google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 2013 தமிழ் சினிமா வின் சிறந்த நடிகர் யார்? கருத்துக்கணிப்பு

Wednesday, November 27, 2013

2013 தமிழ் சினிமா வின் சிறந்த நடிகர் யார்? கருத்துக்கணிப்பு













கமல்,விஜய்,அஜித்,சூர்யா,தனுஷ்,அதர்வா....  இவர்களை மட்டுமே வைத்து 2013 தமிழ் சினிமா வின் சிறந்த நடிகர் யார்? என்று ஓர் ஆங்கில வலைதளத்தில் கருத்துக்கணிப்பு...அதற்கும் மாங்கு மாங்கென்று நம்ம ரசிகர்கள் வாக்களிப்பு....அட என்ன கொடுமையடா இவர்கள் மட்டும்தான் இங்கே நடிகர்களா.......?

எதிர்நீச்சல் சிவகார்த்திகேயன்,சூது கவ்வும் விஜய் சேதுபதி,6 மெழுகுவர்த்திகள் ஷாம்,ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மிஸ்கின்,தங்கமீன்கள் ராம்,பாண்டியநாடு விஷால்.....அட இவியிங்களாம் என்ன பாகவதர் காலத்து நடிகர்களா...? இல்லனா இவியிங்களுக்கு நடிக்கத் தெரியலையா....?

(அண்ணேன்...விட்டா அப்படியே...ஆல் இன் ஆல் அழகுராஜா கார்த்தி,இரண்டாம் உலகம் ஆர்யா....இப்படி அடுக்கிக்கிட்டு போவிங்க போல...அட...விசயத்துக்கு வாங்க.......எந்த வலைத்தளத்திலும் இப்படி கருத்துக்கணிப்பு வச்சாலும்....எப்பவும் அஜித்தும் விஜயும்தான் மாறி மாறி முன்னனியில வருவாயிங்க பேசாம நம்ம சினிமா (தமிழ்) நாட்ட இவியிங்க இரண்டு பேருக்கிட்டையும் தலநாடு-இளைய தளபதிநாடு... என்று பிரிச்சுக்குடுத்திடலாம்....ஆங்..)

அந்த வலைதளத்தின் கருத்துகணிப்பில் கலந்துகொண்ட நம்ம நடிகர்களின் நடிப்பை கொஞ்சம் பார்ப்போமா...........?
1-அஜித் (ஆரம்பம்)

அஜித்தின் நடிப்பு ஆரம்பம் படத்தில் தல என்று அழைக்கப்படுவது போல் சாயம் பூசாமல் யதார்த்தமாக தலையைக் காட்டியும்  ஒரு சூப்பர் ஹீரோ போன்று அதிரடி சண்டைக்காட்சிகள்,அதிவிரைவு பைக் ஒட்டுதல், அலப்பறை படகு விரட்டல்....இப்படி பல சர்க்கஸ் வேலைகள் செய்து படம் காட்டினாலும் அவர் தனது  இமேஜ் பார்க்காமல் படத்தின் கதாபாத்திரம் அசோக்குமாராக நடித்துள்ளார் என்பதைத் தவிர படத்தின் பெரும் பகுதியை ஆர்யாவுக்கும் ரானாவுக்கும் கொடுத்துவிட்டு........பழைய படங்களில் பல்வேறு பரிமாணங்களை காட்டி ரசிகர்களை பரவசப்படுத்தும் தல...மிஸ்ஸிங்
2-கமல்ஹாசன் (விஸ்வரூபம்) 

விசுவநாதன் என்ற நளினமான கதக் ஆசிரியராக படம் காட்டப்பட்ட கமல் ஒருகட்டத்தில் விஸ்வரூபம் எடுத்து எதிரிகளை பந்தாடிவிட்டு அப்புறம் மிகப்பெரிய தீவிரவாதிகூட்டத்தில் இந்திய உளவு அதிகாரி காஷ்மீரியாக என்றும் படமுழுக்க இவரே நிறைந்திருந்தாலும் தசாவதாரம் படத்தில் பார்த்த இவரது நவரச நடிப்பு...பிரமாண்டம் காட்டிய விஸ்வரூபம் படத்தில் மிஸ்ஸிங் 
3-விஜய் (தலைவா)



ஆஸ்திரேலியாவில் நளினமான காதல் மன்னன் விஸ்வாவாக இருந்தவர்  போலிஸ் அதிகாரி என்று தெரியாமல் அமலாபாலுடன் ஆட்டம்போட்டு காதலில் விழுந்து மும்பைக்கு தந்தையை கொன்ற வர்களை சீவலபேரி பாண்டி மாதிரி அருவாளால் அம்புட்டுபேரையும் வெட்டி போதாக்குறைக்கு துப்பாக்கியால் சுட்டு.....ஏதோ ஒரு பில்டப்பில் நடிப்பில் சொதப்பல் தலைவா 
4-அதர்வா (பரதேசி)



