google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: எங்கே மனித இனம்?

Friday, June 22, 2012

எங்கே மனித இனம்?


பார்க்க அழகாக தெரியும்
வரிக்குதிரையானாலும்
பாய்ந்து செல்லும்
பந்தய குதிரையானாலும்
எல்லாம் ஒரே இனமே
அதுவே கழுதை இனமே

கடவுளிடம் பேசுவோர்
கடவுள் இனம் என்றே
கயமை செய்கிறார்கள்
இல்லையோ இவர்கள்
இங்கே மனிதயினம்?

வரியேய்பு செய்து
வங்கிகளில் பதுக்கி
வாழ்வோரேல்லாம்
பணக்கார இனமாம்
இல்லையோ இவர்கள்
இங்கே மனிதயினம்?

வாக்குபிச்சை வேண்டியவர்கள்  
ஆட்சிக்கு வந்துவிட்டால்
மாயாவிகளாய் மாறிவிடும் 
அவர்கள் எந்த இனமோ?
அது தெரியவில்லையே
அவர்களுக்கு வாக்களித்த
மக்களெல்லாம் நொந்தயினம்
அதுமட்டும் உண்மையே!

இன்னும் இருக்குது
இனங்கள் நிறைய
இவர்களெல்லாம் இங்கே
இல்லையோ மனிதயினம்? 
****************************
போனஸ் காணொளி...."வந்தநாள் முதல்..."    


Thanks-YouTube-Uploaded by IniyavanInTube on Sep 2, 2011

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1