இது செய்தியும் சிந்தனையும்!
செய்தி-
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த கடலை வியாபாரியான தொழிலதிபர் ராமலிங்கத்திடம் கைப்பற்றப்பட்ட ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பத்திரங்கள் போலியானவை என வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. ஆனால், ராமலிங்கமோ, அனைத்துப் பத்திரங்களும் ஒரிஜினல் என்றும் வருமான வரித்துறை தன்னை சிக்க வைக்க சூழ்ச்சி செய்வதாகவும் குற்றம்சாற்றியுள்ளார்.
சிந்தனை-
அய்யா
கடலை விற்ற
கடலைக்காரரே!
நீவீர்
விற்றக் கடலையை
ஆவி பறக்க அவித்து
ஆவலோடு தின்ன
உடைத்துப் பார்த்தால்..
உள்ளே இல்லையே
ஒரு கடலையும்
நல்ல கடலையாக...
ஜி..பூம்பா!
உமது வீட்டில் உள்ள
கடன் பாத்திரங்கள் எல்லாம்
போலியாகப் போகக் கடவ!
(அகராதியில்
குழப்பம் என்றால் என்ன?
ஆராய்ந்தப் பொது
அங்கே கண்டேன்...
அதன் பெயர்
வருமான வரித்துறையா...?)
.......பரிதி.முத்துராசன்
***************************************************************
இது சிரிக்க..............
நாய் வாலை நிமிர்த்தப்பார்க்கும் குரங்கு....?
*************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து.....?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |



