google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மயக்கமா? கலக்கமா?

Saturday, October 20, 2012

மயக்கமா? கலக்கமா?



தவறுகளில் எப்போதும்
புதைந்திருக்கும்
ஒரு புனிதத் தன்மை
பகுத்தறிவு ஒன்றுதான்
சரி செய்ய பயன்படும்
இல்லையேல்
தரித்திரங்கள் சரித்திரமாகும்  
தந்திரங்கள் மந்திரமாகும்  

மத நம்பிக்கைகள்  
மனிதர்களை சீரழிக்கும்
செல்லரித்த சிந்தனைகள்

பழமை வியாக்கியானங்கள்   
சீழ் பிடித்த சமுதாயத்தின்
புரையோடிய ரணங்கள்

பழைய கோட்பாடுகள்  
புதிய எண்ணங்களை
புறக்கணிக்கிறது

ஆன்மீக எண்ணங்கள்
மதத்துக்கு ஒருவரை  
உயர்ந்தவராக
உலகளாவிய
நித்ய புருசராக
உருவாக்குகிறது  

களங்கப்பட்ட மனநிலையின்
கதிர்வீச்சு வெளிப்பாடு
சமுதாய நலன்களை
சல்லடையாக்குகிறது   

அறியாத வயதிலேயே
பழைய பஞ்சாங்கங்கள்
கற்றுத்தரப்படுகின்றன

உடைந்த வண்டியை
உருட்டிக்கொண்டுதான்
நடை பழகும் நிர்பந்தம்

அந்தக் கயமையின்
கொடிய மாயையிலிருந்து
விடுபட நினைக்கும் போது
ஆயுசும் முடிந்து விடுகிறது

இளைய தலைமுறை
புதிய சிந்தனைகளை 
காதல் செய்வதில்தான்
கடைபிடிக்கிறது  

அன்று ஆண்ட மன்னர்கள்
அறியாமையை வளர்த்து
மக்களை கெடுத்தார்கள்

இன்று ஆளும் அரசுகள்
இலவசங்களை கொடுத்து
மக்களை கெடுக்கிறார்கள்  

இன்று ஆளும் அரசுகள்
மதுக்கடைகள் திறந்து  
மக்களை கெடுக்கிறார்கள்  

மயக்கத்திலும் கலக்கத்திலும்
நாடும் நாட்டு மக்களும்  

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1