google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சினிமாவும் கண்களை இழந்த காதலனும்

Tuesday, November 13, 2012

சினிமாவும் கண்களை இழந்த காதலனும்



அழகான அவளுக்கு
பார்வை கிடையாது

உலகை வெறுத்தாள்
உலகில் உள்ள
அனைவரையும்
அவள் வெறுத்தாள்
அவளையும் சேர்த்து
ஆனால்
அவள் காதலனை மட்டும்
நேசித்தாள்

அவனும்
அவளை நேசித்தான்
உயிருக்கு உயிராக...

என்று அவளுக்கு  
பார்வை கிடைக்கிறதோ
அன்றுதான் அவனை
மனமுடிப்பேன்
என்றாள் அவள்.

அன்றொரு நாள்-
இரு விழிகள் கிடைத்து
பார்வை வந்தது அவளுக்கு.

அவளிடம் கேட்டான்
அவள் காதலன்

“அன்பே!
நான்தான் உன் காதலன்
இப்போதுதான் உனக்கு
பார்வை வந்ததே
என்னை நீ
மணந்து கொள்

அவனைப் பார்த்த
அவளும்
அதிர்ச்சி அடைந்தாள்

அவள் காதலன்
பார்வையற்றவனா..?
பதை பதைத்தாள்
அவனை மணந்து கொள்ள
மறுத்து விட்டாள்.

அழும் குரலுடன்
புலம்பிவிட்டு
அவனும் போனான்....

“அன்பே! என் கண்களை
கவனமாகப் பார்த்துக்கொள்!

இது
காலம் காலமாக
காதலின் அதீதத்தை
எடுத்துரைக்கும் கதை...

இப்படித்தான்
இன்றைய சமுதாய சீரழிவுக்கு
முதல் காரணமும்
மூலக் காரனமுமாக
சினிமா.... சினிமா.....
நடிகர் நடிகை மோகம்.

அரசியல் முதல்
அத்தனை துறைகளிலும்
அதன் கோரப் பற்கள்

பண்டிகை என்றாலே
பணத்தை இழந்து
படம் பார்த்துவிட்டு...

இன்றைய
இளைய தலைமுறை
கண்களை இழந்த
காதலன் போல்...  

மதுக்கடைகள்  
மனிதனைச் சீரழிக்கின்றன 
சினிமா கொட்டைகள் 
சமுதாயத்தை சீரழிக்கின்றன 
இவை  இரண்டும்தான் 
இன்று பண்டிகை கொண்டாடுகின்றன!


*************************************************************

வாழ்க்கையே இங்கொரு சினிமா தானடா..


                  Thanks-Youtube-Uploaded by stpublicid


************************************************************
இதையும் படிக்கலாமே...

மேற்கிந்திய தீவுகளில் தீபாவளி

நன்றி-philosophyprabhakaran



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1