google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நான் ஈ-திரைப்படம் போல

Wednesday, July 18, 2012

நான் ஈ-திரைப்படம் போல



பெரிய மீன்களை
துண்டுபோட்டு 
சின்ன மீன்களை
கூறு போட்டு
மொய்த்த ஈ கூட்டத்தை
விரட்டி அடித்து
விற்றுக்கொண்டிருந்தாள் 
கூவிக்கூவி மீன்காரி 
அருகில் இரண்டு பூனைகள்
ஆவலோடு காத்திருக்க.....

தலை வேறு கால்கள் வேறு
தனித்தனியாக....
தோலுரித்த ஆடு
தொங்கிக்கொண்டிருக்க
கண்டம்போடுவதில்
கவனமாக இருந்தார்
கரிக்கடைக்காரர்
அங்கும் ஒரு ஈ கூட்டம்
கடை எதிரில் நாய்க்கூட்டம்
எலும்பு எதுவும் விழுமா என்று

இன்னொருபக்கம்
கத்தரிக்காய் வெண்டைக்காய்
காய்ந்துபோன வெங்காயம்
புடலங்காய் பாகக்காய்
அத்தனை காய்களுடனும்
அழுகிப்போன காய்களும்   
அழகாய் ஒளிந்திருந்தன
அங்கேயில்லை     
நாயும் பூனையும்
ஆனால் இருந்தது
புழுவும் பூச்சியும் ஈயோடு..  

வாங்கவில்லை எதையும் 
வந்துவிட்டேன் வீட்டுக்கு
நமச்சல் எடுத்தது
நெஞ்சுக்குள்.............

சுகாதாரத்தை சீர்கெடுக்க  
ஈக்கள் எல்லாம் ஈட்டிகளோடு
கடைவீதியில் அலைகின்றன   
“நான் ஈ திரைப்படம் போல...

ஏழை நடுத்தர மக்களிடம்
வாக்குகளை வாங்கி...
ஆட்சிக்கு வந்ததும்
ஆட்சியாளர்கள் போடுவது
அவர்களுக்கு வாய்க்கரிசி  

சுடுகாடுகள் எல்லாம்
சுத்தமாக இருக்கிறது
கடைவீதிகள் எல்லாம்
வியாதிகளை விற்கிறது 
****************************
காணொளி-அம்மா இங்கே வா வா....  

Thanks-YouTube-Uploaded by sigaramchannel on Jun 30, 2010


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1