்கதையாலும் திகிலுடன்  சொல்கிறது.......விடியும் முன் 

http://dailyindiamail.com/NewsImages/dailyindiamail%20pooja.jpg

பிரிட்டிஷ் திரிலர் திரைப்படமான லண்டன் டூ பிரைட்டன் ( London to Brighton) படத்தின் ரீமேக் என்றும் அதன் தாக்கம் என்றும்  சொல்லப்பட்டாலும் விடியும் முன் திரைப்படம் அதன் வேறுபட்ட காட்சிகளாலும் அதன் இயக்குனர் பாலாஜி கே குமாரின் தனித் திறமையாலும் பார்வையாளர்களின் இதயத்தில்  இனம்புரியாத ஒரு வித உணர்வு தாக்கத்தை நெடுநாளைக்கு விதைத்து செல்கின்றது. 

http://www.tvlankaonline.net/gallery/plog-content/thumbs/miscellaneous/vidiyum-munn-movie-stills/large/6531-vidiyum-munn-movie-stills-03.jpg

இப்படத்தின்  பெரும் பகுதி இரவில் நடந்தாலும் காட்சியமைப்புகள் சீராக உள்ளன ஓர் அறிமுக இயக்குனர் போல் இல்லாமல் அடுக்கடுக்கான காட்சிகளால்........அதிலும் ஒரு 12 வயது குழந்தையையும் அவளை காப்பாற்ற நினைக்கும் ஒரு  பெண்ணையும் சுற்றியே கதை சென்றாலும் கொஞ்சமும் நமக்கு வெறுப்பு ஊட்டாமல் விறுவிறுப்பு ஊட்டி.....

http://www.tvlankaonline.net/gallery/plog-content/thumbs/miscellaneous/vidiyum-munn-movie-stills/large/6566-vidiyum-munn-movie-stills-38.jpg

நான் கடவுள் படத்திற்குப் பிறகு காணாமல் போன பூஜா இப்படத்தில் விபச்சாரி ரேகாவாக  சிறந்த நடிப்பை பிரதிபலித்துள்ளார்.சிறுமி நந்தினியாக வரும் மாளவிகா நடிப்பில் வயதுக்கு மீறிய நல்ல முதிர்ச்சி தெரிகின்றது மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்,ஜான் விஜய்,வினோத் கிஷன்,அமரேந்திரன்...இப்படி அளவான கதாப்பாத்திரங்கள் அவர்களும் அளவாக கதைக்கு ஏற்ப நடித்து படத்திற்கு மெருகூட்டுகின்றனர்  

http://haihoi.com/Channels/cine_gallery/Vidiyum-Mun-Movie-Photostills-Gallery-20_S_700.jpg

பிட்சா,யுத்தம் செய்...படங்கள் போன்று விடியும் முன் திரைப்படமும் படத்தின் உச்ச கட்ட காட்சிவரை அடுக்கடுக்கான திகில் காட்சிகளின் கட்டமைப்பில் நகர்ந்து கடைசியில் படத்துடன் நம்மை முழுமையாக ஒன்றச் செய்கின்றது 


படத்தில் நகரும் காட்சிகள் நம்மை கதையின் போக்கையும் முடிவையும் தீர்மானிக்க முடியாத வண்ணம் இருக்கும் ஆனால் கிளைமாக்ஸ் இப்படித்தான் என்று.......பையில் பணத்துக்குப் பதிலாக கருநாகத்தையும் தாதா துரைசிங்கத்தின் கையையும் லங்கேஷ்-சிங்காரம் இருவரும் காணும் வரை..........ஆனாலும் எந்த தீர்மானத்துக்கும் வரமுடியாத கதாப்பாத்திரங்களுடன் பார்வையாளர்களையும் அங்கே-இங்கே என்று அலைபாய வைக்கும் இப்படியொரு திரைக்கதையையும் இயக்கத்தையும்  நம்ம தமிழ் திரைப்படம் இதுவரை கண்டதில்லை...வெல்டன் பாலாஜி குமார்  

                               thanks-YouTube-Saregama Tamil
திறமையான  திரைக்கதையும் அளவான உரையாடலும் படத்துக்கு சிறப்பு.... 
"இந்த உலகத்துல என்ன என்னமோ மாறிடுச்சு...ஆனா இந்தத் தொழிலும் மாமாப்பசங்களும் மட்டும் மாறவே இல்ல..."


"ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் ஒரு சாத்தான் இருக்கான்....அதை சிங்காரம் காட்டிட்டான் ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு கடவுள் இருக்கான் அதை நீ காட்டிட்ட...." 

http://www.tvlankaonline.net/gallery/plog-content/thumbs/miscellaneous/vidiyum-munn-movie-stills/large/6556-vidiyum-munn-movie-stills-28.jpg

எல்லாவற்றையும் விட எல்லா திகில் படங்களிலும் பிரதானமாக இருக்கும் பின்னணி இசையே இப்படத்திலும் கிரீஷ் கோபாலகிருஷ்ணன் மூலம் படத்திற்கு ஜீவனாக உள்ளது அதேப் போன்று சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு திகிலூட்டும் பிரமாண்டம் படைக்க....எடிட்டர் சத்யராஜ் கத்தரியை  சரியாக போட்டு.....படத்திற்கு விறுவிறுப்பு செய்துள்ளனர்

புதுமை விரும்பிகள் மட்டுமன்றி...இந்தச் சமுகத்தின் இருண்ட உலகில் காலங்காலமாக நடந்துவரும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையை  அறிந்துகொள்ளவும் அனைவரும் காணவேண்டிய காவியம்






விடியும் முன்-மெதுவாக நகர்ந்து மின்னல் வேகம் பிடிக்கும் இப்படம்  பார்வையாளர்களின் இதயத் துடிப்பை ஏகமாய் எகிரச்செய்யும் 


சிறப்பு வெளியீடு........








 
ஜில்லா Vs வீரம்-ஜெயிக்கப் போவது யாரு? கருத்துக்கணிப்பு முடிவு

2007-ஆம் ஆண்டு விஜயின் போக்கிரி-யும்  அஜித்தின் ஆழ்வார்-ரும் மோதிக்கொண்ட போது சினிமா உலகில் உண்டான  விளைவுகள் என்ன..? மீண்டும் விஜயின் ஜில்லாவும் அஜித்தின் வீரம்-மும் இந்த பொங்கலுக்கு மோதிக்கொண்டால் உண்டாகும் பக்க விளைவுகள் என்ன...? என்று ஓர் ய்....வுப் பதிவு. 
 http://parithimuthurasan.blogspot.in/2013/12/vijay-ajith-pollresult.html
 

Friday, November 29, 2013

நவீன சரஸ்வதி சபதம்-சினிமா விமர்சனம்














(தீர்ப்பு-  நிறைய சிரிக்க கொஞ்சம் சிந்திக்க என்றும் படம்காட்டும் பேண்டஸி காமெடி திரைப்படம்........நவீன சரஸ்வதி சபதம். குடி போதையில்  மறை கழண்டவர்களுக்கு சினிமா போதையில் மறை கழண்டவர்கள் காட்டும் கூத்து)

Made with .freeonlinephotoeditor.com

கதை.......நவீன காலத்து சிவலோகத்தில் சிவ பெருமான் நாரதரிடம் தன் திருவிளையாடலுக்கு நான்குமனிதப் பூச்சிகளை பிடித்துவரச் சொல்ல...நாரதர் பிடித்து வந்த  நான்கு குடிகார நண்பர்களை சிவபெருமான் தன் திருவிளையாடலாக அவர்களை பூலோகத்தில் உள்ள ஒர் ஆள்  அரவமில்லாத தீவில் ஆறுமாதங்களாக அடைத்துவைக்க......அவர்கள் குடியின் தீமையை உணர்ந்தார்களா...? என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கின்றார்கள் 

naveena

படம் துவங்கும்போதே பிரபஞ்சத்தைக் காட்டி நமக்கு இது பேண்டஸி படம் உங்க காதை கொஞ்சம் கொடுங்கள்......நிறைய பூ சுற்றப்போகிறோம் என்று எழுத்து-இயக்கம் K.சந்துரு கேட்டுக்கொள்வது போல் உள்ளது...



அப்படியே ஐபேடு உடன் விளையாடும் முருகன்,டிரெட்மிலில் உடலைக்குறைக்கும் பிள்ளையார்,தமிங்கலீஷ் பேசும் பராசக்தி(தேவதர்ஷனி),கிட்டாருடன் வரும் நாரதர்(மனோபாலா),கணனியில் படம்பார்க்கும் சிவபெருமான் என்று படு அமர்களமாக சிரிப்பு காட்டி.......... 


செக்ஸ் சித்தவைத்தியர் ஜெய்,சொர்ணக்காவிடம் புருசனாக மாட்டிக்கொண்ட VTV கணேஷ்,ஊழல் அரசியல்வாதி MLA-வின் மகன் சத்யன்,வெங்கட் பிரபுவிடம் சினிமா ஹீரோவாக  சான்ஸ் கேட்கும் நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்  ராஜ்குமார்.....இவர்களைப் பற்றி நாரதர் சிவபெருமானிடம் பெரிய குடிகாரர்களாக அறிமுகப் படுத்த.....

niveda


அதிலும்  ஜெய் இரண்டு வருடமாக காத்திருந்து காதலிக்கும் நிவேதா தாமஸ் கல்யாணத்திற்கு முன்பு பேச்சலர்ஸ் பார்டிக்காக பாங்காக் போய் ஒருவாரம் தண்ணியடித்து கொண்டாட செல்வதும்.......அங்கே அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு......



 அவர்கள் ஒரு தீவில் அகப்பட்டுக்கொள்கிறார்கள் அங்கே இருந்து எப்படி தப்பி வந்தார்கள் என்பதையும் அந்த ஆறு மாத இடைவெளியில் அவர்கள் வீட்டில் என்ன மாற்றங்கள் நடந்தது என்பதையும் சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கின்றார்கள் (சந்த்ரு அண்ணேன்...அதுக்காக சிவபெருமானே கார் டிரைவராக வருவதெல்லாம் ரொம்ப ஓவர் கற்பனை....அவ்வவ்

http://www.thehindu.com/multimedia/dynamic/01631/27cp_Naveena_saras_1631877f.jpg

படத்தின் இயக்குனர் சந்துருவை பாராட்டவேண்டும் இப்படி வித்தியாசமான கற்பனைக்கும் அப்படியே சிரிக்க வைத்து சிந்திக்க வைக்க நினைத்ததற்கும் படம் கதை சொன்ன விதம் அருமை 
எழுத்தில் நல்ல நையாண்டித்தனங்கள் மிளிர்கின்றது (எ.கா.)  மனோபாலா சினிமா விமர்சனம் (FIRST HALF IS SUPER..SECOND HALF IS MOKKAI  ) எழுதும் ட்விட்டர்களையும் முகநூல்வாசிகளையும்  கலாயிப்பது.இப்படி பேண்டஸி  படம் எடுப்பவர்கள் பார்வையாளர்களை தங்கள் பிடியிலிருந்து கொஞ்சமும் நகர விடமாட்டார்கள்.. மெஸ்மரிசம்...அந்த வேலையை சரியாக செய்துள்ளார்....கொஞ்சம் காதல் நிறைய காமெடி என்று.

jai

சிறப்பான கட்சிகள் படத்தில் நிறைய உள்ளன ஜெய் அலட்டல் இல்லாமல் நடித்துள்ளார் காதல் பாடல்களில் வழக்கம் போல் ஜொலிக்கிறார்.கணேஷ் நடிப்பு அதிகம்...அதிலும் சொர்ணக்கா பொண்டாட்டியிடம் அவர் படும் கஷ்டம்...அப்புறம் தீவில் மண்டையில் தேங்காய் அடிபட்டு சரஸ்வதி சபதம்சிவாஜி போல் நடிப்பது...நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்  விஜய் சேதுபதி போல் பேசுவது என்று இவருக்கு நடிக்க நிறைய...மற்றவர்களையும் குறை சொல்ல எதுவுமில்லை (வரிசையாக நிறைய பேண்டஸி படங்கள் பார்த்து எனக்கும் கொஞ்சம் நடுவுல நிறைய பக்கங்கள் காணாமல் போகின்றன......ஹி..ஹி)  

பிரேம் குமார் இசயில் பாடல்கள்........காத்திருந்தாய் அன்பே.... கேட்பதற்கு இனிமை என்றால்  கானா பாலாவின் வாழ்க்கை ஒரு....பாடல் காமெடி..நெஞ்சுக்குழி....சோகம் கலந்த பாடல் ஆயினும் காட்சியமைப்பு ஆனந்த் ஜீவாவின் கேமரா அருமை 

http://www.kevkeka.com/pic_galleries/2013/11/19//naveena-saraswathi-sabatham-movie-stills71384927138.jpg
 

இப்போதெல்லாம் சினிமாவுக்கு கதை கிடைக்காதவர்கள் எதையாவது படம் எடுத்துவிட்டு அதைப் பேண்டஸி என்று சொல்லிவிடுகின்றார்கள் ஆனாலும் விரசமான  இரட்டை அர்த்த வசனங்கள், குத்துப்பாட்டு குதியாட்டங்கள்,காதல் என்ற பெயரில் வாய் ஒட்டிக்கொள்ளும் முத்தங்கள்....



இப்படி எந்த சினிமா கன்றாவிகளும் இல்லாத இப்படத்தை குடும்பத்துடன் குழந்தைகளுடன் கண்டுகளிக்கலாம் (ஆனால் கெட்டதைக் காட்டி நல்லது சொல்லும் இந்தப் படத்தைப்  பார்த்து குழந்தைகள் யாரும் கெட்டுப் போகாமல் இருந்தால் சரிதான்....)

Thursday, November 28, 2013

அஜித்தின் ஆட்ட ஆரம்பம் (தெலுங்கு)


தமிழில் அஜித்தின் ஆரம்பம் படம் இதுவரை 28 நாட்கள் வசூலாக 200 கோடிக்கு மேல்......இன்னும் தொடர்கின்ற நிலையில் தெலுங்கில் ஆட்ட ஆரம்பம்   என்று டப்பிங் செய்து டோலிவுட்ட கலக்க வருகின்றது விரைவில்......



 


அஜித்தின் நண்பனாகவும் ACP சஞ்சய் ஆகவும்  நடித்துள்ள டோலிவுட் நடிகர் ரானா ஆரம்பம் படத்தில் நடித்துள்ளது இன்னும் ஆட்ட ஆரம்பம் டப்பிங் படத்திற்கு அங்கே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது 



இதற்கு முன்பு தனது பில்லா,மங்காத்தா படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்து டோலிவுட்டில் தனக்கு என்று ரசிகர்களை தக்கவைத்துள்ள தல....மீண்டும் ஆட்ட ஆரம்பம் படத்தின் மூலம்  மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கி உள்ளார் 


                                     thanks-YouTube-by MAATV

தெலுங்கிலும் பிரபலமான நடிகைகள் நயன்தாராவும் டாப்சியும் ஆரம்பம் படத்தில் நடித்திருப்பது ஆட்ட ஆரம்பம் படத்திற்கு மேலும் நல்ல எதிர்பார்ப்பு









இவர்கள் எல்லோரையும் விட  MAKE IT SIMPLE (மேக் இட் சிம்பிள் ) 
என்று சொல்லியே கோலிவுட்-டோலிவுட்-பாலிவுட் என்று மூன்று திரையுலகிலும் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கும் ......தல 



இன்றைய சிறப்பு வெளியீடு........











நவீன சரஸ்வதி சபதம்-சினிமா விமர்சனம்

Wednesday, November 27, 2013

2013 தமிழ் சினிமா வின் சிறந்த நடிகர் யார்? கருத்துக்கணிப்பு













கமல்,விஜய்,அஜித்,சூர்யா,தனுஷ்,அதர்வா....  இவர்களை மட்டுமே வைத்து 2013 தமிழ் சினிமா வின் சிறந்த நடிகர் யார்? என்று ஓர் ஆங்கில வலைதளத்தில் கருத்துக்கணிப்பு...அதற்கும் மாங்கு மாங்கென்று நம்ம ரசிகர்கள் வாக்களிப்பு....அட என்ன கொடுமையடா இவர்கள் மட்டும்தான் இங்கே நடிகர்களா.......?

எதிர்நீச்சல் சிவகார்த்திகேயன்,சூது கவ்வும் விஜய் சேதுபதி,6 மெழுகுவர்த்திகள் ஷாம்,ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மிஸ்கின்,தங்கமீன்கள் ராம்,பாண்டியநாடு விஷால்.....அட இவியிங்களாம் என்ன பாகவதர் காலத்து நடிகர்களா...? இல்லனா இவியிங்களுக்கு நடிக்கத் தெரியலையா....?

(அண்ணேன்...விட்டா அப்படியே...ஆல் இன் ஆல் அழகுராஜா கார்த்தி,இரண்டாம் உலகம் ஆர்யா....இப்படி அடுக்கிக்கிட்டு போவிங்க போல...அட...விசயத்துக்கு வாங்க.......எந்த வலைத்தளத்திலும் இப்படி கருத்துக்கணிப்பு வச்சாலும்....எப்பவும் அஜித்தும் விஜயும்தான் மாறி மாறி முன்னனியில வருவாயிங்க பேசாம நம்ம சினிமா (தமிழ்) நாட்ட இவியிங்க இரண்டு பேருக்கிட்டையும் தலநாடு-இளைய தளபதிநாடு... என்று பிரிச்சுக்குடுத்திடலாம்....ஆங்..)

அந்த வலைதளத்தின் கருத்துகணிப்பில் கலந்துகொண்ட நம்ம நடிகர்களின் நடிப்பை கொஞ்சம் பார்ப்போமா...........?
1-அஜித் (ஆரம்பம்)

அஜித்தின் நடிப்பு ஆரம்பம் படத்தில் தல என்று அழைக்கப்படுவது போல் சாயம் பூசாமல் யதார்த்தமாக தலையைக் காட்டியும்  ஒரு சூப்பர் ஹீரோ போன்று அதிரடி சண்டைக்காட்சிகள்,அதிவிரைவு பைக் ஒட்டுதல், அலப்பறை படகு விரட்டல்....இப்படி பல சர்க்கஸ் வேலைகள் செய்து படம் காட்டினாலும் அவர் தனது  இமேஜ் பார்க்காமல் படத்தின் கதாபாத்திரம் அசோக்குமாராக நடித்துள்ளார் என்பதைத் தவிர படத்தின் பெரும் பகுதியை ஆர்யாவுக்கும் ரானாவுக்கும் கொடுத்துவிட்டு........பழைய படங்களில் பல்வேறு பரிமாணங்களை காட்டி ரசிகர்களை பரவசப்படுத்தும் தல...மிஸ்ஸிங்
2-கமல்ஹாசன் (விஸ்வரூபம்) 

விசுவநாதன் என்ற நளினமான கதக் ஆசிரியராக படம் காட்டப்பட்ட கமல் ஒருகட்டத்தில் விஸ்வரூபம் எடுத்து எதிரிகளை பந்தாடிவிட்டு அப்புறம் மிகப்பெரிய தீவிரவாதிகூட்டத்தில் இந்திய உளவு அதிகாரி காஷ்மீரியாக என்றும் படமுழுக்க இவரே நிறைந்திருந்தாலும் தசாவதாரம் படத்தில் பார்த்த இவரது நவரச நடிப்பு...பிரமாண்டம் காட்டிய விஸ்வரூபம் படத்தில் மிஸ்ஸிங் 
3-விஜய் (தலைவா)



ஆஸ்திரேலியாவில் நளினமான காதல் மன்னன் விஸ்வாவாக இருந்தவர்  போலிஸ் அதிகாரி என்று தெரியாமல் அமலாபாலுடன் ஆட்டம்போட்டு காதலில் விழுந்து மும்பைக்கு தந்தையை கொன்ற வர்களை சீவலபேரி பாண்டி மாதிரி அருவாளால் அம்புட்டுபேரையும் வெட்டி போதாக்குறைக்கு துப்பாக்கியால் சுட்டு.....ஏதோ ஒரு பில்டப்பில் நடிப்பில் சொதப்பல் தலைவா 
4-அதர்வா (பரதேசி)



கிராமத்து ராசாவாக சுதந்திரமாக சுற்றிக்கொண்டு அலைந்தவன் ஆங்கிலேய காலத்து தேயிலை தோட்டத்து அடிமையாக அய்யோ...நியாயன்மாரே என்று ஒப்பாரி வைத்து அதர்வா தன் நடிப்பைக் காட்டினாலும் பரதேசி படத்தில் நிறைய கதாப்பாத்திரங்களின் சிறப்பான நடிப்பாளும் காட்சிக்கு காட்சி பாலாவே கதாநாயகராக தெரிந்ததாலும் இவரிடம் அனுபவ ரீதியான நடிப்பு....மிஸ்ஸிங் 
5-தனுஷ் (மரியான்)



இப்படத்தில் இவருக்கு எந்த குறிப்பிட்ட கதாப்பாத்திரமும் நிலையாக இல்லாமல் இதுவும் பேண்டசி படம் போல் காட்சிகளில் பிரமாண்டத்தைக் காட்டி....மீனவர் மரியானைக்கூட கையில் குத்தீட்டி கொடுத்து யதார்த்தமில்லாத ஆதீத நடிப்பில்........... மரியான் மரித்தான் 
6-சூர்யா (சிங்கம்)
இந்திய போலிசின் கம்பீரம் நேர்மை என்பதின் குறீயீடாக வரும் துரைசிங்கம்........விருவிருப்பான கதையாலும் அதிரடி காட்சிகளாலும் சூர்யா தனது ஒரே விதமான விரைப்பான நடிப்பைக் காட்டி...அவரது உண்மையான நந்தா நடிப்பு மிஸ்ஸிங் 
 
அந்த மேற்படி வலைதளத்தின் கணிப்புப்படி
2013 தமிழ் சினிமா வின் சிறந்த நடிகர் யார்? வாக்கெடுப்பில்
கலந்துகொண்ட நடிகர்களும் அவர்கள் (26/11/2013) வரை வாங்கியுள்ள வாக்குகளும்............
அஜித்.......................... ஆரம்பம்..................4111
கமல்ஹாசன்............விஸ்வரூபம்............1989
விஜய்..........................தலைவா..................1695
அதர்வா......................பரதேசி......................878
தனுஷ்.........................மரியான்...................472
சூர்யா.........................சிங்கம் 2..................468



இப்படி வாக்குகள்  வாங்கிக்கொண்டிருக்கும் இந்த நடிகர்கள் யாரும் நடிக்கவில்லை..அவர்களது உண்மையான நடிப்பை பிரதிபலிக்கவில்லை என்பதே என் எண்ணம். இன்று நடிப்பில் முன்னணி நடிகர்களாக காட்டப்படும் இவர்களின் உண்மையான நடிப்பு இதுவல்ல இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இவர்கள் யாரும் சிறந்த நடிகர்கள் இல்லை  என்று இந்த தமிழ் சினிமாவின் பஞ்சாயத்து சார்பாக தீர்ப்பு வழங்கி......

(அண்ணேன்...அவியிங்க வணிகரீதியில் நடத்தப்படும்  வலைத்தளங்கள் அவியிங்க கருத்துப்படி நாம எந்த உண்மையான முடிவுக்கும் வரமுடியாது...நம்ம பிளாக்கர்கள்தான் உண்மையான நியாயன்மார்கள்
அதனால அவியிங்க என்ன சொல்லுராயிங்கனு நீங்க அதே கருத்துக்கணிப்பு வைத்து  முடிவு பண்ணுங்க....) 

அதுவும் சரிதான் நான் என்ன முடிவு சொல்வது.....வேண்டுமாயின் இங்கே அதே கருத்துக்கணிப்பை இரண்டு நாளைக்கு வைப்போம் நம்ம வலைப்பூ பதிவுலக நியாயன்மார்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்........எனது கருத்துக்கு உடன்படுபவர்களாக இருந்தால் யாருமில்லை என்று வாக்களிக்கட்டும் இல்லையேல் வழக்கம்போல்...தல- தளபதி ரசிகர்கள் சண்டை போடட்டும் 


2013 தமிழ் சினிமா வின் சிறந்த நடிகர் யார்? 

வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...முடிவு=29/11/2013

thanks-some source taken from entertainment.oneindia.in/specials/best-of-tamil-2013.html 

Tuesday, November 26, 2013

மீண்டும் ஏமாற்ற வரும் விஸ்வரூபம் 2....?

(குறிப்பு-இங்கே சில சினிமாச் செய்திகள்... 3-இவன் வேற மாதிரி-வெற்றியின் முன்னோட்டம்  2-யார் இந்த சன்னி லியோன்...? 1-மீண்டும் ஏமாற்ற வரும் விஸ்வரூபம் 2....?
1-மீண்டும் ஏமாற்ற வரும் விஸ்வரூபம் 2....?    


மரியான்,இரண்டாம் உலகம்...படங்களுக்குப் பிறகு இப்போதெல்லாம் உலகத்தரத்தில் படம் காட்டுகின்றேன் என்று யாராவது சொன்னால் வயிறு கலங்குது அண்ணேன்...அப்படித்தான் உலகநாயகரும் அன்று உலகத்தரத்தில் ஆரோ 3 D ஒலிவடிவம் என்று விஸ்வரூபம் படம் காட்டி....... 
Vishwaroopam With AURO 3D HD
                             thanks-YouTube-by seventhstarcompany·
சென்னையில் உள்ள மிகப்பெரிய 7 நட்சத்திர கோல்மால் தியேட்டரில் விஸ்வரூபம் பார்க்க போனால்.....QUBE ஒலியை அனுபவியுங்கள் என்று காதுல கதம்ப மாலை சுத்திவுட்டுப் புட்டாயிங்க...அப்புறம் விசாரிச்சா அட சென்னையில் கூட எங்கேயோ ஒன்னுரெண்டு திரையரங்கில்தான் அந்த வசதியிருக்காம்... அவ்வவ்...அட போங்கப்பு ஆரோ 3 D க்கு நான் ஆஸ்திரேலியாவுக்கும் அமெரிக்காவுக்குமா படம் பார்க்க போகமுடியும்...? 


                                           thanks-YouTube-by-barcoTV

இப்போது மீண்டும் வரும் விஸ்வரூபம் 2 படமும் உயர்த்தப்பட்ட (UPGRADED) ஆரோ 3 D தொழில் நுட்பத்தின் முழு முப்பரிமான இயற்கை ஒலி பரவல் ஆரோ 3 D  11.1  பேர்கோ ( Auro 11.1 Barco)   அடுத்த தலைமுறை ஆடியோ வடிவமாம் அதுவும் எல்லோரும் எல்லா திரையரங்கங்களிலும் கேட்டு ரசிக்க முடியாதாம்...அதுக்குன்னு பிரத்தியேக வசதி வேணுமாம் 


