லூசுத்தனமான கற்பனைக் கதை, பைத்தியக்காரத்தனமான கதாபாத்திரங்கள் என்று பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் நோக்கம் ஒன்றே பிரதானமாக, இயக்குனர் பாலாஜி மோகனின் வித்தியாசமான படைப்பு....வாயை மூடி பேசவும்
படத்தின் கதை........பேசிப் பேசியே கூச்சலும் கும்மாளமுமாக வாழும் ஓர் ஊரில் உள்ளவர்களை திடிரென்று யாரும் பேசக்கூடாது என்றால் எப்படியிருக்கும்...? என்பதை சென்டிமென்ட் கலந்த காதலும் காமெடியுமாக சொல்வதே
பனிமலை ஊரில் அரவிந்த் (துல்கர் சல்மான்) என்ற சாதுர்த்தியமாக பேசி தன் பேச்சு திறமையால் வீடு வீடாக பொருளை விற்கும் சேல்ஸ் மேன்.....அவன் காதலிக்கும் அதிகம் பேச விரும்பாத டாக்டர் அஞ்சனா (நஸ்ரியா) தேவையற்ற கட்டுபாடுகள் விதிக்கும் அவளது வுட்பி பாய்பிரண்ட்
உளருவாய் சுகாதார அமைச்சர் சுந்தரலிங்கம் (பாண்டியராஜன்)
குடிகாரர்களை கிண்டல் செய்ததால் பொங்கியெழும் த.நா.கு.ச (தமிழ்நாடு குடிகார சங்கம்) தலைவர் ரவி (ரோபோ சங்கர்) அவரது சகாக்கள்
குடிகாரர்களை நக்கலடித்து நடித்த அலப்பறை நடிகர் நியூக்ளியர் ஸ்டார் பூமேஷ் (ஜான் விஜய்) அவரது ரசிகர்கள்இவர்களுக்குள் மோதல் நிறைந்த காமெடி கலாட்டாக்கள்
சென்டிமென்ட் டச்சாக....பிடிவாத நிலக்கிழார் ஆதிகேசவன் (வினு சக்ரவர்த்தி) அவரது குடும்பம் அஞ்சனாவின் சின்னம்மா வித்யா (மதுபாலா) வாயைத் திறந்தாலே ஏடாகூடமாக பேசும் அர்விந்தின் நண்பன் அவனது நர்ஸ் காதலி
இப்படி நிறைய ஏதேனும் ஒருவகையில் மறை கழண்ட நிறைய கதாப்பாத்திரங்கள் நிறைந்த மலைக்கிராமம் பனிமலையில் விசித்திரமான ஊமைக் காய்ச்சல் (DUMP FLU) பேசுவதால் மரணிக்கும் வைரஸ் நோய் பரவுகின்றது
அதனால் அரசாங்கம் அதற்குரிய மருந்தை கண்டுபிடிக்கும் வரை மக்களை பணிமலையை விட்டு வெளியேறவும் யாரும் யாருடனும் பேசவும் தடை விதிக்கின்றது
கடைசியில் ஊமைக்காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா...? அரவிந்த்-அஞ்சனா காதல் என்னவானது...? என்பதை இயக்குனர் அவரது புதுமையான பாணியில் சிரிக்க வைகின்றார்
நடிகர் மோகம்,படங்களுக்கு தடை செய்ய நினைக்கும் போலிக் கூட்டம், அரசியல் உள்குத்து ...இப்படி ஏகப்பட்ட நிகழ்வுகளை இடையிடையே இயக்குனர் பாலாஜி மோகன் நாசுக்காகவும் நையாண்டியாகவும் படம் காட்டுகின்றார் ஆனால் அளவுக்கு மீறிய கற்பனை சில நேரம் நமக்கு எரிச்சல் மூட்டுகின்றது
படத்தின் முன்பாதி ஒரே கூச்சலாக இருக்க பின் பாதியில் பத்து நிமிடமே பேசுகின்றார்கள் பிறகு அனைத்தும் சைகையே..இதுவே சிலருக்கு பிடிக்காமலும் போகலாம் படம் பார்க்கும் பார்வையாளர்களே பாத்திரங்கள் பேச வேண்டிய வசனத்தை திரையரங்கில் பேசி சிரிக்கின்றார்கள்
துல்கர் சல்மானின் வசன உச்சரிப்பும் உடல் மொழியும் பிரமாதப் படுத்துகின்றன நஸ்ரியாவின் சாந்தமான நடிப்பு அவரது முக அழகை விட பார்ப்பதற்கு அழகு ரோபோ சங்கர் யதார்த்தமான குடிகாரக் காமெடியில் அலப்பறை செய்கின்றார் பாண்டியராஜன் தனக்கே உரிய நக்கல் வழியும் காமெடியில் அசத்துகின்றார் ஜான் விஜய் கொஞ்ச நேரமே வந்தாலும் தூக்கலான சிரிப்பூட்டும் நடிப்பு
சீன் ரோல்டன் இசையில் போதும் இனி நீ வருந்தாதே...பாடலும் காதல் அறை ஒன்னு விழுந்துச்சு... பாடலும் இனிமை பின்னணி இசையை பக்கபலமாக வைத்தே படத்தின் பின்பகுதி இயக்கப்பட்டுள்ளது சௌந்தரராஜனின் ஒளிப்பதிவில் பனிமலை கற்பனை கிராமம் (மூனார் மலைப்பகுதிகள்) பாடல்காட்சிகள்... இந்த கோடையில் கண்ணுக்கு குளுகுளு..... இரண்டுமணி நேர ஜில்...ஜில்
வாயை மூடி பேசவும்-சில இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தாலும் குடும்பத்துடன் கண்டுகளிக்க தகுந்த மேம்போக்கான கதையுள்ள நகைச்சுவை திரைப்படம்
என் பார்வையில் படம் பரவாயில்லை ரகம்தான்
உங்கள் பார்வையில்...........
(நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால் அல்லது படம் பார்த்துவிட்டு தங்கள் மதிப்பீட்டை தெரியப்படுத்தவும்)
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........முடிவு- 5/4/2014
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....படத்தின் கதை........பேசிப் பேசியே கூச்சலும் கும்மாளமுமாக வாழும் ஓர் ஊரில் உள்ளவர்களை திடிரென்று யாரும் பேசக்கூடாது என்றால் எப்படியிருக்கும்...? என்பதை சென்டிமென்ட் கலந்த காதலும் காமெடியுமாக சொல்வதே
பனிமலை ஊரில் அரவிந்த் (துல்கர் சல்மான்) என்ற சாதுர்த்தியமாக பேசி தன் பேச்சு திறமையால் வீடு வீடாக பொருளை விற்கும் சேல்ஸ் மேன்.....அவன் காதலிக்கும் அதிகம் பேச விரும்பாத டாக்டர் அஞ்சனா (நஸ்ரியா) தேவையற்ற கட்டுபாடுகள் விதிக்கும் அவளது வுட்பி பாய்பிரண்ட்
உளருவாய் சுகாதார அமைச்சர் சுந்தரலிங்கம் (பாண்டியராஜன்)
குடிகாரர்களை கிண்டல் செய்ததால் பொங்கியெழும் த.நா.கு.ச (தமிழ்நாடு குடிகார சங்கம்) தலைவர் ரவி (ரோபோ சங்கர்) அவரது சகாக்கள்
குடிகாரர்களை நக்கலடித்து நடித்த அலப்பறை நடிகர் நியூக்ளியர் ஸ்டார் பூமேஷ் (ஜான் விஜய்) அவரது ரசிகர்கள்இவர்களுக்குள் மோதல் நிறைந்த காமெடி கலாட்டாக்கள்
சென்டிமென்ட் டச்சாக....பிடிவாத நிலக்கிழார் ஆதிகேசவன் (வினு சக்ரவர்த்தி) அவரது குடும்பம் அஞ்சனாவின் சின்னம்மா வித்யா (மதுபாலா) வாயைத் திறந்தாலே ஏடாகூடமாக பேசும் அர்விந்தின் நண்பன் அவனது நர்ஸ் காதலி
