google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பூசாரிகள் கடவுள் ஆகிவிட்டால்....

Friday, April 19, 2013

பூசாரிகள் கடவுள் ஆகிவிட்டால்....

http://infactcollaborative.com/wp-content/uploads/2011/12/Solar-system-facts-Solar-system-extension.jpg

குறள் தந்த கவிதை-5-

இவ்வுகைப் படைத்தவன்
இயற்கையைப் படைத்தவன் 
இவ்வுயிர்களைப் பிறப்பித்தவன்
எல்லாமே இறைவன் என்றால்.....
































உன்னையும் என்னையும்
உலகில் பிறக்கவைத்த
அன்னை தந்தையை 
என்னவென்று சொல்வது...?
அவர்களையும் பிறப்பித்த
தாத்தா பாட்டியை 
எப்படி அழைப்பது...?
அவர்களுக்கும் முன்னோடியாக 
மண்ணுக்குள் புதைந்தவர்களை 
பேய்கள் என்று சொல்லுவதா...?




செவ்வாய் என்பது 
நிறைய பேருக்கு 
வாரம்தோறும் 
வந்து போகும் நாள் 
அறிந்தவனுக்குக்  கிரகம்.
அறியாதவனுக்கு
பெண்அடிமைத் தோஷம் 
ஆருடகாரனுக்கு வேசம்
அங்கே கிரியாசிட்டி ரோவர்(curiosity) 
ஆய்வு செய்வது   
ஆண்மீகத்துக்கு துவேசம்

http://upload.wikimedia.org/wikipedia/commons/1/12/Rotating_earth_axial_tiles_to_orbit.gif


பூஜை செய்யாவிட்டால்
பூமி சுற்றுவதை விட்டு விடுமா...?
பிரார்த்தனை செய்யாவிட்டால்
பாதை மாறி ஓடிவிடுமா...?
தொழுகை செய்யாவிட்டால்
தொலைந்துதான் போகுமா...?

குடுகுடுப்பைக்காரன்
ஆருடம் சொல்பவன்
ஆசி வழங்குபவன்..
ஆண்டவன் வாக்கு என்று
அறியாமையை இறை(ப்ப)வன் 
அவன் வயிறுக்கு இறை(தேடுப)வன் 
அடுத்தவரை இறை(யாக்குப)வன்
அவனா இறைவன்...?
அல்லது இறைத்தூதுவன்...?

பூசாரிகள் எல்லாம்
கடவுள் ஆகிவிட்டால்....
யார்தான் இங்கே கடவுள்?

அன்பை இறை(ப்ப)வன்
அறிவை இறை(ப்ப)வன்
பண்பை இறை(ப்ப)வன்
இவ்வுலகில் எவனோ
இறைவனாவான் அவனே
அவன் அருகில் இருப்பவன்
கயமையால் காயப்படமாட்டான்
அறியாமையால்அல்லல் படமாட்டான்
வறுமையால் வாடமாட்டான்

......................பரிதி.முத்துராசன் 

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRYlGHLKE_BmFXBvtQ8XgiUIKWNNj-BbdUcmgd3PWbpbgbgf_5B  
கவிதை தந்த குறள்-5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1