                                     thanks-YouTube-by Kesav Dass
கிப்ரான் இசையில் உலகநாயகரின் விஸ்வரூபம் 2 உலகத்தரமான இந்த ஆடியோ அனைத்து ரசிகர்களையும் ஈ....ர்ர்ர்ரர்க்குமாம்... ஈர்க்குமோ..?  ஈயடிக்குமோ...? உங்களுக்கு விஸ்வரூபம் 2 படத்தை பேர்கோ ஒலிவடிவத்தில்  பார்க்க  வேண்டுமெனில்....  
DreamWorks' Rise of the Guardians coming soon in Barco Auro 11.1 


                                    thanks-YouTube-by-barcoTV


இதே தொழில் நுட்பத்தை மரியானிலும் வந்துச்சுங்கிராயிங்க அப்பமும் எனக்கு இதே ஆப்பு அசைச்ச குரங்கு கதைதான்...  அதனால எந்தத் திரையரங்கில்  இப்படி நிறைய சவுண்ட் பெட்டிகள் தொங்கப் போட்டுயிருக்கிராயிங்கனு நல்லா விசாரிச்சு பார்த்துக் கிட்டு போங்க அப்பு......அப்புறம்  உலகநாயகர் ஏமாத்திப்புட்டாருனு யாரும் பஞ்சயத்தக் கூட்டி பிராது கொடுக்கக் கூடாது........... ஆமாம் இப்பவே சொல்லிப்புட்டேன்   
2-யார் இந்த சன்னி லியோன்...?

நீலப்படமோ...பச்சைப் படமோ உரித்த வாழைப்பழ நடிகையும் முன்னாள் அடல்ட் ஸ்டார்.......பிரபலமான இந்திய கனடிய நடிகையுமான சன்னி லியோன் இங்கே   வடகறி படத்தில் ஒரு குத்து போட...அட...பாட்டுக்குதாங்க குத்து ஆட்டம் போட வருதாம் 





அட...எத்தனையோ அம்மணிகள் சீனா தானா  டோய்...அப்படின்னு ஆட்டம் போட்டு விட்டு அப்படியே அம்போன்னு போயிகிட்டு இருக்கும்...அததவுட்டுபுட்டு நம்ம இ.ம.க.தலைவரு அம்மணிய கண்ணகி வாழ்ந்த தமிழ்நாட்டுல கால்வைக்க விடமாட்டோம்னு அடம்பிடிக்க...

                                    thanks-YouTube-by T-Series

இப்ப இதுவரை அம்மணிய பார்க்காத...கேள்விப்படாத அம்புட்டு மன்னாரு அண்ணன்மார்களும் யாருடா இந்த காம கிழத்தி...ச்சீ..கிளி சன்னி லியோன் என்று ஆவலுடன் ஆ...னு வடகறிக்கு  திறந்த  வாய மூடல.... அண்ணேன்... வடகறினா இப்படித்தான் இருக்கும் அது மசால் வடையில பண்ணுறது......ஆங்.....அண்ணேன்....வடகறி ஊசிப்போகாமல் இருந்தால் சரிதான்      

3-இவன் வேற மாதிரி-வெற்றியின் முன்னோட்டம்  
http://static.manoramaonline.com/ranked/online/MM/Malayalam/Movies/Other_Languages/3559194818_ivanvere.jpg

கும்கி விக்ரம் பிரபு நடிக்கும்  காதல் த்திரிலர் திரைப்படம்  
இவன் வேற மாதிரி டிச.13  அன்று திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது இப்படத்தின் இயக்குனர்   எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தின் மீது அதீத நம்பிக்கையில் கோலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பு 

                             thanks-Youtube-by UTV Motion Pictures

இப்படத்தின்   முன்னோட்டம் காணும் போது அதன் வெற்றியின் முன்னோட்டம் தெரிகிறது..........நடிகர்திலகத்தின் வாரிசுக்கு நல்ல திருப்பமாக அமைய வாழ்த்துவோம்  


UA-32876358-1