google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வாழ்க்கையை திண்ணும் வலைதளங்கள்

Sunday, April 22, 2012

வாழ்க்கையை திண்ணும் வலைதளங்கள்



விஷப்பூச்சிகள்
காட்டில் மட்டுமல்ல
இங்கேயும் இருக்குகின்றன
வஷக்கிருமிகள்
சாக்கடையில் மட்டுமல்ல
இங்கேயும் இருக்குகின்றன

புத்தகங்களில்
புதைந்து கிடக்கின்றன
உயிரோடு.............
இணையதளங்களில்
அரிதாரம் பூசிக்கொண்டு
ஆடுகின்றன அழகோடு...  

கவிதைகளாக
கட்டுரைகளாக
கருத்துக்களாக
.........................

அவருக்கோ வயது
அருபதுக்குமேல் 
அறியாமல் நுழைந்துவிட்டேன்
அவரது வலைதளத்தில்
அப்படியே ஆடிப்போனேன்
அத்தனை அழகிகளும்
அவரது வலைதளத்தில்
அத்தனை நடிகைகளும்
அவரது கவிதைகளில் 
அன்றைய நடிகை எலிசபெத் முதல்       
இன்றைய நடிகை ஹன்ஷிகா வரை

விரச வார்த்தைகளால் 
பரவிக்கிடந்தது
எழுத்து விபச்சாரம் 




அவர்மேல் தவறில்லை
அவர் தளத்தில் நுழைந்தது தவறு  

விஷப்பூச்சிகள்
காட்டில் மட்டுமல்ல
இங்கேயும் இருக்குகின்றன
வஷக்கிருமிகள்
சாக்கடையில் மட்டுமல்ல
இங்கேயும் இருக்குகின்றன

வாசிப்போர்களே!
வாசிப்பவைகளில்
வடிகட்டவில்லை என்றால்
வலைதளங்கள்கூட   
வாழ்க்கையை தின்றுவிடும்.  
****************************
காணொளி-வாரான் வாரான் பூச்சாண்டி 



Thanks-YouTube-Uploaded by on Jan 19, 2008
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1