தமிழில் விஜயின் ஜில்லா படத்தை லொல்லு சொன்னவர்களுக்கு மூஞ்சியில் கரி பூசும் ஜில்லா தெலுங்கு உல்டா படம்தான் ரேஸ் குர்ரம்.....பந்தயக் குதிரை
தெலுங்கு மசாலா படங்கள் போல் வழக்கமாக கதை என்று எதுவுமில்லாமல் அல்லு அர்ஜுனின் பட்டையக் கிளப்பும் அதிரடிச் சண்டை, கவர்ச்சிச் சூட்டைக் கிளப்பும் ஸ்ருதி, பிரமானந்தத்தின் சரவெடி காமெடி......இவைகளின் கலவையாக பொழுது போகாதவர்களுக்கு பொழுது போக வைக்கும் படம்.... ரேஸ் குர்ரம்
எலியும் பூனையுமாக இருக்கும் அண்ணன் ஏ.சி.பி ராமு (ஷாம்) அவரது தமாஷ் ரவுடி தம்பி லக்கி என்ற லட்சுமணன் (அல்லு அர்ஜுன்) என்று துவங்கும் படம் ஒருநாள் லக்கி தன் அண்ணனின் போலிஸ் ஜீப்பை எடுத்துக்கொண்டு ஓட...
ஏ.சி.பி ராமு என்று நினைத்து அரசியல்வாதி சிவா ரெட்டி (ரவி கிஷன்) யின் ஆட்களால் விபத்து உண்டாக்க.....
தப்பித்துக்கொண்ட லக்கி அதிரடியாக சிவா ரெட்டியை அடித்து நொறுக்குகிறார் அவரும் பதிலுக்கு மந்திரியாகி லக்கி குடும்பத்துக்கு தொல்லைதர...........
விடுவாரா நம்ம லக்கி ஹீரோ...?
லக்கி...... உடனே ஹோம் மினிஸ்டரைப் பிடித்து அதிரடிப்படை சிறப்பு போலிஸ் அதிகாரியாகிவிடுகின்றார் (பாவம் விஜய் ஜில்லாவில் கஷ்டப்பட்டு பரிச்சை எழுதிதான் போலிஸ் அதிகாரி ஆவார்...)
லக்கி....துணைக்கு வரும் கில் பில் பாண்டே (பிரமானந்தம்) என்று ஒரு காமெடி பீஸ் சிறப்பு அதிகாரியுடன் சேர்ந்து சிவா ரெட்டியின் பினாமிகளை சுனாமியாக தாக்கி ஜெயிக்கின்றார்
அவ்வப்போது படம் நொண்டியடிக்கும் போது இயக்குனர் சுரேந்தர் ரெட்டிகொஞ்சம் காமெடி அல்லது உலக நாயகி ஸ்ருதியின் கிளுகிளுப்பு கவர்ச்சியைக் காட்டி படத்தை ஓட வைக்கின்றார்
அல்லு அர்ஜுன் அறிமுக காட்சியே..........ஒரு பள்ளி சிறுவனை ஒரே வீச்சில் பஸ் கூரை மீது ஏற்றுவது அப்புறம் பார்த்தாலே வண்டிகள் பறந்து சிதறி விழுவது என்று படம் முழுக்க அமர்க்களம்
இதற்கு பக்கபலமாக இருப்பது தமனின்அதிரடி பின்னணி இசையும் கிறங்கடிக்கும் பாடல்களும் மற்றும் மனோஜ் பரமஹம்சாவின் காமிராவில் அவை படமாக்கப்பட்ட விதமும்தான்
படம் வெளிவரும் முன்பு இருந்த ஸ்ருதியின் கவர்ச்சி போஸ்டர் பரபரப்பு அதுதான்.........மல்லாக்க கிடக்கும் அல்லு அர்ஜுன் மீது ஸ்ருதி குதிரை போன்று ஜம்மென்று ஆசனம் போட்டு அமர்ந்திருப்பது.....படத்தில் அம்மணியைப் பார்த்தால் பயமாக இருக்கின்றது யாரப்பா...அந்த மேக்கப் மேனை மாத்துங்கப்பா..........
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |