google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஹரிதாஸ்-ஒரு சிறப்பு(SPECIAL-FILM) படம்

Wednesday, February 27, 2013

ஹரிதாஸ்-ஒரு சிறப்பு(SPECIAL-FILM) படம்


ஹரிதாஸ்-
இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் வெள்ளித்திரையில் வரைந்த ஓவியம்  ஆட்டிஸ்ட்டிக் குழந்தையையும் அதன் கவனிப்பும் பராமரிப்பும் பற்றிய வணிகரீதியில் சொல்லப்பட்ட(விழிப்புணர்வு)திரைப்படம் 


ஆட்டிசம்(AUTISM-மதியிறுக்கம்-தனக்கென்று ஒரு வட்டத்தை அமைத்துக்கொண்டு வாழ்வது  ) பற்றிய சிந்தனையுடன் உலகத்தரத்தில் உண்மையான தமிழ்படம்...பிறவியிலேயே   ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட  தன் மகனை ஒரு தந்தை அவனுக்குள் ஒளிந்திருக்கும் திறமையைக் கண்டுணர்ந்து அவன் வழியிலேயே வெளியுலகுக்கு  அழைத்துவருவது கதை...இதைச் சினிமாவாக அதுவும் அரங்கத்தில் நமது சிந்தனையைச் சிதறவிடாமல்  கதையுடன் ஒன்றிப்போகச் செய்தது இயக்குனர் திறமை 


அதற்கு அவர் எடுத்துக்கொண்டது என்கவுண்டர் போலிஸ் அதிகாரி(கிஷோர்)-வில்லன் ஆதி(பிரதீப் ராவத்)-அமுதவல்லி ஆசிரியை(சினேகா)ஆகியோர்களின் கதை இவைகள் ஹரிதாஸ்  என்ற அழகிய ஓவியத்திற்கு   மெருகூட்டிய வர்ணங்கள் தெளிந்த நீரோடையாகச் செல்கிறது திரைக்கதை..தெளிவான வசனம்....வெற்றி அறுவடை தரும் பாசனம்  

 இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரம் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டதாக நடித்திருக்கும் ஹரிதாஸ் சிறுவன்(பிரிதிவிராஜ் தாஸ்) மற்றும் நடிகர் கிஷோருக்கு மீண்டும் நடிப்பு சவாலான கதாப்பாத்திரம். 
யூகி சேது சிறிது நேரம் வந்தாலும் அவருக்கே உரிய குத்தலான நடிப்பு வார்த்தைகளின் உச்சரிப்பு எல்லாமே சிறப்பு.
சூரியின் காமெடி கதாபாத்திரம் மற்றும் படத்தில் வரும் குத்துப்பாட்டு இவைகள்  படத்தின் சீரியஸ்தனத்தைச் சிதைக்கவில்லை படத்தின் இடைவேளை கதைக்கு இன்னும் எதிர்பார்ப்பை கூட்டுகிறது


படத்தின் இசை(Vijay Antony) பாடல்கள் அதிலும் சிவதாஸ் தாயார் இறந்துபோகும் காட்சியில் ஒரு கிராமத்து பாடல் நெஞ்சைத்தொடுகிறது.வில்லன் ஆதியுடன் நடக்கும் கடைசி சண்டையிலும் அதற்கு ஏற்ப ஒலிவடிவம் அருமை 






  














இந்தத் திரை ஓவியத்திற்கு ஒளிவடிவம் ...கேமரா ...எந்திரன் ரத்தினவேலு ....கதையின் காட்சிகளுக்கு வெளிச்சமிடுவது  பாராட்டத்தக்கது.அதிலும் கடற்கரை குழந்தைகள் பாடல்காட்சி,குதிரைகள் ரேஸ்கோர்சில் ஓடும் காட்சி,இப்படி நிறைய காட்சிகள் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்கின்றன

படத்தில் அனைவரின் பங்களிப்பும் பாராட்டத்தக்கது தமிழ் திரைவானில் எப்போவாது இப்படிக் குறிஞ்சியும் மலர்கிறது.ஒரு கவிஞனால்தான் இப்படி உயிரோட்டமான திரைக்காவியம் படைக்கமுடியும் இயக்குனர் குமாரவேலனும் இப்படத்திற்கு பாடல்கள் எழுதிய கவிஞரே 

மேலோட்டமாகப் பார்த்தால் களிமண்.. (நிறைய படங்களில் பார்த்தது போல் நிறைய காட்சிகள் சிலநேரங்களில் மணிரத்தினத்தின் அஞ்சலி படம் கூட  நினைவுக்கு வரும்)ஆனால்  இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் கைகளில் அருமையான கலைச்சிற்பம்

அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய திரைப்படம்  படத்தில் ஹரிதாஸ்-ஒரு சிறப்பு(SPECIAL-CHILD) குழந்தை,ஹரிதாஸ் படமோ-ஒரு சிறப்பு(SPECIAL-FILM) திரைப்படம்
      
   ....................................................பரிதி.முத்துராசன் 

thanks-SoundCloud
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1