இப்பதிவு.... யாருடைய மனதையும் புண்படுத்தும் விதத்தில் எழுதப்படவில்லை (ஹை-கோர்ட்டே தெனாலிராமன் படத்திற்கு இப்படித்தான் தீர்ப்பு கொடுத்துள்ளது)
மோடியும் விஜயும் இன்று சந்திக்கும் வேளையில் அவர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் என்று ஒரு நகைச்சுவை கற்பனைப் பதிவு........
மோடி- வணக்கம்....விஜய்...சீ.....ச்சே...ஜீ
விஜய்-ஏக் துஜே கேலியே மோடிஜி.......
மோடி- விஜய்...ஜி நான் தமிழ்நாட்டுக்கு வரும்போதே தமிழ் கத்துக்கிட்டேன் நம்ம கேப்டன்..ஜி பேசுறத அவரு டிவியில கேட்டு...கேட்டு கத்துக்கிட்டேன் நீங்க தமிழே பெசுங்கஜி.....ஹி..ஹி...எனக்கு கொஞ்சம் கொஞ்சம் அல்ல நால்லாவே பிரியும்
விஜய்-(அடப்பாவி...அந்த ஆளு சும்மாவே உளருவாரு..இவரு என்னத்த கத்துகிட்டு என்னத்த கிளறப் போறாரோ...?) மோடிஜி... நீங்க என்னைத்தான் முதல்ல சந்திச்சிருக்கணும் அத வுட்டுப்புட்டு போயஸ் கார்டன் போனது தப்பு
எனக்குத்தான் தமிழ்நாட்டுல 99% செல்வாக்கு இருக்கு
மோடி- விஜய்ஜி...அங்க போனது ரஜினியோட டீ குடிக்கத்தான்...ஜி...அப்புறம் லதா அம்மையாரு நல்லா ரசம் வைப்பாங்கனு பேசிக்கிட்டாங்க ரெண்டு கிளாஸ் ஊத்திக்கிட்டு வந்தேன்....
விஜய்-வாழ்க்கை ஒரு வட்டம்....ஜி
அதுல ஜெயிக்கிறவன் தோப்பான்
தோக்கிறவன் ஜெயிப்பான்........ஜி
அத நீங்க மறந்திடக் கூடாது இது நான் திருமலையில பேசி பாக்ஸ் ஆபிஸ்ல பிச்சுகிட்டு ஓடிச்சு................
மோடி- (அடப்பாவி....இவர் என்ன சொல்லுறாரு....) ஆப் கி பார் மோடி சர்க்கார் ........அப்படின்னு சொல்லுங்க விஜய்ஜி....
விஜய்-ஆப் கி மோடிஜி............இதக் கேளுஜி.........
அந்த ஏரியா....இந்த ஏரியா இல்ல
ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லி......கில்லிஜி
இதப் பேசி கில்லி படத்தில வெற்றிய சொல்லி அடிச்சேன்...ஜி
மோடி- மோடி சர்க்காருக்கு இப்படி கில்லிப் பசங்கதான் வேனும்ஜி நீங்கதான் ஆதரவு பான்னனும்
விஜய்-ஆமாம்....நான் ஒருவாட்டி முடிவு பன்னிட்டேனா,என் பேச்ச நானே கேட்க மாட்டேன்.......ஹ்ஹி...அதனால மோடிஜி.......நீங்க பிரதமர்...நான் துணைப் பிரதமர்...னு நான் முடிவு பன்னிட்டேன்...நம்ம பேச்சு மட்டும்தான் சைலன்ட்டா இருக்கும் ஆனா அடி......சரவெடி அப்புறம் மோடிஜி......
காடுனா நான் சிங்கம்.....
கடல்னா நான் சுறா....
காத்துனா நான் சூறாவளி
மோடி- அய்யோ...அய்யயோ...இல.கனேசாரு இந்த தம்பிஜி...ரஜினிஜியைவிட ரொம்ப சூப்பரா பேசுது..... ஆப் கி பார் மோடி சர்க்கார் ..அதிலே இந்த தம்பிக்கு ஒரு சூப்பர்........பார்
விஜய்-ஆமாம்ஜி...சாமி முன்னாடிதான் நான் சாந்தமாப் பேசுவேன் சாக்கட முன்னாடி இல்லை....மோதுனா மன்னர்னு பார்க்கமாட்டேன் மண்ணாங் கட்டினும் பார்க்கமாட்டேன்...எனக்கு துணைப் பிரதமர் பதவி வேணும்
மோடி- விஜய்ஜி....அது ரஜினிஜிக்கு கொடுத்தாச்சு....உங்களுக்கு ஜனாதிபதி உங்க பழைய படங்களுக்கும் நீங்களே ஜனாதிபதி அவார்ட் கொடுத்துக்க வசதியாக இருக்கும்...சரி..விஜய்ஜி...போயிட்டு வாங்க
(அதற்குள் இல.கணேசன் அலறிக்கொண்டு ஓடி வருகின்றார்........மோடிஜி மோசம போயிட்டோம் ரஜினி-விஜய் இவிங்கள சந்திச்சதால.......மற்ற நடிகர்களின் ரசிகர்கள் எல்லோரும் ஏக கோபத்தில இருக்கிறாயிங்க... நாம என்ன ஆகப் போறோமோ தெரியல....கோவிந்தா... கோவிந்தா... பேசாம ஏழு மலையான மட்டும் சந்திச்சிருக்கலாம்...)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |