உங்கள் உள்ளத்தில்
ஒளிந்திருக்கும்.........
உங்கள் அரக்கர்கள் யார்?
எப்படி அவர்களை விரட்டுவது?
என்றாவது ஒருநாள்
எண்ணிப் பார்த்ததுண்டா...?
அவ்வப்போது அலைகளாய்
உங்கள் வாழ்க்கைப் பயணத்தை
திசை மாற்றும் அவைகளை
எப்படி அடித்து விரட்டுவது?
என்றாவது ஒருநாள்
எண்ணிப் பார்த்ததுண்டா...?
நம்மில் வளர்ந்த நற்பயிர்களை
நாம் அறுவடை செய்யும் முன்
அழிக்க வந்த களைகளை...
எப்படி அவைகளைக் களைவது?
என்றாவது ஒருநாள்
எண்ணிப் பார்த்ததுண்டா...?
பிறக்கும் போது மனிதனாய்
பிறந்த மனிதனே!
வளரும் போது ஏன் நீ
வாழ்க்கையைத் தொலைக்கிறாய்...?
உன் அனுமதியின்றி
உன் பெயரிலேயே
மதம் முத்திரை குத்துகிறதே!
இங்கே நீ பிறந்தது
இந்து கோயிலா...?
கிருத்துவ ஆலயமா...?
இஸ்லாமிய மசூதியா...?
என்றாவது ஒருநாள்
எண்ணிப் பார்த்ததுண்டா...?
வளரும் போது...ஒ..மனிதா!
உனக்கு அடையாளம்
மதச் சின்னங்கள்தானா...?
நெற்றியில் விபுதி....
கழுத்தில் சிலுவை...
தலையில் தொப்பி....
இவ்வுலகில் வந்தமைக்கு
இவைகள்தான் உன் நுழைவுச் சீட்டா?
இவைகள்தான் உன் அடையாளங்களா...?
...................................................பரிதி.முத்துராசன்
*******************************************************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |