முன்பாதி சென்டிமென்ட்,காதல் என்றும்.....பின்பாதி விறுவிறுப்பு, கலக்கல் காமெடி என்று எதிர்பாராத திருப்பமாகவும்.... ஒரே நாள் நிகழ்வாக காதல்-திரிலர்-காமெடியாக...என்னமோ நடக்குது
படத்தின் கதையாக.....
பேங்க் பணத்தை சட்டத்துக்கு புறம்பாக கள்ளத்தனமாக வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் ஒரு கூட்டத்தைப் பற்றிய படம்
தாதாவும் அரசியல்வாதியுமான பர்மா (ரகுமான்) தன் புது வேலையாள் விஜி (விஜய் வசந்த்)யிடம் 20 கோடி ரூபாயை கள்ளத்தனமாக பட்டுவாடா செய்ய அனுப்ப.... விஜயிடமிருந்து பணத்தை அபேஸ் செய்துவிடுகின்றது பர்மாவின் எதிரிக் (பிரபு) கூட்டம்
ஆனால் பணத்தை விஜிதான் எடுத்ததாக நினைத்த பர்மா.... விஜியின் காதலி மதுவை (மஹிமா) யை கடத்திச் செல்கின்றான்
விஜி தன் நண்பர்களுடன் சேர்ந்து பணத்தையும் தன் காதலியையும் எப்படி மீட்கின்றான்...? என்பதை காமெடி திருப்பத்துடன் திரிலிங்காக சொல்கின்றார் இயக்குனர்
இயக்குனர் ராஜபாண்டி........விஜய் வசந்த் மயக்க நிலையில் ஆஸ்பத்திரியில் கிடப்பதும் ரகுமான் அவரிடம் பணம் பற்றி கேட்பதுமாக எதிர்பார்ப்புடன் படம் துவங்குகின்றது நாலு மாத பிளாஷ்பேக் காட்சியாக விஜியின் அம்மா (சரண்யா) காதலி (மஹிமா) இவர்களைப்பற்றி கொஞ்சம் இழுவையை குறைத்திருக்கலாம் வசனம் ரசிக்கும் ரகம்........
"அய்யா...நாலு நாள் பொறுங்கயா.. தல..ய அடகு வச்சாவது உங்க பணத்த தந்துடுவேன்"
"யோவ்...எங்கிட்ட வாங்கின பணத்துக்கு எப்படி அஜித்த அடகு வைப்ப...?"
விஜய் வசந்த்....தன் முந்தைய மதில் மேல் பூனை படத்தைவிட நல்லாவே தேரியிருக்கின்றார் காமெடி-காதல்-சண்டைக்காட்சிகளில் மிளிர்கின்றார் மஹிமா.....கொஞ்சம் அழகு கொஞ்சம் நடிப்பு கவர்ச்சி மிஸ்ஸிங்
முன்பாதியில் ரகுமான்...பின் பாதியில் பிரபு என்று படத்திற்கு பக்கபலமாக இருக்கின்றார்கள் வக்கீல்-கம்-வில்லன் ஆலோசகராக நடித்துள்ள தம்பி ராமையா படத்தின் கலகலப்பு ஊட்டுகிறார் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல் ஆனால் இதில் ஒரு குத்து பாட்டு போட்டு நடித்துள்ளார்கள்... பேங் ஆபிசர்-கம்-வில்லியாக வரும் சுகன்யா என்னமோ சும்மா வந்து போகிறார்
பிரேம்ஜி அமரன் இசையில் என்னமோ இரண்டு பாடல்கள் மற்றும் சில இடங்களில் பின்னணி இசையும் பரவாயில்லை ரகம்...... வெங்கடேஷின் ஒளிப்பதிவு பாடல்காட்சிகளில் மட்டும் பளிச்...
ஆனாலும் பொழுது போகாதவர்களின் பொழுதைப் போக்க.....என்ன என்னமோ நடக்குது
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |