google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மந்திரி வீட்டு கனகமணி கட்டில்

Saturday, September 15, 2012

மந்திரி வீட்டு கனகமணி கட்டில்



அருங்காட்சியகத்திலிருந்து
மந்திரி சுட்டுக்கிட்டு வந்ததோ?  
மகா உன்னதமான கட்டில் 
விக்கிரமாதித்தன் கதையில் வரும்
போஜராஜனுக்கு கிடைத்த
கனகமணி சிம்மாசனம் போல்
இதில் இரண்டு தங்கப் பதுமைகள்

அயர்ந்து வந்த மந்திரி
அதில் படுத்து கன்னயர்ந்தார்

தலைபக்கமிருந்த தங்கப்பதுமை
குபிரென்று சிரித்தது

ஏன்? என்று வினாவியது
கால்பக்கமிருந்த தங்கபதுமை

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் 
இந்த மந்திரி செய்தவைகளை
நினைத்தேன் சிரித்தேன்  

தன்னுடைய நல்ல குணங்களையும்
நல்லவன் ஒருபோதும் சொல்ல மாட்டான்.
மக்கள் பணத்தில் மக்களுக்கு
நூற்றில் ஓன்று தூற்றிவிட்டு
நல்லது செய்ததாக நாடெங்கும்
நாளுமே பறைசாற்றுவார்  இவர்.


விவாசாயிகள் யாரும்
கண்ணீர் சிந்தக்கூடாது என்று
நிலத்தை வாங்கி (பிடுங்கி)
வீட்டு நிலமாக்கிவிட்டார்

இவருக்கு உறுதியான கால்கள்
எங்கெல்லாம் விவசாய நிலமிருக்கோ
அங்கெல்லாம் நடந்தே போய்விடுவார்
பார்வையில் பட்டதையும் படாததையும்
பட்டா போடும் கண்கள்

கைகள் ரொம்ப நீளம்
இங்கிருந்தே சுவிஸ் வங்கியில்
பணம் போடுவார் எடுப்பார்

கைவிரல் நகங்கள் கூரானவை
மலையைக்கூட சுரண்டிவிடும்
பாறைகளை பிராண்டி
பாதாளம் தோண்டிவிடும்

இரண்டு நாக்குகள் இவருக்கு
ஒரு நாக்கு ஓன்று பேசும்
இன்னொரு நாக்கு
வேறொன்று பேசும்  

இடையில் பேசியது
இன்னொரு பதுமை
நீ சொல்வதைப்பார்த்தால்
அவர் அரக்ககுணங்கள்
அத்தனையும் உள்ள மனிதரோ?

அதற்குள் விழித்துவிட்டார் மந்திரி
அடுத்த நாளே உருக்கிவிட்டார்
கனகமணிக் கட்டிலையும்
இரண்டு தங்கப்பதுமைகளையும் 
*****************************************************
VIDEO BAR-பொறந்த குணம் போகப்போக மாறுது


Thanks-YouTube-Uploaded by kirubakararn soundararaj on Apr 11, 2011

 

Thanks-Soundcloud-Naan Anai Ittal Song ( MGR Hits By TMS ). by San Music

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1