கிராமத்து ராசாவாக சுதந்திரமாக சுற்றிக்கொண்டு அலைந்தவன் ஆங்கிலேய காலத்து தேயிலை தோட்டத்து அடிமையாக அய்யோ...நியாயன்மாரே என்று ஒப்பாரி வைத்து அதர்வா தன் நடிப்பைக் காட்டினாலும் பரதேசி படத்தில் நிறைய கதாப்பாத்திரங்களின் சிறப்பான நடிப்பாளும் காட்சிக்கு காட்சி பாலாவே கதாநாயகராக தெரிந்ததாலும் இவரிடம் அனுபவ ரீதியான நடிப்பு....மிஸ்ஸிங் 
5-தனுஷ் (மரியான்)



இப்படத்தில் இவருக்கு எந்த குறிப்பிட்ட கதாப்பாத்திரமும் நிலையாக இல்லாமல் இதுவும் பேண்டசி படம் போல் காட்சிகளில் பிரமாண்டத்தைக் காட்டி....மீனவர் மரியானைக்கூட கையில் குத்தீட்டி கொடுத்து யதார்த்தமில்லாத ஆதீத நடிப்பில்........... மரியான் மரித்தான் 
6-சூர்யா (சிங்கம்)
இந்திய போலிசின் கம்பீரம் நேர்மை என்பதின் குறீயீடாக வரும் துரைசிங்கம்........விருவிருப்பான கதையாலும் அதிரடி காட்சிகளாலும் சூர்யா தனது ஒரே விதமான விரைப்பான நடிப்பைக் காட்டி...அவரது உண்மையான நந்தா நடிப்பு மிஸ்ஸிங் 
 
அந்த மேற்படி வலைதளத்தின் கணிப்புப்படி
2013 தமிழ் சினிமா வின் சிறந்த நடிகர் யார்? வாக்கெடுப்பில்
கலந்துகொண்ட நடிகர்களும் அவர்கள் (26/11/2013) வரை வாங்கியுள்ள வாக்குகளும்............
அஜித்.......................... ஆரம்பம்..................4111
கமல்ஹாசன்............விஸ்வரூபம்............1989
விஜய்..........................தலைவா..................1695
அதர்வா......................பரதேசி......................878
தனுஷ்.........................மரியான்...................472
சூர்யா.........................சிங்கம் 2..................468



இப்படி வாக்குகள்  வாங்கிக்கொண்டிருக்கும் இந்த நடிகர்கள் யாரும் நடிக்கவில்லை..அவர்களது உண்மையான நடிப்பை பிரதிபலிக்கவில்லை என்பதே என் எண்ணம். இன்று நடிப்பில் முன்னணி நடிகர்களாக காட்டப்படும் இவர்களின் உண்மையான நடிப்பு இதுவல்ல இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இவர்கள் யாரும் சிறந்த நடிகர்கள் இல்லை  என்று இந்த தமிழ் சினிமாவின் பஞ்சாயத்து சார்பாக தீர்ப்பு வழங்கி......

(அண்ணேன்...அவியிங்க வணிகரீதியில் நடத்தப்படும்  வலைத்தளங்கள் அவியிங்க கருத்துப்படி நாம எந்த உண்மையான முடிவுக்கும் வரமுடியாது...நம்ம பிளாக்கர்கள்தான் உண்மையான நியாயன்மார்கள்
அதனால அவியிங்க என்ன சொல்லுராயிங்கனு நீங்க அதே கருத்துக்கணிப்பு வைத்து  முடிவு பண்ணுங்க....) 

அதுவும் சரிதான் நான் என்ன முடிவு சொல்வது.....வேண்டுமாயின் இங்கே அதே கருத்துக்கணிப்பை இரண்டு நாளைக்கு வைப்போம் நம்ம வலைப்பூ பதிவுலக நியாயன்மார்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்........எனது கருத்துக்கு உடன்படுபவர்களாக இருந்தால் யாருமில்லை என்று வாக்களிக்கட்டும் இல்லையேல் வழக்கம்போல்...தல- தளபதி ரசிகர்கள் சண்டை போடட்டும் 


2013 தமிழ் சினிமா வின் சிறந்த நடிகர் யார்? 

வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...முடிவு=29/11/2013

thanks-some source taken from entertainment.oneindia.in/specials/best-of-tamil-2013.html 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1