இப்படி நிறைய ஏதேனும் ஒருவகையில் மறை கழண்ட நிறைய கதாப்பாத்திரங்கள் நிறைந்த மலைக்கிராமம் பனிமலையில் விசித்திரமான ஊமைக் காய்ச்சல் (DUMP FLU) பேசுவதால் மரணிக்கும் வைரஸ் நோய் பரவுகின்றது
அதனால் அரசாங்கம் அதற்குரிய மருந்தை கண்டுபிடிக்கும் வரை மக்களை பணிமலையை விட்டு வெளியேறவும் யாரும் யாருடனும் பேசவும் தடை விதிக்கின்றது
கடைசியில் ஊமைக்காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா...? அரவிந்த்-அஞ்சனா காதல் என்னவானது...? என்பதை இயக்குனர் அவரது புதுமையான பாணியில் சிரிக்க வைகின்றார்
நடிகர் மோகம்,படங்களுக்கு தடை செய்ய நினைக்கும் போலிக் கூட்டம், அரசியல் உள்குத்து ...இப்படி ஏகப்பட்ட நிகழ்வுகளை இடையிடையே இயக்குனர் பாலாஜி மோகன் நாசுக்காகவும் நையாண்டியாகவும் படம் காட்டுகின்றார் ஆனால் அளவுக்கு மீறிய கற்பனை சில நேரம் நமக்கு எரிச்சல் மூட்டுகின்றது
படத்தின் முன்பாதி ஒரே கூச்சலாக இருக்க பின் பாதியில் பத்து நிமிடமே பேசுகின்றார்கள் பிறகு அனைத்தும் சைகையே..இதுவே சிலருக்கு பிடிக்காமலும் போகலாம் படம் பார்க்கும் பார்வையாளர்களே பாத்திரங்கள் பேச வேண்டிய வசனத்தை திரையரங்கில் பேசி சிரிக்கின்றார்கள்
துல்கர் சல்மானின் வசன உச்சரிப்பும் உடல் மொழியும் பிரமாதப் படுத்துகின்றன நஸ்ரியாவின் சாந்தமான நடிப்பு அவரது முக அழகை விட பார்ப்பதற்கு அழகு ரோபோ சங்கர் யதார்த்தமான குடிகாரக் காமெடியில் அலப்பறை செய்கின்றார் பாண்டியராஜன் தனக்கே உரிய நக்கல் வழியும் காமெடியில் அசத்துகின்றார் ஜான் விஜய் கொஞ்ச நேரமே வந்தாலும் தூக்கலான சிரிப்பூட்டும் நடிப்பு
சீன் ரோல்டன் இசையில் போதும் இனி நீ வருந்தாதே...பாடலும் காதல் அறை ஒன்னு விழுந்துச்சு... பாடலும் இனிமை பின்னணி இசையை பக்கபலமாக வைத்தே படத்தின் பின்பகுதி இயக்கப்பட்டுள்ளது சௌந்தரராஜனின் ஒளிப்பதிவில் பனிமலை கற்பனை கிராமம் (மூனார் மலைப்பகுதிகள்) பாடல்காட்சிகள்... இந்த கோடையில் கண்ணுக்கு குளுகுளு..... இரண்டுமணி நேர ஜில்...ஜில்
வாயை மூடி பேசவும்-சில இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தாலும் குடும்பத்துடன் கண்டுகளிக்க தகுந்த மேம்போக்கான கதையுள்ள நகைச்சுவை திரைப்படம்
என் பார்வையில் படம் பரவாயில்லை ரகம்தான்
உங்கள் பார்வையில்...........
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........முடிவு- 5/4/2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |